இறைவன் படைப்பில் குறை இருந்தாலும் எங்கள் படைப்பில் குறையே இருக்காது

என் தாத்தா, என் தந்தை என்று வழி­வ­ழி­யா­கத் தொட­ரும் இந்­தத் தொழி­லைக் கைவி­டக்­கூ­டாது; மேலும் மேலும் மேம்­ப­டுத்த வேண்டும் என்­ப­தற்­கா­கவே தான் நுண்­க­லைப் பட்­டப்­ப­டிப்பு படித்­த­தா­கக் கூறு­கி­றார் அரும்­பாக்­கம் என்ற கிரா­மத்­தைச் சேர்ந்த 27 வயது இளை­ஞர் விக்­னேஷ்.

இவ­ரின் தந்­தை­யான நட­ரா­ஜன், 65, என்­ப­வரை அந்­தப் பகு­தி­யில் தெரி­யா­த­வர்­கள் கிடை­யாது. 'அரும்­பாக்­கம் நட­ரா­ஜன்' என்­றால் பொம்­மைத் தொழில்­தான் நினைவுக்கு வரும். அவ­ரின் குடும்­பம் பரம்­பரை பரம்­ப­ரை­யாக மண் பொம்­மை­கள், சிலை­கள் தயா­ரிப்­புத் தொழி­லைச் செய்து வரு­கிறது.

"கிருஷ்ண ஜெயந்தி, விநா­ய­கர் சதுர்த்தி, நவ­ராத்­திரி போன்ற இந்­துக்­கள் கொண்­டா­டும் பண்டிகை­களில் எங்­கள் கைவண்­ணம் இருக்­கும்," என்­கி­றார் சிங்­கப்­பூர், மலே­சியா, அமெ­ரிக்கா போன்ற வெளி­நா­டு­க­ளுக்­குத் தங்­கள் படைப்­பு­களை ஏற்­று­மதி செய்­யும் நட­ரா­ஜன்.

தமிழ்­நாட்­டின் பல மாவட்­டங்­க­ளுக்­கும் இந்­தி­யா­வில் பல மாநி­லங்­க­ளுக்­கும் ஏற்­று­மதி செய்ய வேண்டி இருப்­ப­தால் பெரும்­பா­லான தரு­விப்பு ஆணை­களை (ஆர்­டர்) தவிர்த்­து­வி­டு­கி­றோம் என்று விக்­னேஷ் கூறி­னார்.

கும்­ப­கோ­ணத்­தில் இருந்து தரங்­கம்­பாடி செல்­லும் சாலை­யில் திரு­வி­ளை­யாட்­டம் என்ற நக­ருக்கு அருகே இருக்­கும் அரும்­பாக்­கத்­தில் சாலை ஓர­மாக இவர்­களது வீடு இருக்­கிறது.

"விநா­ய­கர் சதூர்த்தி வரும் 31 ஆம் தேதி. நெருங்­கி­விட்­டது. முழு­மூச்­சாக ஆறு பேர் வேலை பார்க்­கி­றோம். பெரும்­பா­லும் இந்­துக் கட­வுள் சிலை­களை நாங்­கள் உரு­வாக்­கு­கி­றோம்.

"விநா­ய­கர் சதுர்த்தி பண்­டி­கை­யின்­போது, படைத்­து­விட்டு தண்­ணீ­ரில் விடப்படும் விநா­ய­கர் முதல் நிரந்­த­ர­மாக வீடு­க­ளி­லும் வழி­பாட்டு இடங்­க­ளி­லும் வைத்து வணங்­கும் உரு­வச் சிலை­கள் வரை பல­வற்றை ­நாங்­கள் உரு­வாக்­கு­கிறோம்.

"களி­மண், வண்­டல் மண், சவுட்டு மண் மூன்­றை­யும் கலந்து தண்­ணீரை ஊற்­றிக் குழைத்து பிசைந்து பத­மாக, கெட்­டி­யாக மண்ணைத் தயா­ரித்­துக்கொள்ள வேண்­டும்.

"அதை அச்­சில் நன்கு அழுத்தி பதியச் செய்து முத­லில் மண்ணுக்கு வடிவம் கொடுக்கிறோம். உருவம் கிடைத்த பிறகு மண் சிலை­யாகி விடும். அவற்றின் மீது நேர­டி­யாக சூரிய ஒளிபடா­மல் அவற்றை பத்து நாள்­கள் வீட்­டுக்­குள்­ளேயே காய வைக்­கி­றோம். 11வது நாள் வெயிலில் வைத்து அடுத்த நாள் சிலை­களை அவற்­றுக்­கான அடுப் பில் பத­மாக சுட்டு எடுக்­கி­றோம்.

