பசுமைப் புரட்சியின் தந்தை, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்

சென்னை: இந்தியாவின் சிறந்த வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன் வியாழக்கிழமை தமது 98வது வயதில் காலமானார். பசுமைப் புரட்சியின் தந்தை என்றும் அவர் அழைக்கப்பட்டார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை 11.20 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது.

அங்கு சுவாமிநாதனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இவருக்கு சவும்யா சுவாமிநாதன், மதுரா சுவாமிநாதன், நித்யா ராவ் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இவரது மனைவி முன்பே இறந்துவிட்டார். சவும்யா சுவாமிநாதனும் விஞ்ஞானியாக உள்ளார்.

திரு சுவாமிநாதன், அனைத்துலக அரிசி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பணியாற்றி உள்ளார். 40க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.  பத்மபூஷண், எஸ்.எஸ்.பர்நாகர் உள்ளிட்ட விருதுகளையும் எம்.எஸ்.சுவாமிநாதன் பெற்றுள்ளார்.
திரு சுவாமிநாதனின் மறைவு விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

1925ல் கும்பகோணத்தில் பிறந்த இவர், பள்ளிப்படிப்பை முடித்ததும் திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை பட்டம் பெற்றார். தந்தை மருத்துவர். இவரும் மருத்துவராகி, தந்தையின் மருத்துவமனையை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது பெற்றோரின் விருப்பமாக இருந்தது.

ஆனால் வங்கத்தில் 1942ல் ஏற்பட்ட பஞ்சம் இவரை வெகுவாகப் பாதித்தது.

வேளாண் துறையில் ஆய்வு செய்ய முடிவெடுத்து கோவை வேளாண் கல்லூரியில் இளநிலைப் பட்டமும் டெல்லியில் மரபணு பயிர்கள் குறித்த முதுநிலைப் பட்டமும் பெற்றார்.

ஐபிஎஸ் அதிகாரியாக 1948ல் தேர்வாகியும் இவர் பணியில் சேரவில்லை.

இதற்குப் பதிலாக பல ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றினார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சிறந்த ஆராய்ச்சியாளரான இவர், நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்களை எழுதியுள்ளார்.

அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தும், 1954ல் நாடு திரும்பினார். ஒடிசா மாநிலம் கட்டாக்கில் வேளாண் துறையில் அரசுப் பணி கிடைத்தது.

இவர், ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து, அதிக உற்பத்தியையும், 200 விழுக்காடு லாபத்தையும் சாதித்துக் காட்டினார். இதை ‘கோதுமைப் புரட்சி’ என்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பாராட்டியிருந்தார்.

சீன நெல் வகைகளை அறிமுகம் செய்து நெல் விளைச்சலில் இந்தியாவை தன்னிறைவு பெற வைத்தார். நாட்டின் முதுகெலும்பான வேளாண் துறையில் அபரிமிதமான வளர்ச்சியை ஏற்படுத்தி உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்தவர் சுவாமி நாதன்.

இதற்கிடையே சுவாமிநாதன் மறைவுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நமது தேச வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டத்தில், விவசாயத்தில் அவர் செய்த திருப்புமுனை மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினும், “பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதனுடன் நான் கழித்த தருணங்களை நான் எப்போதும் ரசிப்பேன். சுற்றுச்சூழல் வேளாண்மைத் துறையில் அளப்பரிய பங்காற்றியவர். பசிப்பிணி ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு ஆகிய குறிக்கோளுக்கு முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பாடுபட்டவர் என தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!