பேரங்காடி

ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில் இருக்கும் ஒரு பேரங்காடியில் 30 வயதுகளில் உள்ள ஒரு பெண் தானியங்கிப் படியில் (travelator) ஏறிக்கொண்டிருந்தபோது, அதில் திடீரென பிளவு ஏற்பட்டதால், அவரது உடலின் கீழ் பாதி அதில் விழுந்தது.
தெங்காவின் முதல் அக்கம்பக்க நிலையமான ‘பிளான்டேஷன் பிளாசா’வில் 2024ன் இரண்டாம் காலாண்டின் இறுதியில் உணவு நிலையம் ஒன்றும் பேரங்காடி ஒன்றும் திறக்கப்படும்.
பேரங்காடி நிறுவனமான ஷெங் சியோங், 2024ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அதன் பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1% கழிவு வழங்கவுள்ளதாக அறிவித்தது.
வேலை கிடைக்காத விரக்தியில் பேரங்காடிகளில் சுமார் 500 பொருள்களை கிழித்துத் திறந்தார் இங் கெங் சூன் என்ற 51 வயதான சிங்கப்பூரர். அவரது குற்றத்துக்கு 22 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கைகளால் திண்பண்டங்களையும் , ஒரு சிறிய கத்தியைக் கொண்டு அரிசி பொட்டலங்களையும் அவர் கிழித்துள்ளார். அதனால் அப்பொருள்கள் பேரங்காடிகளில் விற்பனை செய்யமுடியாமல் போனது.
அங் மோ கியோ ஹப்பில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி, முதிய தம்பதியர் தங்கள் தனிநபர் நடமாட்டச் சாதனங்களை வேறு இடத்தில் நிறுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். அந்தச் சாதனங்கள் ஆபத்து விளைவிக்கும் விதத்தில் நிறுத்தப்பட்டிருந்ததே அதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.