மூட்டை மூட்டையாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்; விவசாயிகள் கவலை

மூட்டை மூட்டையாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்; விவசாயிகள் கவலை

1 mins read
ec61744f-6936-4938-bf37-3932670dcfda
மயிலாடுதுறை கொள்முதல் நிலையங்களில் ஏறக்குறைய ஆறு லட்சம் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படம்: இந்திய ஊடகம் -

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் மூட்டை மூட்டையாக அரிசி மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன.

சுமார் ஆறு லட்சம் நெல் மூட்டைகள் தேங்கியிருப்பதாகவும் அவை அனைத்தும் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

அரிசி நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதில் அரசு அதிகாரிகள் தாமதம் செய்து அலட்சியத்துடன் நடந்துகொள்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 113 அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. ஆனால் ஒவ்வொரு நிலையத்திலும் 700 மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்ய முடியாது என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, விளைச்சல் அதிகம் இருந்தாலும் நெல் மூட்டைகளை விற்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 5000 நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதாகக் கூறப்படுகிறது.

இதை கணக்கில் எடுத்துக் கொண்டால் சுமார் ஆறு லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாமல் தேங்கிக் கிடக்கின்றன.

கடந்த 20 நாட்களாகவே கொள்முதல் நிலையங்களில் அரிசி மூட்டைகளை வைத்துக் கொண்டு விவ சாயிகள் காத்திருக்கின்றனர்.

மேலும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்தால் மீண்டும் முளைத்துவிடக் கூடும் என்றும் நெல் மூட்டைகள் அனைத்தும் வீணாகி விடும் என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்தப் பிரச்சி னைக்கு ஓரிரு நாட்களில் தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.