எரிசக்தி

லண்டன்: கடந்த 2023ஆம் ஆண்டு உலகளவில் எரிசக்தி சார்ந்த நடவடிக்கைகளால் கரியமிலவாயு வெளியேற்றம் இதுவரை இல்லாத அளவு உயர்ந்ததாக அனைத்துலக எரிசக்தி ஆணையம் (ஐஇஏ) தெரிவித்துள்ளது.
நியூயார்க்: உலகம் முழுதும் ஏராளமான தரவு நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் அந்தத் தரவு நிலையங்களால் ஏற்படும் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தொழில்நுட்ப நிறுவனங்கள் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியைப் பயன்படுத்துவதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.
உலக வெப்பநிலை பெரிய அளவில் அதிகரிப்பதன் காரணமாக பல நாடுகள் மறுபயனீட்டு எரிசக்திக்கு மாறி வருகின்றன.
பசுமை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதற்குக் தேவையான தகவல்களை நிறுவனங்களுக்கு வழங்க தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ், சினோக்கோ எனர்ஜி எரிசக்தி நிறுவனம் இரண்டும் கூட்டு முயற்சியில் இறங்கியுள்ளன.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10.5 பில்லியன் வெள்ளி முதலீடு செய்யப்படும் என்று செம்ப்கார்ப் இண்டஸ்டிரிஸ் அறிவித்துள்ளது.