தமிழகத்தில் ‘ஸிக்கா’ பாதிப்பில்லை; எட்டு மாவட்டங்களில் கொவிட்-19 பாதிப்பு அதிகரிப்பு

சென்னை: தமி­ழ­கத்­தில் இது­வரை 'ஸிக்கா' கிரு­மியால் யாரும் பாதிக்­கப்­ப­ட­வில்லை என்று மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய அவர், 'ஸிக்கா' கிருமி­யால் மாநி­லத்­தின் எல்­லைப் பகு­தி­களில் கிரு­மித்­தொற்­றுப் பர­வ­லைத் தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

மாநி­லம் முழு­வ­தும் கொசு ஒழிப்புப் பணி­யில் 21 ஆயி­ரம் பணி­யா­ளர்­களும் 14,833 வாக­னங்­களும் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் அமைச்­சர் மேலும் தெரி­வித்­தார்.

கர்ப்­பி­ணிப் பெண்­கள் 'ஸிக்கா' பாதிப்­பில் இருந்து பாது­காத்­துக் கொள்ள கவ­ன­மாக இருக்க வேண்­டும் என்­றார் அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன்.

கொரோனா நில­வ­ரம்

தமி­ழ­கத்­தில் நேற்று முன்­தி­னம் புதி­தாக 1,904 பேருக்கு கிருமி தொற்­றி­யுள்­ளது. மாநி­லத்­தில் எட்டு மாவட்­டங்­களில் மட்­டும் அன்­றா­டம் பதி­வா­கும் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை சற்றே அதி­க­ரித்­துள்­ளது.

செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று 133,149 பேருக்கு கொரோனா பரி­சோ­தனை செய்­யப்­பட்­டது என்­றும் இதில் 12 வயதுக்­குட்­பட்ட 113 குழந்­தை­களுக்­கும், 60 வய­துக்கு மேற்­பட்ட முதி­ய­வர்­கள் 296 பேருக்­கும் தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது என்­றும் சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது. ஈரோடு, கிருஷ்­ண­கிரி, மதுரை உள்­பட எட்டு மாவட்­டங்­களில் பாதிப்பு சற்று அதி­க­ரித்­துள்­ளது என்­றும் 30 பேர் பலி­யா­கி­விட்­ட­தா­க­வும் அத்­து­றை­யின் அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

கறுப்புப் பூஞ்சை பாதிப்பு நில­வ­ரம்

கறுப்புப் பூஞ்சை பாதிப்­புக்­காக சென்­னை­யில் உள்ள ராஜீவ்­காந்தி அரசு மருத்­து­வ­ம­னை­யில் இது­வரை 863 பேர் சிகிச்சை பெற்­றுள்­ள­தாக அதன் தலை­வ­ரும் மருத்­து­வ­ரு­மான தேர­ணி­ரா­ஜன் தெரி­வித்­துள்­ளார்.

நாடு முழு­வ­தும் உள்ள மருத்து­வ­ம­னை­களில் மிக அதிக எண்­ணிக்­கை­யி­லான நோயா­ளி­கள் இங்­கு­தான் சிகிச்சை பெற்று வரு­வ­தாக செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில் அவர் குறிப்­பிட்­டார்.

"சிகிச்சை பெற்­ற­வர்­களில் இது­வரை 342 பேர் முழு­மை­யாக குண­ம­டைந்து வீடு திரும்பி உள்­ள­னர். மீத­முள்ள 395 பேர் உள்­நோ­யா­ளி­க­ளாக சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

"ஒரு குடை­யின் கீழ், இவர்­களுக்­கான சிகிச்­சை­களை ஒரே இடத்­தில் அளிக்­கக்­கூ­டிய வசதி ராஜீவ்­காந்தி அரசு மருத்­து­வ­ம­னை­யில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட கார­ணத்­தால், பல தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள் இருந்­தும் கூட இங்கு நோயா­ளி­கள் சிகிச்­சைக்­காக பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கின்­ற­னர்," என்­றார் தேர­ணி­ரா­ஜன்.

தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் இந்த சிகிச்­சைக்கு ரூ.30 லட்சம் வரை செல­வா­கும் என்று குறிப்­பிட்ட அவர், அரசு மருத்­து­வ­மனை­களில் இல­வ­ச­மாக சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கிறது என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!