பயங்கரவாதம்

பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான சிங்கப்பூரின் விழிப்புநிலையைச் சோதிக்கும் வகையில், ஏப்ரல் 30, மே 1 ஆகிய தேதிகளில், பல்வேறு அரசாங்க அமைப்புகள் இணைந்து பயங்கரவாதத் தடுப்பு பாவனைப் பயிற்சியில் ஈடுபட்டன.
லண்டன்: வடகிழக்கு லண்டனில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) காலை வேளையில் ஆயுதத்தால் சிலரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆடவர் ஒருவரைக் காவல்துறை கைதுசெய்தது.
கோவை: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் கோவையில் குண்டு வெடிப்புச் சம்பவத்தை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்த தகவல் தெரிய வந்துள்ளது.
சிட்னி: சிட்னியில் உள்ள தேவாலயத்தில் ஏப்ரல் 15ஆம் தேதியன்று கத்திக்குத்துச் சம்பவம் நிகழ்ந்தது. இதில் தேவாலயத்தின் பேராயர் உட்பட குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர்.
புதுடெல்லி: இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த முயற்சி செய்துவிட்டு பாகிஸ்தானுக்குத் தப்பியோடி அங்கு பதுங்கிகொண்டால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பத்திரமாக இருக்கலாம் என்று பயங்கரவாதிகள் நினைத்தால் அது மிகவும் தவறு என்று இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏபர்ல் 5ஆம் தேதி சிஎன்என் நியூஸ் 18 ஒளிவழிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.