You are here

திரைச்செய்தி

‘எழுமின்’

‘எழுமின்’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடலைப் பாடியுள்ளார் தனுஷ். விவேக் முதன்மைக் கதாபாத்திரத் தில் நடித்துள்ள இப்படம் தற் காப்புக் கலையின் சிறப்புகளை விவரிக்கும் படைப்பாக உருவாகி உள்ளது. தற்காப்புக் கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்கள் எதிர் கொள்ளும் சவால்கள்தான் கதை யாம். விவேக்குக்கு இணையான கதாபாத்திரத்தில் தேவயானி நடித்துள்ளார்.

‘வில்லத்தனம் பிடிக்காது’

‘தமிழ்ப் படம் 2’ மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டார் இளம் நாயகி ஐஸ்வர்யா மேனன். ‘ஆப்பிள் பெண்ணே’, ‘வீரா’ உள்ளிட்ட படங்க ளில் ஏற்கெனவே தலைகாட்டி இருந்தாலும் இப்போது தான் ரசிகர்கள் தன்னைக் கவனிக்கத் தொடங்கி இருப்பதாக உற்சாகத்துடன் சொல்கிறார் ஐஸ்வர்யா. தற்போது தமிழில் மூன்று படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளதாம். அதற்காக எல்லா வாய்ப்புகளையும் ஏற்காமல், மனதுக்குப் பிடித்தமான, நல்ல கதைகளில் மட்டுமே நடிப்பது என முடிவெடுத்துள்ளாராம்.

ஐஸ்வர்யா நடிக்க வந்து 5 ஆண்டுகள் ஆகிறது. இருப்பினும் மூன்று தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஏன் இந்த இடைவெளி?

இனியாவின் இசைத்தொகுப்பு

தற்போது திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் இசைத்தொகுப்புகளை வெளியிடுவது, குறும்படங்கள் தயாரிப் பது எனப் பல்வேறு விஷயங்களில் கவ னம் செலுத்தி வருகிறார்கள் இளம் நாயகிகள். அந்த வகையில் இசைத் தொகுப்பு ஒன்றைத் தயாரித்துள்ளார் நடிகை இனியா.

தனக்கு நடனத்தின் மீது அதிக ஆர்வம் உண்டு என்று குறிப்பிடுபவர் தற்போது ‘மியா’ என்ற காணொளி இசைத்தொகுப்பைத் தயாரித்துள்ளாராம். நடனத்தில் பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் ஓர் இளம் பெண் அதற்காக கடுமையாக உழைக்கி றாள். உலகளவில் நல்ல நடனக் கலை ஞர் எனப் பெயரெடுப்பதே மியாவின் லட்சியம்.

பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ள படம் ‘செம போத ஆகாதே’

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா, மிஷ்டி, அனைகா சோதி நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘செம போத ஆகாதே’. அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக், ஆடுகளம் நரேன், யோகி பாபு, கும்கி அஸ்வின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். “இது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம். ரசிகர்களின் ரசனைக்கேற்ப காட்சிகளை அமைத்துள்ளோம். குறிப்பாக இளையர்களை வெகுவாகக் கவரும்,” என்கிறார் பத்ரி வெங்கடேஷ்.

12 பாடல்களுடன் வெளியாகும் புதுப்படம் ‘பியார் பிரேமா காதல்’

‘பியார் பிரேமா காதல்’ படத்தில் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக அதன் இயக்குநர் தெரிவித்துள் ளார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பொதுவாக தமிழ் ரசிகர்கள் பாடல்களை அதிகம் விரும்பி, ரசித்து வரவேற்பார்கள். அதனால் திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்பே அவற்றில் இடம்பெறும் பாடல்கள் முதலில் வெளியாகும். பல படங்களின் வெற்றியைப் பாடல்கள் மட்டுமே தீர்மானித்துள் ளன.

