‘அடுத்த ஐந்தாண்டுகள் தமிழக வளர்ச்சிக்கு முக்கியமானது’

சேலம்: தமிழகத்தில் தமக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் கிடைக்கும் ஆதரவைப் பார்த்து, திமுகவின் தூக்கமே தொலைந்து போய்விட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடந்த பாஜக பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், திமுகவும் காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்றும் இரு கட்சியினருமே ஊழலையும் குடும்ப ஆட்சியையும் தொடர்ந்து வழிநடத்துபவர்கள் என்றும் கடுமையாகச் சாடினார்.

இண்டியா கூட்டணியில் உள்ள திமுகவும் காங்கிரசும் பெண்களை இழிவுபடுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கு தமிழகம்தான் சாட்சி என்றார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அவரை திமுகவினர் எப்படியெல்லாம் இழிவுபடுத்தினார்கள் என்பதை மக்கள் கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் அதுதான் திமுகவினரின் உண்மையான முகம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

“பாஜகவும் தேசிய ஜனநாயக கூட்டணியும் பல பெரிய கனவுகளை தன்னகத்தே வைத்துள்ளன. பல இலக்குகளை நாம் அடைந்துள்ளோம். இந்தியாவில், நவீன உள்கட்டமைப்புகளின் மூலம் மிகப்பெரிய உயரங்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறோம்.

“பாஜக அரசு நாட்டில் இரண்டு பாதுகாப்பு வழித்தடங்களை அமைத்துக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று தமிழகத்தில் அமைகிறது. பாஜக அரசு நாடு முழுவதும் உயர்தரமான 7 ஜவுளிப்பூங்காக்களை உருவாக்கி வருகிறது. அதில் தமிழகத்தில் ஒரு ஜவுளிப் பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது,” என்றார் பிரதமர் மோடி.

அடுத்த 5 ஆண்டுகள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்றும் ஊழலுக்கு எதிராக தாம் மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்போகிற காலம் அது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

“எனவே, அதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழக மக்கள், ஒரு புதிய சாதனையைத் தொடங்கி வைக்க வேண்டும்.

“எனது நாட்டின் தமிழ் மொழி உலகத்தில் தொன்மையான மொழி என்று நான் உலகம் முழுவதும் நெஞ்சை நிமிர்த்தி கூறுகிறேன்,” என்றார் பிரதமர் மோடி.

பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தேர்தல் விதிமீறல்

பிரதமர் மோடி மேற்கொண்ட வாகன அணிவகுப்பு (ரோட் ஷோ) நிகழ்ச்சிக்கு அரசுப் பள்ளி மாணவர்களைக் கட்டாயப்படுத்தி பங்கேற்க வைத்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கோவையில் திங்கட்கிழமை பிரதமர் மோடி பங்கேற்ற பேரணி ஏறக்குறைய 2.50 கிலோ மீட்டர் தூரம் நீடித்தது. அந்தப் பாதை முழுவதும் ஏராளமான பாஜக தொண்டர்கள் கூடியிருந்தனர்.

அவர்கள் மலர்களைத் தூவி பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் பேரணியில் பங்கேற்க பள்ளிச் சீருடை அணிந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டாயத்தின் பேரில் அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் பிரசார கூட்டங்களில் சிறார்களை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டது தொடர்பான புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, விரிவான விசாரணை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!