செத்தும் கெடுப்பவர்கள் படுத்தும் பாடு

மணமாகி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பூப்படைந்து, ஏழு பிள்ளைகளைப் பெற்றெடுத்து, கணவரை இழந்து, அவர் பார்த்துவந்த தொழிலையே பார்க்கும் அஞ்சம்மாள், 70, பிணம் படுத்தும் பாடு தாங்க முடியாது என்கிறார்.

பிணம் முழுவதும் எரிந்து சாம்பலாக அரை நாள் பிடிக்கும். அதற்குள் போதும்போதும் என்றாகிவிடும். எரிந்து கொண்டு இருக்கையில் கொரக்களி இழுத்து எலும்புக்கூடு சதையுடன் நீண்டு, மடங்கி நரபுரவென மேலே கிளம்பும். ஒரு பக்கமாகப் புரளும். தடியால் அடித்து, அமுக்கி மறுபடியும் நெருப்பில் படுக்க வைக்க வேண்டும்.

செத்­தும் கொடுப்­ப­வர்­கள் இருக்­கி­றார்­கள். செத்­தும் கெடுப்­ப­வர்­கள் இருக்­கி­றார்­கள். கெடுப்­பவர்கள் பிண வடி­வில் வந்து படுத்­தும் பாடு தாங்கமுடி­யாது என்­கி­றார் 70 வயது அஞ்­சம்­மாள்.

திரு­வா­ரூர் மாவட்­டம், கடு­வங்­குடி என்ற கிரா­மத்­தைச் சேர்ந்த இந்த முதிய மாது, தொப்­பு­ளான் என்ற தன்­ கண­வர் செய்து வந்த பிணம் எரிக்­கும், புதைக்கும் வேலையைச் செய்தே தன் காலத்தை ஓட்­டு­கி­றார்.

“காரைக்­காலை பூர்­வீ­க­மா­கக் கொண்ட எனக்கு ஆறு வயது ஆன­போது என்னை மூன்­றா­வது மனை­வி­யாக திரு­ம­ணம் செய்து கொடுத்­து­விட்­டார்­கள்.

“மணமாகி எட்டு ஆண்டு­களுக்­குப் பிற­கு­ பூப்­ப­டைந்தேன். என் கண­வ­ரின் முதல் மனைவி இங்­கா­யிக்கு ஓர் ஆண் மகன். ராஜேந்­தி­ரன் என்ற அந்த மகனுக்கு இப்­போது 40 வய­து.­

“இரண்­டா­வது மனை­வி­யான தனத்­திற்கு குழந்தை, குட்டி கிடை­யாது. இங்­காயியும் தன­மும் இப்­போது உயி­ரோடு இல்லை.

“மூன்­றாம் தார­மாக வாழ்க்­கைப்­பட்டு ஏழு பிள்­ளை­க­ளைப் பெற்­றெ­டுத்­தேன். நான்கு பெண்­களும் மூன்று மகன்­களும் மண­மாகி அவ­ர­வர் ஏதோ தொழிலைப் பார்த்து வரு­கி­றார்­கள். என்­கடைசி மகன் ஐயப்­பன் எனக்கு உறு­து­ணை­யாக இருக்­கி­றான்.

“ஊரில் யாரா­வது மர­ணம் அடைந்­து­விட்­டால் என்­னி­டம் தெரி­விப்­பார்­கள். சாவு வீட்­டிற்குச் சென்று தப்­ப­டித்­த­படி இரவு முழு­வ­தும் பாட்டுப் பாடு­வேன்.

“பிணம் வீட்­டி­லி­ருந்து தக­னச்­சா­லைக்­குப் புறப்­பட்­ட­தும் கொஞ்சம் முன்­ன­தாக தக­னக் கூடத்திற்கு வந்­து­வி­டு­வேன்.

“உற­வி­னர்­கள் உட­லுக்கு ஈமச்­ச­டங்­கு­க­ளைச் செய்து கொள்ளி வைத்­து­விட்டுப் போய்­விடு­வார்­கள். உடல் தக­னக் கூடத்­திற்கு வரு­வ­தற்கு முன்­பாகவே தக­னக்­கூ­டத்­தில் இருந்து 50 மீட்­டர் தூரத்­தில் தரை­யில் ஒரு கோடு போடு­வோம்.

“அந்­தக் கோட்­டுக்கு ‘அர்­ஜு­னன்’ கோடு என்று பெயர். தற்­கொலை செய்­து­கொண்டு உயிரை விடு­ப­வர்­கள், கொலை­காரர்­கள் தக­னக்கூடத்தில் (இதை மயானக்கோயில் என்று சொல்கிறர்கள்) இருந்து மீண்­டு வீட்­டுக்­குச் செல்ல முயல்­வார்கள்.

“ஆனால் அர்­ஜு­னன் கோடு அவர்­க­ளைத் தடுத்து­விடும். அந்தக் கோட்­டைத் தாண்டி போகமுடி­யாது. ஓர் உடல் முழு­வதும் எரிந்து சாம்­ப­லாக சுமார் அரை நாள் எடுக்­கும். பிணத்தை முழு­வ­தும் எரிக்க 150 வரட்­டி­கள் தேவை. 200 கிலோ விறகு வேண்டும். ஐந்­தாறு பெரிய வைக்­கோல் கட்டு­கள் வேண்டும்.

