You are here

இந்தியா

கோடிக்கணக்கில் பழைய, புதிய பணம் சிக்கியது

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லி, பெங்களூரு, கோவா, தானே, சண்டிகாரில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் கோடிக் கணக்கில் பழைய, புதிய பணம் பெட்டி பெட்டியாகச் சிக்கியது. பெங்களூருவில் நடத்திய சோதனையின்போது ரூ.2.25 கோடி மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுகளும் டெல்லியில் உள்ள கரோல் பாக் தங்கும் விடுதியில் நடத்திய சோதனையின்போது மூன்று கோடிக்கும் மேலான பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளும் நேற்று காலையில் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையே, இரண்டு கோடிக்கும் மேலான பணத்தில் பெரும்பாலானவை புதிய நோட்டு களாக இருந்த நிலையில் சண்டி காரில் பறிமுதல் செய்யப்பட்டுள் ளது.

மகளின் திருமணப் பரிசாக ஏழைகளுக்கு 90 வீடுகள்

அவுரங்காபாத்: மகளின் திரு மணத்தை முன்னிட்டு 90 ஏழை களுக்குத் தந்தை ஒருவர் வீடு கட்டிக் கொடுத்துள்ள சம்பவம் மக்கள் மனதில் நெகிழ்ச்சியை நிறைத்துள்ளது. மும்பையின் அவுரங்காபாத் தைச் சேர்ந்த தொழிலதிபர் மனோஜ் முனோத் தனது மகள் ஸ்ரேயாவின் திருமணத்தை முன்னிட்டு குடிசையில் வசித்து வந்த 90 ஏழைகளுக்குச் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார். அதேநேரம் தனது மகளின் திருமணத்திற்கு அவர் 70 முதல் 80 லட்சம் வரை மட்டுமே செலவு செய்திருக்கிறார். இதுகுறித்து அவரது மகள் ஸ்ரேயா கூறும்போது “இதனை எனது தந்தை கொடுத்த மிகப் பெரிய திருமணப் பரிசாகக் கருதுகிறேன்.

ஆபாசக் காணொளியால் அமைச்சர் பதவி விலகினார்

பெங்களூரு: அரசு அலுவலத் துக்குள் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக இருந்ததாக வெளி யான சர்ச்சையை அடுத்து கர்நாடக மாநில கலால்துறை அமைச்சர் தனது பதவியை விட்டு நேற்று விலகினார். தனது பதவி விலகல் கடிதத்தை முதல் அமைச்சர் சித்தராமையாவுக்கு அனுப்பிவிட்டதாக அவர் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். கர்நாடக மாநில அரசின் கலால்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் எச்.ஒய்.மேட்டி. அண் மையில் இவர்மீது குற்றம்சாட்டி ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பெண் ஒருவர், அரசு அலுவலகத் துக்குள் அமைச்சர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் மேட்டி மறுத்திருந்தார்.

வெளிநாட்டில் வேலை எனக் கூறி ரூ.25 லட்சம் மோசடி

திண்டுக்கல்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளையர்களிடம் ரூ.25 லட்சம் மோசடி செய் தவரிடம் திண்டுக்கல் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 15 பேர் இது தொடர்பாக திண்டுக்கல் காவல்துறைக் கண்காணிப்பாள ரிடம் புகார் மனு அளித்துள்ளனர். “திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினார். அதை நம்பி அவர் கேட்ட தொகையைக் கொடுத்தோம்.

மாணவர்களிடம் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க உத்தரவு

புதுடெல்லி: பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், போதைப்பொருள் பயன்பாட்டால் மாணவ- மாணவியருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக நான்கு மாதங்களுக்குள் நாடு தழுவிய ஆய்வை நடத்தும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மாணவ - மாணவியரிடையே போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க தேசிய அளவிலான ஒரு செயல் திட்டத்தை இன்னும் ஆறு மாதங்களுக்குள் ஏற்படுத்தவும் போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீய விளைவுகள் தொடர்பான அறிவுரைகளைப் பள்ளிப் பாடத் திட்டத்தில் இணைக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

