ஒலிம்பிக் போட்டியை ஏற்று நடத்த இந்தியா விருப்பம்

புது­டெல்லி: எதிர்­வ­ரும் 2036ஆம் ஆண்டு ஒலிம்­பிக் விளை­யாட்­டுப் போட்­டியை இந்­தி­யா­வில் நடத்த விண்­ணப்­பிப்­பது குறித்து மத்­திய அரசு தீவி­ர­மா­கப் பரி­சீ­லித்து வரு­கிறது என மத்­திய விளை­யாட்­டுத் துறை அமைச்­சர் அனு­ராக் தாக்­கூர் தெரி­வித்­துள்­ளார்.

குஜ­ராத் மாநி­லம் ஒலிம்­பிக் போட்­டியை நடத்­து­வ­தற்­கான அனைத்­து­வி­த­மான கட்­ட­மைப்­பு­க­ளை­யும் கொண்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

“உற்­பத்­தித் துறை முதல் சேவைத்­துறை வரை அனைத்­தி­லும் சாதித்து வரும் இந்­தி­யா­வால் விளை­யாட்­டுத் துறை­யில் சாதிக்க இய­லாதா?

“எனவே 2036ஆம் ஆண்­டில் ஒலிம்­பிக் போட்­டியை நடத்­து­வது குறித்து தீவி­ர­மா­கப் பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­கிறது. இந்த முயற்சி தேவை­யில்லை என்று சொல்­வ­தற்கு எந்­த­வி­த­மான கார­ண­மும் இல்லை.

“விளை­யாட்­டுத் துறை மேம்­படுத்த இந்­தியா இந்த அள­வுக்கு தீவிர நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கிறது எனில், ஒலிம்­பிக் போட்டி மிகப்­பெ­ரிய அள­வில் நம்­மால் நடத்­திக் காட்ட இய­லும். ஒலிம்­பிக் போட்­டியை நடத்­து­வ­தற்கு இதுவே உரிய நேரம்,” என்று அமைச்­சர் அனு­ராக் தாக்­கூர் கூறி­யுள்­ளார்.

உல­க­ள­வில் அதிக மக்­கள் தொகை கொண்ட நாடு­க­ளின் பட்­டி­ய­லில் இரண்­டாம் இடத்­தில் உள்ள இந்­தியா, இதற்கு முன்­னர் ஆசிய, காமன்­வெல்த் விளை­யாட்­டுப் போட்­டி­களை வெற்­றி­க­ர­மாக நடத்­திக் காட்டி உள்­ளது.

2036ஆம் ஆண்டு ஒலிம்­பிக் போட்­டியை நடத்­து­வது தொடர்­பாக பத்து நக­ரங்­க­ளு­டன் தொடக்க நிலை பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி வரு­வ­தாக அனைத்­து­லக ஒலிம்­பிக் கமிட்டி தெரி­வித்­துள்­ளது. எனி­னும் எப்­போது இறுதி முடிவு எடுக்­கப்­படும் என்­ப­தற்­கான கால அளவு எதை­யும் அது இன்­னும் குறிப்­பி­ட­வில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!