"பிறகு அவற்­றில் இருக்­கக்­கூடிய பிசு­று­களைத் தூரி­கை­யைக் கொண்டு நீக்கி, சிலைகளை மக்குக் கரை­ச­லில் மூழ்க வைத்து எடுப்­போம். இந்­தக் கரைசல், சிலை களில் இருக்கக்கூடிய சிறு சிறு துவா­ரங்­கள் போன்­ற­வற்றை அடைத்­துவிடும்.

"இரண்டு முறை இப்­படிச் செய்­ய­வேண்­டும். அது முடிந்ததும் சிலை­களில் மட்டி பார்ப்போம். இதனால் சிலைகள் வழவழ என்று ஆகிவிடும்.

"மட்டி காய்ந்த பிறகு முதலில் முற்­றி­லும் வெள்ளை வண்­ணம் பூசு­வோம். அது நன்கு காய்ந்­த­தும் பல வண்­ணங்களைப் பூசும் பணி தொடங்­கும்.

"வேலைப்­பாட்­டிற்குத் தகுந்­தாற்­போல் ரூ.50 (S$0.87) முதல் ரூ.5,000 (S$86.97) வரை எங்­க­ளு­டைய படைப்­பு­கள் விலை­போ­கின்­றன. மொத்த விற்­ப­னை­யும் உண்டு. சில்­லறை விற்­ப­னை­யும் உண்டு. இப்­படி நாங்­கள் தயாரிக்கும் சுவாமி சிலை­கள் வழி­பாட்­டுக்கு நிரந்­த­ர­மாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்றன," என்றார் திரு விக்­னேஷ்.

இத­னி­டையே, விநா­ய­கர் சதுர்த்தி பண்­டி­கைக்­காக உரு­வாக்­கப்­படும் விநா­ய­கர் சிலை பற்றி விளக்­கிய திரு நட­ரா­ஜன், "எல்லாம் ஒன்­று­தான். பச்சை மண்­ணில் உரு­வா­கும் சிலை­களைச் சுட்டு எடுக்க மாட்டோம். குறையில்லாமல் பார்த்து அப்படியே விற்­பனைக்கு கொடுத்து விடுவோம்.

"இத்­த­கைய விநா­ய­கர் சிலை களைப் பண்­டிகை அன்று படைத்து விட்டு இந்­துக்­கள் சிலை­யைத் தண்­ணீ­ரில் விட்­டு­வி­டு­வார்­கள். எங்­கள் தொழிலை நாங்­கள் மிகப் புனி­த­மா­கக் கரு­து­கி­றோம்.

"கட­வுள் படைப்­பில் குறை இருக்­க­லாம். அப்­படி இருந்­தால் கட­வுளை யாரும் எது­வும் செய்ய முடி­யாது. ஆனால் எங்­கள் படைப்­பில் குறை இருந்­தால் அது பக்­தர்­க­ளின் மன­தைப் புண்­ப­டுத்­தி­வி­டும் என்­ப­தால் குறை­யில்­லா­மல் தெய்­வச் சிலை­களை உரு­வாக்­கு­ வ­து­தான் எங்­கள் குறிக்­கோள்," என்று திரு நட­ரா­ஜன் கூறி­னார்.

சிலை­க­ளுக்கு வண்­ணம் பூசிக் கொண்­டி­ருந்த விக்­னே­ஷி­டம் முழுமை பெற்ற ஒரு சிலையைக் காட்­டுங்­கள் என்று கேட்­டேன். அவர் எடுத்­துக்­காட்­டி­ய­தைப் பார்த்து வியந்­தேன்.

அவை மண் சிலை­களா என்ற சந்­தே­கம் ஏற்­பட்­டது. பார்­வைக்கு உலோ­கச் சிலை­போல், மரத்­தால் ஆன சிலை­போல், கருங்­கல் சிலை போல் அவை காணப்­ப­டு­கின்­றன.

கைத்­தி­ற­னில் தமி­ழர்­கள் கை தேர்ந்­த­வர்­கள் என்ற சிந்­தனை மன­தில் ஏற்­பட அவர்­க­ளி­டம் விடை­பெற்­றுக்­கொண்டு புறப்­பட்­டேன்.

இந்த அரிய தொழில் அழிந்­து­வி­டக்­கூ­டாதே என்ற கவலை அப்­போது என் மன­தில் ஏற்­பட்­டது.

ஆனால் திரு விக்­னேஷ் போன்ற இளை­ஞர்­கள் இருக்­கி­றார்­கள் என்­ற­நிம்­ம­தி­யு­டன் அப்­பாடா என்று பெரு­மூச்சு விட்­ட­படி நகர்ந்­தேன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!