புதிதாக 218 பேருக்கு கொரோனா

சிங்கப்பூரில் புதிதாக 218 பேரைக் கொரோனா நோய் தொற்றியுள்ளது. இதனுடன் இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42,313க்குக் கூடியுள்ளது. இவர்களில் 34, 932 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

புதிதாக பாதிக்கப்பட்டோரில் ஒருவர் சமூகப் பரவலால் பாதிக்கப்பட்ட வேலை அட்டைதாரர்.  பாதிக்கட்டோரில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் தங்குபவர்கள். 

மேல் விவரங்கள் இன்று இரவு அறிவிக்கப்படும்.

நேற்று அறிவிக்கப்பட்ட புதிய நோயளிகளில் நன்யாங் தொழில்நுட்ப மாணவரும் ஒருவர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. 

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலிருந்து அவர் பல்கலைக்கழகத்திற்குச் செல்லவில்லை என்றும் அவருக்கு இந்நோய் இருப்பது கடந்த சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது என்று அமைச்சு கூறியது.

ஞாயிற்றுக்கிழமையில் 718 பேர் வீடு திரும்பிய நிலையில் இதுவரை 34, 932 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது ஒருவர் மட்டும் கவலைக்கிடமாக உள்ளார்.

மொத்த 179 பேர் மருத்துவமனையில் உள்ளனர்.  6, 948 பேர் சமூக பராமரிப்பு வசதிகளில் தங்கி ஓய்வெடுத்து வருகின்றனர்.