You are here

இணையத்தில் மட்டும்-Digital only

தரம், சுவை, நறுமணம், ஆரோக்கியம் நிறைந்த அனார்கலி சூப்பர் பாஸ்மதி அரிசி

கடந்த 25 ஆண்டுகளாக சிங்கப் பூரில் பிரபலமாகச் செயல்பட்டு வருகிறது அனார்கலி நிறுவனம். தரம், சுவை, நறுமணத்துடன் கூடிய இந்த அனார்கலி பாஸ்மதி அரிசி பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. 
அதிகமானோர் சிறப்பு விழாக் களிலும் வழக்கமான நாட்களிலும் இந்த ரக அரிசியைப் பயன்படுத்தி வருகின்றனர். 
சிங்கப்பூரின் பிரதான பேரங்காடிகளிலும் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள பல சரக்குக்கடைகளிலும் அனார்கலி பாஸ்மதி அரிசியை வாங்கலாம். 
இரண்டு ஐந்து கிலோ அனார்கலி பாஸ்மதி அரிசியை ங் சியோங் கடைத்தொகுதியில் வாங்கினால் ஸ்டீம் குக்கர் ஒன்று இலவசமாகப் பெறலாம். 

புதிய ஆபரணத் தொகுப்பு அறிமுகம்

தங்கம், வைரம், நவரத்தின ஆபரண நகைகளின் புதிய தொகுப்பை மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 
தீபாவளியை முன்னிட்டு வெளிவந்துள்ள 200க்கும் மேற்பட்ட புதிய ஆபரணங்களை அந்நிறு வனத்தின் தூதுவரான பிரபல இந்தித் திரைப்பட நடிகைக் கரீனா கபூர் கான் அறிமுகப்படுத்தினார். 

செந்தோசாவில் தீபாவளி கொண்டாட்டம்: பிரபல பாடகர் கார்த்திக் இசை விருந்து

சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் மன்றம் ஏற்பாட்டில் ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவில் பிரம்மாண்ட தீபாவளி கொண்டாட்டம்  நாளை, வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. 
கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக தமிழ்--இந்திப் பாடல்களைப் பாடி வருகையாளர்களை மகிழ்விக்கவுள்ளார் பிரபல பிண்ணனிப் பாடகர் கார்த்திக். 
இரண்டு மணி நேர இசை விருந்துக்கு இசையமைக்க அவருடன் உலகத் தர இசையமைப்பாளர்கள் வரவிருக்கின்றனர். 
ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவின் ஹார்ட் ரோக் ஹோட்டல், ‘தி கொலோசியம்’ எனும் அரங்கில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெறுகிறது. 

செல்ஃபி எடுத்ததால் தம்பதி மரணம் என உறவினர் தகவல்

சான் ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் உள்ள யோஸ்மைட் என்ற தேசியப் பூங்காவின் தஃப்ட் பாய்ண்ட் என்னும் மலை உச்சியி லிருந்து கடந்த வாரம் ஓர் இந்திய தம்பதி கீழே விழுந்து மாண்டனர். இவர்களின் உடல்கள் பூங்காவின் 800 அடி பள்ளத்தில் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டது. 
அதன் பின் நடந்த விசாரணையில் இவர்கள் பெயர் விஷ்ணு விஷ்வானந்த் 29, மீனாட்சி மூர்த்தி, 30, என்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந் தது. இருப்பினும் தம்பதியின் இறப்புக்கான காரணம் குறித்துத் தெரியாமல் புலனாய்வு அதிகாரிகள் திணறி வந்தனர். 

வருமுன் காக்க மூவகைப் பரிசோதனை

வயது தொடர்பான செயலாற்றல் சரிவை முன்கூட்டியே கண்டறிய சுகாதார செயல்பாட்டுப் பரிசோதனை நோக்கம் கொண்டுள்ளது. தொடக்கத்திலேயே அறிகுறிகள் கண்டறியப்படாவிட்டால் தினசரி வாழ்க்கையில் பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

இர்ஷாத் முஹம்மது 

மூப்படையும் மனிதர்களுக்கு உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் சற்று குன்றுவது இயல்பு. பொதுவாகவே வேகம் குறைந்து உடல் பலவீனமடைந்து தடுமாற்றம் ஏற்படுவதும் இயல்பாகும். அந்த வரிசையில் கண் பார்வை மோசமடைவது, செவிப்புலன் சரிவது, வாய் சுகாதாரம் கெடுவது போன்ற சுகாதார செயல்பாட்டுக் குறைபாடுகளுக்கும் மூப்படைதலுக்கும் தொடர்பு உள்ளது. 

கிமோனோ கோழி புகைப்படப் போட்டி, $60,000 வரை பரிசு

‘ரப்பர்’ கோழியுடன் புகைப்படம் எடுங்கள், $60,000 வரை மொத்த பரிசை வெல்லுங்கள்.

இங்கே பிரபல உள்ளூர் கலைஞர் குமார் வைத்திருக்கும் ‘ரப்பர்’ கோழியுடன் புகைப்படம் எடுத்து உங்கள் ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுங்கள். #kemonophoto எனும் ‘ஹேஷ்டேக்’ இடுங்கள். புகைப்படங்களை ask@kemono.com மிஞ்சலுக்கும் அனுப்பி வைக்கலாம்.

இர்ஷாத்துடன் இர்ஷாத் - ஒரு நேர்காணல்

இர்ஷாத்துடன் இர்ஷாத் புதிய நியமன நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது இர்ஷாத்துடன் தமிழ் முரசு செய்தியாளர் இர்ஷாத் முஹம்மது சிறப்பு நேர்காணல்...  இதன் விரிவான செய்தியை இவ்வார ஞாயிறு முரசில் படியுங்கள்.

 

 

 

 

ஶ்ரீ ஶ்ரீநிவாச பெருமாள் ஆலயத்தின் விஸ்வரூபம் சிறப்பு வழிபாடு

சிங்கப்பூரின் ஶ்ரீ ஶ்ரீநிவாச பெருமாள் ஆலயத்தில் இன்று (22ஆம் தேதி செப்டெம்பர், சனிக்கிழமை) காலை நடைபெற்ற விஸ்வரூபம் சிறப்பு வழிபாட்டின் சில காட்சிகள்.

நன்றி: இந்து அறக்கட்டளை வாரியம்.

 

 

 

Pages