மீண்டும் உயர் கல்வித்துறைக்கு அமைச்சரானார் பொன்முடி

சென்னை: தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராகப் பொன்முடி மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார். வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு தமிழக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியதை அடுத்து பொன்முடி அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை இழந்தார். எனினும், அவருக்கான தண்டனையை நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து பொன்முடியை மீண்டும் அமைச்சராக நியமிக்கக் கேட்டு ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் அவ்வாறு செய்த இயலாது என ஆளுநர் மாளிகை தெரிவித்தது. இது பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது. இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநரின் செயல்பாட்டை கடுமையாகக் கண்டித்தது.

ஆளுநரின் செயல்பாடு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது என்றும் ஜனநாயக முறைப்படி மனுதாரருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும்படி முதல்வர் செய்த பரிந்துரையை ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

முதல்வரின் தனிப்பட்ட அதிகாரத்தில் ஆளுநர் எவ்வாறு தலையிட முடியும் என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், ஆளுநர் தனது முடிவை 24 மணி நேரத்திற்குள் எடுக்க வேண்டும் என்று கெடு விதித்தது.

இதையடுத்து பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஒப்புக் கொண்டார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை அதிகாரபூர்வ அறவிப்பையும் வெளியிட்டது.

உயர்கல்வித் துறையை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூடுதலாக கவனித்து வந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!