You are here

விளையாட்டு

ஹேல்ஸ் அதிரடி ஆட்டம்

படம்: ராய்ட்டர்ஸ்

கார்டிஃப்: முதல் போட்டியில் சிறப் பாகச் செயல்பட்ட முன்வரிசைப் பந்தடிப்பாளர்கள் சோபிக்காததா லும் சுழற்பந்து வீச்சை இங்கிலாந்து அணியினர் திறம்பட எதிர்கொண் டதாலும் இரண்டாவது டி20 கிரிக் கெட் போட்டியில் இந்திய அணி வெற்றியை இழக்க நேரிட்டது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, நேற்று அதி காலை நடந்த இரண்டாவது ஆட்டத்திலும் வெல்வதன்மூலம் தொடரைக் கைப்பற்றும் ஆவலுடன் அவ்வணி களமிறங்கியது.

வெற்றிக் கனவு தகர்ந்ததால் விரக்தியில் மூழ்கிய பிரேசில்

 படம்: ராய்ட்டர்ஸ்

உலகக் கிண்ண ஆட்டங்களில் பல வியப்புகளும் விந்தைகளும் நிகழ்ந்தபோதிலும் பிரேசிலை பெல்ஜியம் வீழ்த்தி சாதனை படைத்ததுதான் ஆக அண்மைய வியப்பு. ஐந்து முறை உலகக் கிண்ணத்தை வென்ற பிரேசில் அரையிறுதிக்கு முன்னேற முடி யாமல் 2=1 என்ற கோல் கணக் கில் தோற்றுப்போனதை அந்த அணியின் ரசிகர்களால் எளிதில் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதிலும் கடைசி நம்பிக்கை யாக நெய்மாரின் கோலை எதிர் பார்த்த ரசிகர்கள் ஏமாந்து தவித் தனர். வளைந்து அடித்த நெய் மாரின் பந்து கோல் ஆக வேண் டியது. அப்படி ஆகியிருந்தால்கூட ஆட்டம் சமன் கண்டிருக்கும்.

டென்னிஸ்: 4வது சுற்றில் ஃபெடரர்

லண்டன்: ஒன்பதாவது முறையாக விம்பிள்டன் பொது விருது பட்டத்தைக் குறிவைத்துக் களம் இறங்கியுள்ள சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் நான்காம் சுற்றுக்குள் எளிதாக நுழைந்தார். நடப்பு வெற்றியாளரான 36 வயது ஃபெடரர் மூன்றாம் சுற்றில் தம்மை எதிர்த்து விளையாடிய ஜெர்மானியர் யான் லெனர்ட் ஸ்ட்ரஃப்பை 6-3, 7-5, 6-2 என நேர் செட்களில் வீழ்த்தினார். அடுத்த சுற்றில் அவர் பிரெஞ்சு ஆட்டக்காரர் ஏட்ரியன் மனரனோவுடன் பொருதவிருக்கிறார். முன்னதாக, பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்றில் ஐந்து முறை வெற்றியாளரான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் தோற்று வெளியேறினார்.

அரையிறுதியில் அடியெடுத்து வைக்க பேரார்வம்

ரஷ்ய அணியின் தற்காப்பு வீரர் இலியா குத்தெபோவ்.

சோச்சி: முதற்சுற்று ஆட்டங் களில் அருமையான செயல் பாட்டை வெளிப்படுத்திய ரஷ் யாவும் குரோவே‌ஷியாவும் இன் றிரவு நடக்கவுள்ள காலிறுதி யிலும் அதைத் தொடர்ந்து அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்புடன் உள்ளன. உலகக் கிண்ணத் தொட ரில் பங்கேற்கும் அணிகளில் ஆகப் பிந்திய நிலையில், அதா வது உலகத் தரவரிசையில் 70வது இடத்தில் இருக்கிறது ரஷ்யா. போட்டிகளை ஏற்று நடத்தும் நாடு என்ற அடிப்படை யில் வாய்ப்புப் பெற்றாலும், அவ் வணி உத்வேகத்துடன் ஆடி வெற்றிகளை ஈட்டி வருகிறது.

‘சுவீடனை குறைத்து மதிப்பிடக்கூடாது’

சமாரா: அரையிறுதி வாய்ப்பைக் கைப்பற்றுவதற்காக இங்கிலாந்து அணி இன்றிரவு சுவீடனுடன் பலப்பரிட்சை நடத்தவுள்ளது. சுவீடன் அணி காலிறுதிக்கு முன்னேறியதே பலருக்கு ஆச்சரிய மாக இருக்கலாம். ஆனால், “அவர்களைக் குறைத்து எடை போட்டுவிடக்கூடாது,” என சக இங்கிலாந்து வீரர்களை எச்சரித்து உள்ளார் அவ்வணியின் தற்காப்பு ஆட்டக்காரர் ஜான் ஸ்டோன்ஸ். “சுவீடன் திறமையான ஆட்டக் காரர்களைக் கொண்ட, கட்டுக் கோப்பான அணி. அதனால்தான் அவர்கள் இந்த நிலையை எட்டி உள்ளனர்,” என்றார் ஸ்டோன்ஸ். இங்கிலாந்து அணியின் முன் னாள் பயிற்றுவிப்பாளர் ஸ்வென் கோரன் எரிக்சனும் இதை எதி ரொலித்துள்ளார்.