வர்தா புயல்: நான்கு லட்ச ரூபாய் இழப்பீடு - முதல்வர் பன்னீர் அறிவிப்பு

‘வர்தா’ புயலாலும் மழையாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சென்னை மெல்ல மெல்ல வழக்க நிலைக்குத் திரும்பி வருகிறது. 1994ஆம் ஆண்டிற்குப் பிறகு சென்னையைப் புயல் தாக்கியிருப் பது இதுவே முதல்முறை. நேற்று மாலையில் கரைகடந்த ‘வர்தா’ புயல் சென்னையிலும் அதை ஒட்டி அமைந்துள்ள காஞ்சிபுரம், திரு வள்ளூர் மாவட்டங்களிலும் பெரும் சேதத்தை விளைவித்தது. புயல் காரணமாக சென்னையில் நால்வர், காஞ்சிபுரத்திலும் திருவள்ளூரிலும் தலா இருவர், விழுப்புரம், நாகப்பட்டினத்தில் தலா ஒருவர் எனத் தமிழகத்தில் பத்துப் பேரும் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் இருவரும் உயிரிழந்தனர்.

அதிமுகவை வழிநடத்த சசிகலாவுக்கு சரத் ஆதரவு

சென்னை: அதிமுகவை வழி நடத்த சசிகலா நடராஜன் முன் வர வேண்டுமென சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார் கேட்டுக் கொண்டுள்ளார். போயஸ் தோட்ட இல்லத்தில் சசிகலாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியை அவருடன் 33 ஆண்டுகளாக அன்புச் சகோதரியாக இருந்த சசிகலா வழி நடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளதாகத் தெரிவித்தார். “அதிமுக தோழர்களும், தோழமைக் கட்சியினரும் ஜெயலலிதா எந்த இலக்கை நோக்கி கடந்த தேர்தலில் பயணித்தாரோ அதை முழுமையாக அடைய சசிகலா எடுக்கும் முடிவுகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதற்கான நம்பிக்கையை சின்ன அம்மா சசிகலாவுக்கு அனைவரும் தர வேண்டும்.

ஊர் திரும்ப முடியாமல் தவித்த வெளியூர் பயணிகள்

சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஊருக்குச் செல்ல முடியா மல் நூற்றுக்கணக்கான பயணிகள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தவித்தனர். நேற்று ரயில் போக்குவரத்து ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பியது. இதையடுத்து சில வழித் தடங்களில் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்ட தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்னும் ஏராளமானோர் காத்துக் கிடக்கின்றனர். படம்: தகவல் ஊடகம்

தொண்டு நிறுவனம் என்ற பெயரில் பல பெண்களிடம் ரூ.33 லட்சம் மோசடி

குமரி: தொண்டு நிறுவனம் என்ற பெயரில் பல பெண்களிடம் பணம் வசூலித்து ரூ.33 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரியைச் சேர்ந்த சோபிராஜன், திருச்சியில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் செல்வராஜ் ஆகிய இருவரும் பெண்களுக்கு என தங்களிடம் பல வளர்ச்சி திட்டங்கள் இருப்பதாகவும் தங்கள் தொண்டு நிறுவனத்தில் முதலீடு செய்தால் குறைந்த வட்டிக்கு பணமும் ரூ.4 லட்சத்தில் வீடும் கட்டித் தரப்படும் என்று கூறியதாகவும் தெரிகிறது. இதை நம்பி திண்டுக்கல், திருச்சி பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இத்தொண்டு நிறுவனங்களில் ரூ.1,500 வீதம் செலுத்தியுள்ளனர்.

எஸ்.குருமூர்த்தி: செல்லாத பணம் நடவடிக்கை பொக்ரானுக்குச் சமம்

புதுடெல்லி: ரூபாய் நோட்டை செல்லாமல் செய்த மத்திய அரசின் நடவடிக்கை பொக்ரானுக்குச் சமம் என்று ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்துள்ளார். பழைய ரூ. 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8ஆம் தேதி நள்ளிரவு அறிவித்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை யால் நாட்டில் கடுமையான பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் நீண்ட வரிசையில் பணத்தை மாற்ற காத்து நிற்கின்றனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவி வந்தாலும் சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Pages