மணிக்கொருதரம் திருக்குறள் ஒலிக்கும் மணிக்கூண்டு

‘ஒன்றே முக்கால் அடி யிலே உலகம் தன்னைக் கவருமாம்’ என்று பெருமையாகக் கூறப்படும் திருக்குறளில் உலக மக்கள் அனைவருக்கும் தேவையான கருத்துகள் பொதிந்துள்ளன. இந்த திருக்குறளை மக்கள் எளிதாக மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் தினமும் ஒரு மணி நேரத்திற்கு மணியை ஒலிப்பதுடன் திருக்குறளையும்  வாசித்து வருகிறது புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள ஒரு மணிக்கூண்டு.

150 ஆண்டுகளுக்கு முற்பட்ட அந்தப் பகுதி சந்தையுடன் இந்த மணிக்கூண்டும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

 புதுப்பிக்கப்பட்ட மணிக்கூண்டில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரத்தைக் குறிக்கும் மணி அடித்து முடிந்ததும் ஒரு திருக்குறள் அதற்கான விளக்க உரையுடன் ஒலிக்கிறது. 

அதற்காக 1,330 திருக்குறளும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வரிசைப்படி ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறள் ஒலிபரப்பாகும். இந்த ஏற்பாடு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

புதுச்சேரி, முத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள பழமையான மணிக்கூண்டும் இந்த மணிக்கூண்டு அமைந்துள்ள  பூங்காவும் ஒரு முறையான பராமரிப் பின்றி பழுதாகி இருந்தன.

இந்த மணிக்கூண்டினை பழமை மாறாமல் புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர தொகுதி எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் நட வடிக்கை மேற்கொண்டார்.

இந்த மணிக்கூண்டின் சீரமைப்பு பணிக்கு அவரது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.20 லட்சத்தை ஒதுக்கிக் கொடுத்தார்.

#தமிழ்முரசு #புதுச்சேரி #மணிக்கூண்டு 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!