சுற்றுப்பயணி

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் டெங்கியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சுற்றுலா நகரமான பாலித் தீவுக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் டெங்கி காய்ச்சலுக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு பாலி வட்டார அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
சாங்கி விமான நிலைய டிரான்சிட் பகுதியில் கிட்டத்தட்ட $200 பெறுமானமுள்ள ஒப்பனைப் பொருள்களையும் $800க்குமேல் மதிப்புடைய இடைவாரையும் திருடியதன் சந்தேகத்தின் பேரில் 38 வயது மாது ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சாங்கி விமான நிலையத்தில் ஆறு மணி நேரமாகத் தனது அடுத்த விமானப் பயணத்திற்காகக் காத்திருக்க வேண்டிய சூழலில், வெளிநாட்டவர் ஒருவர் சிங்கப்பூரின் தகவல் பலகைகளில் பயன்படுத்தப்படும் மொழி ‘சிங்கப்போரி’ என்று கூறும் டிக்டாக் காணொளி தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
சிங்கப்பூருக்குச் சுற்றுலா வந்த சீன நாட்டைச் சேர்ந்த 33 வயது லியூ சாங்ஜியன், சூதாட்டக் கடனை அடைப்பதற்காக சீனாவில் இருக்கும் தனது உறவினரிடம் தான் கடத்தபட்டதாகப் பொய்யுரைத்து S$5,630 பணம் பெற முயன்றதாக (மார்ச் 11) திங்கட்கிழமை குற்றம் சாட்டப்பட்டார்.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள வர்க்கலா கடற்கரைக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் சிலர், கடல் சீற்றம் காரணமாக கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.