பசுமைச் சூழல் ஊக்குவிப்பு நடவடிக்கை: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்-சினோக்கோ எனர்ஜி கூட்டு முயற்சி

பசுமை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதற்குக் தேவையான தகவல்களை நிறுவனங்களுக்கு வழங்க தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ், சினோக்கோ எனர்ஜி எரிசக்தி நிறுவனம் இரண்டும் கூட்டு முயற்சியில் இறங்கியுள்ளன.

இரண்டும் இணைந்து இதன் தொடர்பான செய்திமடலை (நியூஸ்லெட்டர்) மாதந்தோறும் வெளியிடவுள்ளன. #TakeCharge என்ற அந்தச் செய்திமடல் சினோக்கோ எனர்ஜியுடன் இணைந்து செயல்படும் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

செய்திமடலைப் பெற விரும்பும் சிங்கப்பூர் உற்பத்தி சம்மேளனத்தின் உறுப்பு நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம். செய்தி மடலுக்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் பிரத்தியேக மின்னிலக்க செய்திகள் ஆறு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

சுற்றுச்சூழல், சமுதாய, ஆளுமை (இஎஸ்ஜி) ஆகிய அம்சங்களில் காணப்படும் போக்குகள் சம்பந்தப்பட்ட தகவல்களை அந்தச் செய்திமடல் கொண்டிருக்கும். பசுமை முயற்சிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி போன்ற தகவல்களையும் அது கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!