தைவான்

தைப்பே: தைவானின் கிழக்கு மாவட்டமான ஹுவாலியன் பகுதியில் ஏப்ரல் 27ஆம் தேதி சனிக்கிழமை 6.1 ரிக்டர் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை நிலையம் தெரிவித்தது. அந்த நிலநடுக்கங்களால் உண்டான சேதங்கள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
தைப்பே: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சீனத் தலைநகர் பெய்ஜிங்கை விட்டுக் கிளம்பியதும் தைவான், சீனாவைப் பிரிக்கும் தைவான் நீரிணையின் நடுப்பகுதியைத் தாண்டி சீனா, ராணுவ நடவடிக்கைகளை மேற்கெண்டதாக தைவான் குற்றஞ்சாட்டியுள்ளது.
தைப்பே: தைவான் தலைநகர் தைப்பேயில் ஏப்ரல் 22ஆம் தேதி இரவிலிருந்து ஏப்ரல் 23ஆம் தேதி அதிகாலை வரை பல நிலநடுக்கச் சம்பவங்கள் ஏற்பட்டன.
தைப்பே: தைவானை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கி கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிறது. ஆனால், இந்த நிலநடுக்கத்தில் மாயமான சிங்கப்பூர் தம்பதியரான திரு சிம் ஹுவீ கோக், திருவாட்டி நியோ சியூ சூ ஆகியோர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தைப்பே: அண்மையில் தைவானை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. இதில் ஹுவாலியென் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.