கறுப்பு நிற பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்ட நிலையில் சடலம் மீட்பு தயாரிப்பாளர் கொலை; தரகர் கைது

சென்னை: சென்னையில் கால்வாய் ஓரம் கறுப்பு நிற பிளாஸ்டிக் பையால் சுற்றி வீசப்பட்டிருந்த சடலம் குறித்து காவலர்கள் நடத்திய விசாரணையில், இறந்தது திரைப்படத் தயாரிப்பாளர் என்பது தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கணேசன் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் தரகர் வேலை செய்பவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவரிடம் காவலர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் மேலும் சில குற்றவாளிகள் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னை நெற்குன்றம் பகுதி யில் உள்ள கூவம் ஆற்றுப் பாலத்தின் அருகே பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்டு, ஆடவர் சடலம் கிடப்பதாக அங்கு துப்புரவுப் பணி மேற்கொள்ள வந்த சபாபதி என்பவர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித் துள்ளார்.

இதையடுத்து, விருகம்பாக்கம் காவலர்கள் சடலத்தைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில் கட்டுமானத் தொழில்களில் ஈடு பட்டு வரும் சென்னை ஆதம் பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் திரைப்படத் தயாரிப்பாளருமான பாஸ்கரன் கொலை செய்யப் பட்டிருப்பது தெரியவந்தது.

ராம்கி நடித்த 'சாம்ராட்', 'ஒயிட்' ஆகிய படங்களைத் தயாரித்த இவர் தற்போது படத் தயாரிப்புப் பணி களைக் கைவிட்டு தனது மகன் களுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இதுகுறித்து விருகம்பாக்கம் காவலர்கள் கூறுகையில், "கைகால் கட்டப்பட்டு, வாயில் துணி வைத்த நிலையில், கோட்-சூட் அணிந்து, ரத்தக் காயங்களுடன் 60 வயது மதிக்கத்தக்க பாஸ்கரன் என்பவரின் சடலம் மீட்கப்பட்டது. கடந்த 2ஆம் தேதி காலையில் வீட்டைவிட்டு காரில் புறப்பட்ட பாஸ்கரன், பின்னர் வீடு திரும்பவில்லை என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

"அவரது கைபேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பாஸ்கரனைக் காண வில்லை என அவரது மகன் கார்த்திக், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

"இந்நிலையில்தான் பாஸ்கர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவ ரின் காரும் அதே பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது.

"தடய அறிவியல் துறையினர் கைரேகைகளைப் பதிவு செய்துள்ள னர். தலையில் அடித்த காயங்களும் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்களும் இருந்தன.

"பாஸ்கரனின் ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தி இரண்டு முறை பணம் எடுக்கப்பட்டுள்ளது.

"கூலிப்படையினர்தான் இந்தக் கொலையைச் செய்திருக்க வேண் டும் என்ற சந்தேகமும் எங்களுக்கு உள்ளது. தீவிர விசாரணை நடந்து வருகிறது," என்று காவலர்கள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!