சிங்க‌ப்பூர்

இக்காலகட்டத்தில் உலகம் நிலையற்ற தன்மையில் இருப்பதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சிங்கப்பூர் சரியானப் பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. அந்தப் பாதை 2024ஆம் ஆண்டுக்கான வேகமான பொருளியல் வளர்ச்சிக்கு இட்டுச் செல்கிறது.
பதவி விலகும் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோவி அந்நாட்டில் மேற்கு ஜாவாவில் உள்ள போகோர் நகரில் பிரதமர் லீயை சந்திக்க உள்ளார்.
குறைவான கரிமத் தொழில்நுட்பம் தொடர்பாக ஆய்வு நடத்தவும் அதை மேம்படுத்தவும் $60 மில்லியன் செலவில் புதிய ஆய்வுக்கூடம் திறக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவக் கல்லூரியில் பயிற்சி பெற்றுவரும் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையைச் சேர்ந்த விமானி மேஜர் சி. தீனேஸ்வரனுக்குச் சிறந்த அனைத்துலக மாணவ அதிகாரிக்கு வழங்கப்படும் ‘சதர்ன் ஸ்டார்’ பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இப்பதக்கத்தை வென்ற மூன்றாவது சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரி இவர் ஆவார். இந்திய ராணுவக் கல்லூரியில் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இந்தப் பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.