You are here

தலையங்கம்

அரசியல் கடலில் கலக்கும் காவிரி ஆற்றுப் பிரச்சினை

ஒரு கண்டத்திற்கு உரிய அத்தனை இயற்கை இயல்புகளையும் கொண்ட இந்தியா துணைக் கண்டமாகத் திகழ்கிறது. பல மொழி, பல கலாசார பூமியாக இருக்கின்ற அந்த நாடு, பல மாநிலங்களாக மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு இருக்கிறது.

இருந்தாலும் காடுகள், மலைகள், நதிகள் போன்ற பிளவுபடாத இயற்கை வளங்களை எல்லா மாநிலங்களும் பகிர்ந்து பயன்படுத்தி வருகின்றன. வற்றாத ஜீவநதிகளும் குறிப் பிட்ட பருவத்தில் மட்டும் நீர் நிரம்பி ஓடும் ஆறுகளும் அந்த நாட்டில் அதிகம்.

வன்முறையால் ஏற்பட்ட கறை அகல வேண்டும்

ஞாயிறு 25.3.2018

இலங்கையில் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை ஒடுக்க நாடு தழுவிய அளவில் அவசரகால நிலையைப் பிரகடனப் படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது அந் நாட்டிலுள்ள சமூக பிளவின் ஆழத்தை வெளிப்படுத்தியது. 2009ஆம் ஆண்டு முடி வுக்கு வந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பல்லாண்டுகளாக நடைபெற்ற பிரிவினை வாதப் போருக்குப் பின் கடும் நடவடிக்கையை அந்நாட்டு அரசாங்கம் எடுத்திருப்பது இதுவே முதல் முறை.

சட்டம், ஒழுங்கைச் சீரழிக்கும் சிலை உடைப்பு அரசியல்

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சிலை களுக்கு மனிதர்களைவிட அதிக மதிப்பு, மரி யாதை, அந்தஸ்து எல்லாம் உண்டு. திராவிடர் கள் அதிகம் வாழ்கின்ற பகுதி என்று வரலாறு எடுத்துக்காட்டும் தமிழ்நாட்டில், ‘நடுகல்’ என்ற ஒரு வழக்கம் இன்று நேற்றல்ல, தொன்று தொட்டே இருந்துவருகிறது.

நாட்டுக்கும் வீட்டுக்கும் பயன்தரும் வரவுசெலவுத் திட்டம்

ஒரு நாட்டின் அரசாங்கம் ஆண்டுதோறும் தனது நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யும் வரவுசெலவுத் திட்டம் (பட்ஜெட்) என்பது அந்த நாட்டின் வருடாந்திர நிதி அறிக்கை. நடப்பு நிதி ஆண்டில் அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கும்; செலவினம் எவ்வளவு இருக்கும் என்பதை எல்லாம் வரையறுப்பது அந்த அறிக்கைதான்.

இந்திய பட்ஜெட் - கட்சிக்கும் தேவை, நாட்டுக்கும் அவசியம்

இந்தியாவில் பொதுத்தேர்தல் மூலம் பொது மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு ஆட்சி அமைக்கும் எந்த ஓர் அரசாங்கமும் தனது உடனடி அரசியல் முன்னுரிமைகளுக்கும் ஒட்டுமொத்த பொருளியல் வளர்ச்சியைச் சாதிக்கத் தான் எடுக்கும் முயற்சிகளுக்கும் இடையில் செம்மையான ஒரு சமநிலையைக் காணவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் ஆண்டுதோறும் புதிய வரவுசெலவுத் திட்டத் தைத் தாக்கல் செய்துவருகின்றன.

ஆசியான்-இந்தியா இரண்டும் சேர்ந்து செழிக்க சிறந்த வாய்ப்பு

தெற்காசியாவில் அமைந்திருக்கும் இந்தியா வும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளின் 10 நாடுகளும் தங்களுக்கிடையே பலதுறை உறவுகளை இன்னும் அணுக்கமாக்கி மேலும் பலப்படுத்த வேண்டும் என்பதை மிக முக்கிய மான ஒன்றாக இப்போது கருதுகின்றன.

தமிழ் உணர்வை வளர்க்கும் தமிழ்மொழி விழா

சிங்கப்பூரில் ஆண்டுமுழுவதும் தமிழ் சார்ந்த பல நிகழ்வுகள் நடைபெற் றாலும், ஏப்ரல் மாதத்தின் தமிழ்மொழி விழா அனைவரது உள்ளத்திலும் உணர்விலும் நீங்கா இடம்பெற்றுள்ளது. தமிழர் மொழி, கலை, பண்பாடு, கலாசாரம் சார்ந்த கூறுகளைக்கொண்ட படைப்புகளைப் பொதுமேடையில் வெளிக்கொணரத் தளம் அமைத்து, வயதுவரம்பின்றி அனைவருக்கும் சரி சம வாய்ப்பு அளிப்பதே தமிழ்மொழி விழாவின் தலையாய நோக்கமாகும்.

பொய்ச் செய்திகளால் பூமிக்குக் கேடு

பொய்யான தகவல்களை மெய்போலக் கூறி னால், அதை நம்புவோர் பலர் இருக்கலாம். கடந்த ஆண்டில் அது பற்றியே அதிகம் பேசப் பட்டது. அதனால்தான் பல நாடுகளில் வதந்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் சிங்கப்பூரில் வதந்திகளுக்கு எதிராகவும் பொய்யான தகவல்களுக்கு எதி ராகவும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறிய நாட்டுத் தலைவர்கள், அவற்றைக் கட்டுப்படுத்தவும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆய்வுகளை நடத்தவும் பத்துப்பேர் கொண்ட ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளனர். நமது நாடாளுமன்றமும் அதற்கு இணக்கம் தெரிவித்துவிட்டது.

விடைபெறுகிறது 2017

இன்றோடு முடிவடைகிறது 2017ஆம் ஆண்டு. உள்ளூரி லும் உலகளவிலும் பல படிப்பினைகளையும் அனுபவங் களையும் போதிக்கக்கூடிய பற்பல சம்பவங்களை இந்த ஆண்டில் நாம் கண்டோம்.

சிங்கப்பூரில் ஒரு குறிப்பிட்ட இனத்தவரை அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுப்பதற்காக முதன்முதலாக தேர்தல் நடந்ததும் அதன்மூலம் 47 ஆண்டுகளுக்குப் பிறகு மலாய்க்காரர் ஒருவரை அதிபர் பதவியில் நாடு கண்டதும் இந்த ஆண்டில்தான். எம்ஆர்டி வழித்தடத்தில் முதன் முதலாக வெள்ளம் ஏற்பட்டதும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ரயில் மீது மற்றொரு ரயில் மோதி சுமார் 35 பேர் காயம் அடைந்ததும் 2017ல்தான்.

வெற்றியில் தோல்வியும் தோல்வியில் வெற்றியும்

இந்தியாவின் குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றி அளித்திருக் கின்றன. இமாச்சலப் பிரதேசத்தில் 2012ல் 26 இடங்களை மட்டுமே பெற்றிருந்த பாஜக, இப்போது 40க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடித்து ஆட்சியை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து கைப்பற்றி இருக்கிறது.

Pages