திரையரங்குகளில் 50% இருக்கைகள்தான்: நீதிமன்ற உத்தரவால் அரசுக்கு சிக்கல்

திரையரங்குகளில் 50% இருக்கைகள்தான்: நீதிமன்ற உத்தரவால் அரசுக்கு சிக்கல்

1 mins read
8b270fe5-b540-4e23-a2f8-7ee563cab1e8
சென்னையில் காணப்படும் சுவரொட்டி. படம்: ஊடகம் -

மதுரை: திரை­ய­ரங்­கு­கள் 100% இருக்­கை­க­ளு­டன் இயங்­க­லாம் என்­னும் தமி­ழக அர­சின் அர­சா­ணையை ரத்து செய்ய வேண்­டும் என முத்­துக்­கு­மார், ராம்­கு­மார் ஆதித்­தன் ஆகி­யோர் உயர் நீதி­மன்ற மது­ரைக் கிளை­யில் பொது­நல வழக்கு தொடர்ந்­தி­ருந்­த­னர்.

இந்த வழக்கு நீதி­ப­தி­கள் எம்.எம்.சுந்­த­ரேஷ் மற்­றும் ஆனந்தி அமர்வு முன் நேற்று விசா­ரணைக்கு வந்­தது. வழக்கை விசா­ரித்த நீதி­ப­தி­கள், "ஜன­வரி 11ஆம் தேதி (திங்­கட்கிழமை) வரை 50% இருக்­கை­களுடன்­தான் திரை­ய­ரங்­கு­கள் இயங்க வேண்­டும். கிரு­மிப் பர­வல் காலத்­தில் பொரு­ளி­யல் சிக்­ கல்­க­ளுக்கு அதிக முக்­கி­யத்­து­வம் அளிக்க இய­லாது.

"50 விழுக்­காடு இருக்­கை­க­ளு­டன் திரை­ய­ரங்­கு­கள் இயங்­கும் சூழ­லில், காட்­சி­களை அதி­கப்­ப­டுத்­து­வது பற்­றிய தக­வல் தேவை. 100 விழுக்­காடு இருக்கை விவ­கா­ரத்தை தமி­ழக அரசு சரி­யான முறை­யில் பரி­சீ­லித்து முடி­வெ­டுக்­கும் என நம்­பு­கி­றோம்," என உத்­த­ர­வில் குறிப்­பிட்­ட­னர்.

திரை­ய­ரங்­கு­களில் 100 விழுக்­காடு இருக்­கைக்கு அனு­மதி அளிப்­பது தொடர்­பாக தமி­ழக அர­சி­டம் விரி­வான விளக்­கம் பெற்று சமர்ப்­பிக்க அர­சின் தலைமை வழக்­க­றி­ஞ­ருக்கு ஆணை­யிட்ட நீதி­ப­தி­கள், வழக்­கின அடுத்­த­கட்ட விசா­ர­ணையை வரும் 11ஆம் தேதிக்கு ஒத்­தி­வைத்­த­னர். விஜய் ரசிகர்கள் 'நன்றி முதல்வரே' என சென்னை முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி வரும் நிலையில், மத்திய அரசும் நீதிமன்றமும் தடை விதித்திருப்ப தால் தமிழக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.