You are here

உல‌க‌ம்

ஆப்கானிஸ்தானில் போராளிகள் தாக்குதல்

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் போராளிகள் நடத்திய தாக்குதல்களில் குறைந் தது நால்வர் உயிரிழந்ததாகவும் சுமார் 12 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். காபூல் அருகே உள்ள நகரில் போராளிகள் நேற்று ஒருங் கிணைந்த தாக்குதலை நடத்திய தாகவும் காஸ்னி நகரின் நான்கு புறங் களிலிருந்தும் போராளிகள் சரமாரியாக தாக்குதல் நடத்திய யதாகவும் மாநில அரசாங்கப் பேச்சாளர் முகமட் அரிஃப் நூர் கூறினார். கனரக ஆயுதங்களையும் துப்பாக்கிகளையும் பயன்படுத்தி போராளிகள் தாக்குதல் நடத்திய தாகவும் அவர் சொன்னார்.

நாட்டுப்பற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்த அதிபர் ஜோக்கோவி

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக பழமைவாத சமய குரு மருஃப் அமினை அதிபர் ஜோக்கோ விடோடோ தேர்ந்தெடுத் திருப்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில் அவர் தனது முடிவை தற்காத்துப் பேசியுள்ளார்.

பிரான்சில் வெள்ளப்பெருக்கு: 1,600 பேர் வெளியேற்றம்

பாரிஸ்: பிரான்சின் தெற்குப் பகுதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 1,600 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதி காரிகள் கூறினர். பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டவர் களில் பலர், கோடைக்கால முகாம்களில் தங்கியிருந்தவர் கள் என்று கூறப்பட்டது அத்தகைய ஒரு முகாமில் சிறுவர்களை கவனித்துக் கொண்டிருந்த ஜெர்மனியைச் சேர்ந்த 70 வயது முதியவரைக் காணவில்லை என்று அதி காரிகள் தெரிவித்துள்ளனர். மற்றொரு முகாமிலிருந்து 119 சிறுவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

மற்றொரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; லொம்போக்கில் மக்கள் ஓட்டம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் லொம்போக் தீவை மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கி யுள்ளது. இதனை சற்றும் எதிர் பாராத மக்கள் அதிர்ச்சியில் உயிரைப் பிடித்துக்கொண்டு சாலையில் ஓடினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நில நடுக்கத்திலிருந்து இன்னமும் மக்கள் மீண்டு வராத நிலையில் நேற்று மற்றொரு நில நடுக்கம் லொம்போக்கை உலுக் கியது. ஞாயிற்றுக்கிழமை 6.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டபோது மக்கள் பீதியில் சாலையில் ஓட்டம் பிடித்த னர். பல கட்டடங்கள் சரிந்து விழுந்தன.

மோசடி புத்த பிக்குக்கு 114 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பேங்காக்: தாய்லாந்து நீதிமன்றம், மோசடி புத்த பிக்குக்கு நேற்று 114 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அமெரிக்காவிலிருந்து விரா போன் சுக்போன் கொண்டு வரப் பட்டு ஓராண்டுக்கு மேல் நீடித்த விசாரணைக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டில் விலை உயர்ந்த குளுகுளு கண் ணாடியை அணிந்து ஆடம்பர கைப்பையுடன் விராபோன் சுக் போன் தனியார் விமானத்தில் பயணம் செய்த புகைப்படம் பல் வேறு ஊடகங்களில் தீயாகப் பர வியது.

நாடாளுமன்றத்துக்குத் திரும்ப அவசரமில்லை: அன்வார் இப்ராஹிம்

மலேசியாவில் கெஅடிலான் ராக்யாட் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம், நாடாளு மன்றத்துக்குத் திரும்புவதில் அவசரம் காட்ட மாட்டேன் என்று கூறியுள்ளார். மலேசியாவை ஆளும் பக்கத்தான் ஹரப்பானில் அங்கம் வகிக்கும் கெஅடிலான் ரக்யாட் கட்சியின் தலைவரான அன்வர் இப்ராஹிம் இரண்டு ஆண்டுகளில் பிரதமராக்கப் படுவார் என்று தேர்தலில் வாக் குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விவ காரத்தில் கருத்திணக்கம் காணப்பட்டுள்ளதாக அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார். “கெஅடிலான் ராக்யாட் கட்சித் தேர்தலுக்கே தற்போது முன்னுரிமை வழங்கப்படும்,” என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

‘நெரிசலைக் குறைக்க சிங்கப்பூர்-ஜோகூர் ரயில் திட்டம் அவசியம்’

ஜோகூர்பாரு: ஜோகூர் பால நெரிசலைக் குறைக்க சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையிலான ரயில் இணைப்புத் திட்டம் விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று ஜோகூர் விரும்புகிறது. ஜோகூர் பாலத்தில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளதால் இதை சமாளிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று ஜோகூர் முதலமைச்சர் ஒஸ்மான் சபியான் கூறினார். அந்த ரயில் திட்டம் 2019ஆம் ஆண்டு மத்தியில் தொடங்கும் என்று தாங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

லொம்போக் பள்ளிவாசல் இடிபாடுகளில் தேடும் பணி தீவிரம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் லொம்போக் தீவை ஞாயிற்றுக் கிழமை உலுக்கிய நிலநடுக்கத் தில் உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 105ஆக உயர்ந்துள்ள நிலையில் நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த ஒரு பள்ளிவாசல் இடிபாடுகளில் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வடலொம்போக் பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசல் இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாகக் கூறப் பட்டது. அவர்களில் சிலர் உயிரு டன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். மண் தோண் டும் இயந்திரத்தைப் பயன்படுத்தி மீட்புக் குழுவினர் தேடி வரும் வேளையில் கிராம மக்கள் அந்த இடத்தில் கூடியுள்ளனர்.

குற்றச்சாட்டுகளை மறுத்த நஜிப்

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது மூன்று புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ள நிலையில் அந்தக் குற்றச்சாட்டுகளை அவர் மறுத் துள்ளார். கோலாலம்பூரில் உள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் திரு நஜிப் மீது கள்ளப்பணம் பரிமாற்றம் தொடர் பில் நேற்று மூன்று குற்றச்சாட்டு கள் சுமத்தப்பட்டன. 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கும் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கும் இடைப் பட்ட காலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் கிடைத்த மொத்தம் 42 மில்லியன் ரிங்கிட் (S$14.1 மில்லியன்) தொகையை திரு நஜிப் பெற்றுக்கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடும் வறட்சி

சிட்னி: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் என்றும் இல்லாத அளவுக்கு தற்போது கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதை ஆஸ்திரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கிழக்கு ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் இது மிகவும் மோசமான வறட்சியாகக் கூறப்படுகிறது. அங்கு 100% வறட்சி காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உற்பத்தியாகும் வேளாண்மைப் பொருட்களில் கால்வாசிப் பொருட்கள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில்தான் உற்பத்தியாகிறது. தற்போது இங்கு கடும் வறட்சி நிலவுவதால் வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அவசர நிவாரண நிதிக்கு மாநில மற்றும் மத்திய அரசாங்கம் 576 டாலர் வழங்கியுள்ளது.

Pages