“இரவு முழு­வ­தும் தக­னக் கூடத்­திற்­குப் பக்­கத்­தி­லேயே படுத்துத் தூங்­கு­வேன். பிணம் எரிந்­து­கொண்டு இருக்­கும்­போது திடீ­ரென கொரக்களி இழுக்­கும்.

“சதை­யு­டன் எலும்பு மேலே கிளம்­பும், அப்­ப­டி­யும் இப்­ப­டி­யும் புர­ளும். அந்த நேரத்­தில் தடி­யால் அடித்­தும் வரட்­டி­யால் அமுக்­கி­யும் அதைச் சிதை­யி­லேயே தள்ள வேண்­டும்.

“இதற்­குள் நான் படும்­பாடு அந்­தச் சாமிக்­குத்­தான் தெரி யும். மனி­தன் கொடுக்­கும் தொல்­லை­க­ளை­விட பிணம் படுத்­தும்­பாடு பெரும்­பா­டாகத் தெரியும்.

“நாய், நரி, கழுகிடம் இருந்தும் உடலைக் காக்கவேண்டும்.

“முழு­வ­தும் உடலை எரிப்­ப­தற்­குள் போதும் போதும் என்றாகி ­வி­டும். வரட்டி, விறகு ஈர­மாக இருந்­தால் இன்­னும் சிர­மம்.

“பாதி எரிந்து பாதி எரி­யாமல் போய்­விட்­டால் உற­வி­னர்­கள் கோபித்துக்­கொண்டு பணம் கொடுக்­க­மாட்­டார்­கள்.

“பிணம் சரி­யாக எரி­ய­வில்லை என்­றால் அது கெட்ட சகு­னம் என்­பது நம்­பிக்கை. எப்­போ­துமே சிதை­யில் தலை தெற்கே, கால் வடக்கே இருக்­கும்­படி உடலை வைத்து எரிக்கவேண்­டும்.

“செவ்­வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழ­மை­களில் மட்­டும் உற­வி­னர்­கள் திரும்பி வந்து பால் தெளிப்­பார்­கள். நல்­ல­டக்­கம் என்றால் அடுத்த நாளே பால்­தெ­ளி­யல் சடங்கு நடக்­கும்.

“சிதை­யில் கிடக்­கும் எலும்புக்­கூட்­டின் தலை­யில் இருந்து கால் வரை எல்லா உறுப்புகளின் எலும் புகளிலும் சிலவற்றை எடுத்து அவற்றை உற­வி­னர்­களி­டம் நாங்­கள் ஒப்படைக்க வேண்­டும்.

“அந்த எலும்பு­களை மனித வடி­வில் செய்து பால் தெளித்து­விட்­டுச் சென்­று­வி­டு­வார்­கள்.

“நாங்­கள் செய்­யும் இவ்­வ­ளவு சேவை­க­ளுக்­கும் மொத்­த­மாக ரூ.1,500 கூலி கொடுப்­பார்­கள் அவ்­வ­ள­வு­தான்.

“என் கண­வ­ரான தொப்­பு­ளான் 10 ஆண்­டு­க­ளுக்கு முன் 94வது வய­தில் கால­மா­னார். அவர் தன் வாழ்­நா­ளில் 10,000க்கும் மேற்­பட்ட உடல்­களை எரித்து இருக்­கி­றார், புதைத்து இருக்­கி­றார்.

“என் கண­வ­ரோடு சேர்ந்­தும் அவ­ருக்­குப் பிறகு என் மக­னோடு சேர்ந்­தும் நானும் நூற்­றுக்­க­ணக்­கில் பிணங்­களை எரித்து இருக்­கி­றேன், நல்­ல­டக்­கம் செய்து இருக்­கி­றேன். பரம்பரை பரம்­பரை­யாக எங்­க­ளின் வாழ்க்கை பிணங்­க­ளோ­டு­தான் கழி­கிறது.

“என் கிரா­மத்­தில் சுடு­காட் டிற்குப் பக்­கத்­தில்­தான் என்­ குடிசை வீடும் இருக்­கிறது,” என்று இவ்­வ­ளவு விவ­ரங்­க­ளை­யும் கூறிய திரு­வாட்டி அஞ்சம்­மாள், இறந்­த­வர்­கள் வீட்­டில் பாடும் பாடலை தப்­ப­டித்­துக் கொண்டே பாடிக் காட்­டி­னார்.

அப்போது குறுக்­கிட்ட அஞ்­சம்­மா­ளின் மக­ன் ஐயப்பன், “எங்­க­ளுக்­குப் பிறகு இவ்வேலை­யைச் செய்ய ஆளில்லை,” என்­றார்.

“வரு­மா­னம் மிக­வும் சொற்­பம். இப்­போ­தெல்­லாம் சுற்­று­வட்­டார கிரா­மங்­களில் மாதத்­திற்கு இரண்டு, மூன்று இறு­திச் சடங்கு வேலை­கள்­தான் கிடைக்­கின்­றன. இதை வைத்­துக்­கொண்டு காலம் தள்­ளு­வது, ஒரு நாள் கழி­வது ஒரு யுகம் போவ­தாக இருக்­கிறது,” என்­றார் ஐயப்­பன்.

அஞ்­சம்­மாள், ஐயப்­பன் தாய்-மகன் கதை­யைக் கேட்ட நான், மனித பிணம்கூட இந்தப் பாடு படுத்துமோ என்ற சிந்­த­னை­யுடன் அந்த இடத்­தை­விட்டுக் கிளம்பினேன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!