தலைமை தாதி மரணம்; பிறந்து 10 நாட்களே ஆன குழந்தைக்கு தொற்று: 133 பேர் பலி

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 18,545 ஆக அதி­க­ரித்­துள்­ளது. கொவிட்-19 நோய் இது­வரை 133 பேரை பலி வாங்­கி­யுள்­ளது.

இந்­நி­லை­யில், சென்னை ராஜீவ்­காந்தி அரசு பொது மருத்­து­வ­ம­னை­யில் தலைமை தாதி­யா­கப் பணி­யாற்றி வந்த 58 வய­தான ஜோன் மேரி பிரி­சில்லா என்­ப­வர் கொரோனா கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்­துள்­ளார்.

கடந்த 26ஆம் தேதிக்கு முன்பு அவ­ரது உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது. நேற்று முன்­தி­னம் அவ­ருக்கு கொரோனா தொற்று இருப்­பது உறு­தி­செய்­யப்­பட்­டது.

இந்­நி­லை­யில் அன்­றி­ரவே சிகிச்சை பல­னின்றி அவர் உயி­ரி­ழந்­தார். தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்டு உயி­ரி­ழந்த முதல் தலைமை பெண் தாதி இவ­ரா­வார்.

இதற்­கி­டையே சென்னை அருகே உள்ள மாங்­காட்­டில் பிறந்து 10 நாட்­களே ஆன குழந்­தைக்கு கொரோனா கிரு­மித் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இக்­கு­ழந்­தை­யின் தாய்க்­கும் நோய்த்­தொற்று இருந்­தது.

இதேபோல் திருச்சி மத்திய சிறையில் உள்ள ஆயுள் கைதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் அண்மையில் சக ஆயுள் கைதிகள் மூவருடன் சட்டம் தொடர்பான மூன்று மாத படிப்புக்காக சென்னை புழல் சிறைக்கு சென்றுவிட்டு கடந்த 23ஆம் தேதிதான் திருச்சி திரும்பியுள்ளார்.

இதையடுத்து அக்கைதியுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.