காற்பந்துக் களத்தில் கடும் யுத்தம்

கஸன்: நடப்பு உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரில் ரசிகர்களின் அதிக ஆதரவைப் பெற்றுள்ள அணிகளாகத் திகழும் பிரே சிலும் பெல்ஜியமும் அரையிறுதி வாய்ப்பிற் காக இன்றிரவு களத்தில் நேருக்கு நேர் மல்லுக்கட்டவுள்ளன. வலுமிக்க அணியாகக் களம் கண்டு இருக்கும் பிரேசில், கடந்த மூன்று தொடர் களில் இரண்டு முறை காலிறுதிச் சுற்றுடன் வெளியேறியது. 2014ல் சொந்த மண்ணில் நடந்த போட்டிகளில் நான்காமிடம் பிடித்தது. ஆகையால், 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிண்ணத்தை வென்று, நாட்டிற்குப் பெருமை சேர்க்கவேண்டும் எனும் சுமை பிரேசில் வீரர்களின் தோள்களில் உள்ளது.

அணிக்குத் திரும்பிய இங்கிலாந்து வீரர்

மனைவியின் பிரசவத்திற்காக தாய்நாடு சென்றதால் கொலம்பியாவிற்கு எதிரான காலிறுதிக்கு முந்திய சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஃபேபியன் டெல்ஃப் (படம்) விளையாடவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில் தம் மனைவி பெண் குழந்தையை ஈன்றெடுத்தபின், டெல்ஃப் மீண்டும் ரஷ்யா திரும்பி அணியுடன் இணைந்தார்.

பிரான்சுக்கு அதிக வாய்ப்பு நிஸ்னி நோவ்கொரோட்: கிண்ணம்

வெல்ல வாய்ப்புள்ளதாகப் பலரும் முன்னுரைத்த ஐந்து அணிகளில் இரண்டு மட்டுமே காலிறுதியில் உள்ளன. அதில் ஒன்று, ஐந்து முறை வெற்றியாளரான பிரேசில். மற்றொன்று, 1998 இறுதிப் போட் டியில் அதை வீழ்த்திய பிரான்ஸ். இந்த நிலையில், இரண்டாவது முறையாக வென்று கிண்ணத்தை உயர்த்திப் பிடிக்கும் முனைப்புடன் இருக்கும் பிரான்ஸ், இன்று நடக்க உள்ள முதலாவது காலிறுதியில் உருகுவேயுடன் மோதுகிறது. உலகக் கிண்ணப் போட்டிகளில் மட்டுமல்லாது, நட்புமுறை ஆட்டங் களிலும் பிரான்ஸ் ஒருமுறைகூட உருகுவேயை வென்றதில்லை என்பது வரலாறு.

இன்னும் திருப்தி அடையவில்லை - யான்ன ஆண்டர்சன்

படம்: ராய்ட்டர்ஸ்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது மகிழ்ச்சி தான், ஆயினும் தாங்கள் இன்னும் மனநிறைவு அடையவில்லை என் கிறார் சுவீடன் பயிற்றுவிப்பாளர் யான்ன ஆண்டர்சன். சுவிட்சர்லாந்துக்கு எதிரான காலிறுதிக்கு முந்திய சுற்று ஆட் டத்தின் 66வது நிமிடத்தில் சுவீ டனின் எமில் ஃபோர்ஸ்பர்க் உதைத்த பந்து, எதிரணி வீரரின் காலில் பட்டு திசை மாறி வலைக் குள் புகுந்தது. ஆட்டத்தில் விழுந்த ஒரே கோலும் இதுதான் என்பதால் சுவீடன் 1-0 என்ற கணக்கில் வென்று, 1994ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறை யாகக் காலிறுதிச் சுற்றில் அடி எடுத்து வைத்துள்ளது.

இலக்கை நோக்கி நடைபோடும் இங்கிலாந்து

மாஸ்கோ: உலகக் கிண்ணப் போட்டிகளில் இதற்குமுன் மூன்று முறை பெனால்டி வாய்ப்புகளை எதிர்கொண்டபோதும் அவற்றில் ஒருமுறைகூட வெல்லாமல் அடைந்த ஏமாற்றத்திற்கு, நேற்று அதிகாலை மருந்து தேடிக் கொண்டது கிண்ணத்தைக் கைப்பற்றும் கனவுடன் களம் இறங்கி இருக்கும் இங்கிலாந்து அணி. கொலம்பிய அணிக்கெதிரான காலிறுதிக்கு முந்திய சுற்று ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் பெனால்டி மூலம் கோலடித்து தமது அணியை முன்னிலை பெறச் செய்தார் இங்கிலாந்து அணித்தலைவர் ஹேரி கேன். நடப்புத் தொடரில் அவர் அடித்த ஆறாவது கோல் இது.<ப்> ஆட்டம் 90 நிமிடங்களைக் கடந்தும் அதே நிலை நீடித்ததால் இங்கிலாந்து அணி வெல்வது உறுதி எனக் கருதப்பட்டது.

Pages