வழக்கு

டிக்டாக் காணொளிகளில், ரகசியக் கும்பல் ஒன்றுக்குத் தொடர்பு இருப்பதைக் காட்டும் வகையில் கைசைகைகளைக் காட்டி, கும்பல் முழக்கங்களை வாசித்ததாகக் கூறப்படும் மாது மீது ஏப்ரல் 29ஆம் தேதியன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
திருச்சி: திருச்சி முன்னாள் சார்-பதிவாளர் ஜானகிராமன் (79), அவரது மனைவி வசந்தி (65) ஆகியோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. திருச்சியின் பல்வேறு பகுதிகளில் 1989 முதல் 1993 வரை சார்பதிவாளராக பணியாற்றியுள்ளார் ஜானகிராமன். ஜானகிராமன் பணியாற்றிய காலத்தில் தனது பெயரிலும் மனைவி வசந்தி பெயரிலும் ரூ.32.25 லட்சத்தில் சொத்து வாங்கியுள்ளார்.
சென்னை: தாம் இசையமைத்த சில பாடல்களை ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகும் சில இசை நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதாக திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
புதுடெல்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் கருவிகளில் பதிவான ஓட்டுகளை எண்ண கோரிய வழக்கில், உச்சநீதிமன்றம் புதன்கிழமை (ஏப்ரல் 24) தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
16 வயது சிறுவன் ஒருவனின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டியதாக இளையர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.