இந்தியாவில் கிருமித்தொற்று பரிசோதனை தீவிரமாகிறது

இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றுப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் எண்ணிக்கை இம்மாதம் நாள் ஒன்றுக்கு 77 மில்லியனை எட்டியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கிருமித்தொற்றுப் பரிசோதனையை அதிகரிப்பதன் மூலம் கிருமி தொற்றியோரை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு தனிமைப்படுத்தி அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க முடிவதாகவும் அதன் விளைவாக மரண விகிதத்தைக் குறைவாக வைத்திருக்க முடிவதாகவும் அமைச்சு கூறியது.

“கிருமி பரவத் தொடங்கிய ஜனவரியில் நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு மட்டுமே கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த எண்ணிக்கை அக்டோபர் 3ஆம் தேதி 77 மில்லியனை எட்டிவிட்டது. இந்த எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

“கிருமித்தொற்று விகிதம் படிப்படியாக குறைந்துவரும் வேளையில், கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பரிசோதனை முக்கிய பங்கு வகிக்கிறது,” என்று சுகாதார அமைச்சு அதன் டுவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டது.

இந்தியாவில் கிருமித்தொற்று விகிதம் தற்போது 8.32 விழுக்காடாக இருப்பதாக அது தெரிவித்தது.அந்நாட்டில் நேற்று முன்தினம் மேலும் 1,069 மரணங்கள் பதிவான நிலையில், மரண எண்ணிக்கை 100,000ஐ கடந்துவிட்டது.

உலகிலேயே தினந்தோறும் ஆக அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் இந்தியாவில்தான் பதிவாகி வருகின்றன. இந்நிலையில், கிருமித்தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் இந்தியாவில்தான் ஆக அதிகம் என்று இந்திய சுகாதார அமைச்சு கூறுகிறது. இதுவரை 5.4 மில்லியன் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டதாகவும் குணமடைவோர் விகிதம் 83.84 விழுக்காடாக உள்ளதாகவும் அமைச்சு சொன்னது.

கிருமி தொற்றிய சுகாதார ஊழியர்களில் 38% பெண்கள்

இந்தியாவில் இம்மாதம் 1ஆம் தேதி வரை கிருமி தொற்றிய சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களில் 38 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் பெண்கள் என்று ‘ஐக்கிய நாடுகள் மகளிர்’ அறிக்கை தெரிவித்து இருக்கிறது. அந்நாட்டின் சுகாதார ஊழியரணியில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பெண் ஊழியர்கள் அங்கம் வகித்தாலும் அவர்களிடையே கிருமித்தொற்று விகிதம் சற்று அதிகமாக உள்ளது. ஒப்புநோக்க, உலகளவில் சுகாதார ஊழியரணியில் பெண் ஊழியர்கள் 70 விழுக்காடு அங்கம் வகிக்கின்றனர்.

இம்மாதம் 1ஆம் தேதி வரை 79,772 பெண் சுகாதார ஊழியர்களுக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக, இதுவரை 2.02 மில்லியனுக்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்களுக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வத் தகவல் தெரிவிக்கிறது.

இந்தியாவில் கொவிட்-19க்கு எதிரான போரில் பெண் சுகாதார ஊழியர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. காரணம், பெண் நோயாளிகள் பலரும் பெண் மருத்துவர்கள், தாதியரிடம் சிகிச்சை பெற விரும்புவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கிராமப்புறப் பகுதிகளில் இந்த நிலை அதிகமாக உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!