தமிழகத்துக்கு 900 டன் ஆக்சிஜன் வழங்க மத்திய அமைச்சர் உத்தரவு

சென்னை: நாட்­டி­லேயே அதிக எண்­ணிக்­கை­யில் புதிய கொரோனா கிரு­மித் தொற்று பதி­வா­கும் மாநி­ல­மாக தமி­ழ­கம் தற்­போது இருக்­கும் நிலை­யில், அங்கு ஆக்­சி­ஜன் தேவை­யும் அதி­க­ரித்து வரு­கிறது.

இத­னைக் கருத்­தில் கொண்டு தமி­ழ­கத்­துக்கு கூடு­த­லாக தின­சரி 180 டன் ஆக்­சி­ஜன் அளிக்க வேண்­டும் என்று மத்­திய அமைச்­சர் பியூஷ் கோய­லி­டம் திமுக மக்­க­ளவை உறுப்­பி­னர் டி.ஆர். பாலு கோரிக்கை மனு அளித்­தார்.

கொரோனா தொற்று குறைந்து வரும் மகா­ராஷ்­டிரா உள்­ளிட்ட மாநி­லங்­களில் இருக்­கும் ஆக்­சி­ஜனை தமி­ழ­கத்­துக்கு வழங்க விடுக்­கப்­பட்ட கோரிக்­கை­யைப் பரி­சீ­லித்த மத்­திய அமைச்­சர் பியூஷ் கோயல் அடுத்த 5 நாட்­க­ளுக்­குத் தேவை­யான 900 மெட்­ரிக் டன் ஆக்­சி­ஜனை தமி­ழ­கத்­துக்கு அளிக்க உத்­த­ர­விட்­டுள்­ளார்.

மருத்­துவ ஆக்­சி­ஜன் விநி­

யோ­கம் தொடர்­பாக மகா­ராஷ்­டிரா மற்­றும் தமி­ழக அதி­கா­ரி­கள் கலந்து பேசி உரிய நட­வ­டிக்­கை­கள் எடுக்க வேண்­டும் என்று பியூஷ் கோயல், டி.ஆர் பாலு­வி­டம் தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், தமி­ழ­கத்­தில் ஆக்­சி­ஜன் விநி­யோ­கத்தைக் கண்­

கா­ணிக்க ஐ.ஏ.எஸ் அதி­காரி தாரேஸ் அக­மது தலை­மை­யில் தமி­ழக அரசு குழு அமைத்­துள்­ளது. மத்­திய அரசு சார்­பில் இணைச் செயலா் ஹூகும் சிங் மீனா, டாக்­டர் சஞ்­சனா சர்மா ஆகி­யோர் குழுவில் இடம் பெற்­றுள்­ளனர்.

இதற்­கி­டை­யில், தூத்­துக்­குடி ஸ்டெர்­லைட் ஆலை­யில் இருந்து நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் 16 மெட்­ரிக் டன் ஆக்­ஸி­ஜன் மருத்­துவ தேவைக்­காக அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது என ஆட்­சி­யர் செந்­தில்­ராஜ் தெரி­வித்­துள்­ளார். தொடர்ந்து இனி உற்­பத்தி செய்­யக் கூடிய ஆக்­ஸி­ஜன், தேவைப்­ப­டக் கூடிய மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு பிரித்து வழங்­கப்­படும் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

தமி­ழ­கத்­தின் ஆக்­சி­ஜன் தேவை­யைப் பூர்த்தி செய்­யும் நோக்­கில் மற்ற மாநி­லங்­க­ளி­லி­ருந்து ஆக்­சி­ஜ­னைப் பெறும் முயற்­சி­யும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!