ஜமீன் வாரிசாக சிவகார்த்திகேயன்

பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணியில் அடுத்ததாக உருவாகும் படம் ‘சீமராஜா’. இந்தப் படத்தில் சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகிபாபு, கீர்த்தி சுரேஷ், கே.எஸ்.ரவிக்குமார் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’, ‘வேலைக்காரன்’ படங்களைத் தயாரித்த ஆர்.டி.ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இமான் இசையில் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். கிராமங்களில் இப்போதும் ஜமீன்தார்கள் இருக்கிறார்கள்.

‘பாலிவுட்’டில் கால் பதிக்கிறார் அமலாபால்

அமலாபாலின் நடிப்பில் அண்மையில் வெளிவந்தது ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. இந்தப் படம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும்படியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வருவதாகக் கூறி வந்த அமலாபால் தற்பொழுது இந்தியில் நடிக்க தனக்கு வாய்ப்புக் கிடைத்திருப்பதாகவும் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறியிருக்கிறார். அமலாபாலின் நடிப்பில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ‘தெய்வத்திருமகள்’, ‘வேட்டை’, ‘தலைவா’, ‘நிமிர்ந்து நில்’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘திருட்டுப்பயலே=2’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய படங்கள் இருந்தன.

மாணவிகளைப் பாராட்டிய வரலட்சுமி கல்வியில் கவனம் செலுத்தும்

குழந்தைகளைப் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும் என்கிறார் நடிகை வரலட்சுமி. அண்மையில் படப்பிடிப்புக்காக கிராமப்புறப் பகுதிக்குச் சென்றிருந்தாராம். அங்குள்ள சில குழந்தைகள் தினமும் பள்ளிக்கு நடந்து செல்வதைக் கவனித்தவர் அவர்களில் சிலரிடம் பேச்சுக் கொடுத்திருக்கிறார். அப்போது அச்சிறுவர் சிறுமியர் தினமும் 7 கி.மீ. தூரம் நடந்தே பள்ளிக்கூடம் சென்று வருவதை அறிந்து ஆச்சரியமும் வருத்தமும் அடைந்தாராம். உடனடியாக மறுநாளே அக்குழந்தைகளில் சிலரைத் தனது காரில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். “அந்தக் குழந்தைகளின் முகத்தைப பார்க்க வேண்டுமே... அப்படி ஓர் உற்சாகம்.

‘சந்தோஷத்தில் கலவரம்’

அறிமுக இயக்குநர் கிராந்தி பிரசாத் கைவண்ணத்தில் உருவாகி வருகிறது ‘சந்தோஷத்தில் கலவரம்’. நிரந்த், ருத்ரா, ஆர்யன், ரவி மரியா, ‌ஷிவானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது தீய சக்திக்கும் நல்ல சக்திக்கும் இடையே நடக்கும் போராட்டத்தைக் களமாகக் கொண்டு உருவாகியுள்ளது. படம் முழுவதும் திகில் காட்சிகள் நிறைந்திருக்குமாம். ஹாலிவுட்டைச் சேர்ந்த பௌலியஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வனப்பகுதியில் முக்கிய காட்சிகளை அற்புதமாகப் படமாக்கி உள்ளாராம். அன்பு, காதல், நட்பு, நகைச்சுவை, மோதல் என அனைத்தும் அம்சங்களும் நிறைந்த படமாக இது உருவாகி இருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர்.

பூனம்: அவமானப்பட வேண்டியுள்ளது

திரையுலகில் பாலியல் தொல்லை நிலவுவதாக பல நடிகைகள் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார் பூனம்கவுர். தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியைத் தொடர்ந்து, இவரும் தயாரிப்பாளர் ஒருவர் மீது புகார் கூறியுள்ளார். அவரது பெயரைக் குறிப்பிடாவிட்டாலும், அத்தயாரிப்பாளர் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர் என சுட்டிக்காட்டி உள்ளார். “அந்தத் தயாரிப்பாளர் நான் நடித்துள்ள படங்களை வெகுவாகப் பாராட்டினார். பிறகு முன்னணி நாயகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும் கூறினார். “இதையடுத்து எனது அம்மாவுடன் அவரது அலுவலகம் சென்றேன். அப்போது அவரின் முகம் மாறியது.

Pages