இந்தியாவில் சிக்கித்தவித்த மலேசியர்கள் 1,116 பேரை மீட்க 6 சிறப்பு விமானங்கள்

சென்னை: இந்­தி­யா­வில் இருந்து தாய­கம் திரும்ப முடி­யா­மல் தவித்த 1,116 மலே­சி­யர்­க­ளுக்­காக 6 சிறப்பு விமா­னங்­கள் இயக்­கப்­ப­டு­கின்­றன. இதற்­கு­ரிய செலவை மலே­சிய இந்­திய காங்­கி­ரஸ் கட்சி ஏற்­றுக் கொண்­டுள்­ளது.

பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக இந்­தியா சென்ற சுமார் 1,500 மலே­சிய குடி­மக்­கள் நாடு திரும்ப முடி­யா­மல் தவிப்­ப­தாக அண்­மை­யில் தக­வல் வெளி­யா­னது.

இதை­ய­டுத்து மலே­சிய இந்­திய காங்­கி­ரஸ் கட்­சி­யின் தேசி­யத் தலை­வர் விக்­னேஸ்­வ­ர­னும் மலே­சிய மனி­த­வ­ளத் துறை அமைச்­சர் சர­வ­ண­னும் அந்­நாட்­டின் வெளி­யு­றவு அமைச்­ச­ரு­டன் ஆலோ­சனை நடத்­தி­னர்.

இதை­ய­டுத்து 6 சிறப்பு விமா­னங்­களை இயக்­கு­வ­தற்­கான செலவை ஏற்­றுக்கொள்­வ­தாக மஇகா அறி­வித்­தது. இதற்­காக 1.05 மில்­லி­யன் மலே­சிய ரிங்­கிட் செல­வா­கும் எனக் கணக்­கி­டப்­பட்­டுள்­ளது.

இந்த ஏற்­பாட்­டின்­படி சென்னை, திருச்­சி­யில் இருந்து முதற்­கட்­ட­மாக சிறப்பு விமா­னங்­கள் மூலம் 369 பேர் கடந்த திங்­கட்­கி­ழமை மலே­சியா சென்­ற­டைந்­த­னர். இதை­ய­டுத்து நேற்று மேலும் 372 மலே­சி­யர்­கள் நாடு திரும்­பி­யுள்­ள­னர்.

இந்­நி­லை­யில் மிக விரை­வில் மீத­முள்­ள­வர்­களும் தாய­கம் திரும்­பு­வர் என டான்­ஸ்ரீ விக்­னேஸ்­வ­ரன் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார். மேலும் மலே­சி­யா­வில் இருந்து சென்­னைக்கு செல்­லும் சிறப்பு விமா­னங்­கள் காலி­யாக இருக்­கும் என்­ப­தால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி மலே­சிய விமான நிலை­யத்­தில் சிக்­கித் தவித்த 113 இந்­திய குடி­மக்­களை சிறப்பு விமா­னத்­தில் அனுப்பி வைத்­த­தா­க­வும் அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!