ஹாங்காங் பயணத்திட்ட பின்னடைவு சூழலில் அமைச்சர் அறிவிப்பு தற்காலிக பயண ஏற்பாடுகள்: சிங்கப்பூர் முயற்சி தொடரும்

சிங்­கப்­பூர் தற்­கா­லிக பயண ஏற்­பா­டு­களை செய்துகொள்­ளும் நோக்­கத்­து­டன் புதிய வட்­டா­ரங்­களைத் தொடர்ந்து நாடும் என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங் நேற்று அறி­வித்­தார்.

ஹாங்­காங்­கு­டன் சிங்­கப்­பூர் இத்­த­கைய முத­லா­வது ஏற்­பாட்டை செய்து கொண்டு இருந்­தது. ஆனால் அந்த ஏற்­பாடு தொடங்­க­வி­ருந்தபோது ஹாங்­காங்­கில் கிரு­மித்­தொற்று அதி­க­மா­ன­தால் கடைசி நேரத்­தில் அது நிறுத்­தப்­பட்­டது.

என்­றா­லும் சிங்­கப்­பூர் தற்­காலிக பயண ஏற்­பா­டு­களைச் செய்துகொள்­ளும் நோக்­கத்­தில் புதிய நாடு­களை நாடும் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூர் ஒரு­தலைபட்­ச­மாக தன்­னு­டைய எல்­லை­களைப் பல நாடு­க­ளுக்கு திறந்­து­விட்டு இருக்­கிறது. அத்­த­கைய நாடு­க­ளு­டன் தற்­கா­லிக பயண ஏற்­பா­டு­க­ளைச் செய்­து­கொள்ள வாய்ப்பு இருப்­ப­தாக அமைச்­சர் தெரி­வித்­தார்.

திரு ஓங், சமூக நிகழ்ச்சி ஒன்­றில் கலந்­து­கொண்­டார்.

அப்­போது அவர் செய்­தி­யாளர்­க­ளி­டம் பேசி­னார்.

ஆஸ்­தி­ரே­லியா, புருணை, சீனா, நியூ­சி­லாந்து, வியட்­னாம் ஆகிய நாடு­களில் இருந்து குறு­கிய காலப் பய­ணங்­களை மேற்­கொண்டு சிங்­கப்­பூ­ருக்கு வரு­வோர் அனு­ம­திக்­கப்­ப­டு­கி­றார்­கள்.

இந்த நாடு­கள் வெற்­றி­க­ர­மான முறை­யில் கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுத்து இருக்­கின்­றன.

இந்த நாடு­க­ளி­டம் பரந்த அள­வி­லான பொது சுகா­தார கண்­காணிப்பு ஏற்­பா­டு­கள் இருக்­கின்­றன என்­ப­தால் சிங்­கப்­பூர் இவற்­றைச் சேர்ந்த பய­ணி­க­ளுக்குத் தன் கதவைத் திறந்­து­விட்டுள்ளது.

இந்­நா­டு­களில் இருந்து வரக்­கூ­டிய பய­ணி­கள் வீட்­டி­லேயே தங்­களைத் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டிய தேவையில்லை.

இருந்­தா­லும் விமானப் பயண அனு­ம­திக்கு இவர்­கள் விண்­ணப்­பிக்க வேண்­டும். சிங்­கப்­பூ­ருக்கு வரும்போது இவர்­க­ளுக்குத் தொற்று இருக்­கக்­கூ­டாது.

இங்­கி­ருக்­கும்போது அவர்­கள் 'டிரேஸ்­டு­கெ­தர்' செய­லி­யைப் பதி­வி­றக்­கம் செய்து பயன்­ப­டுத்த வேண்­டும். "சிங்­கப்­பூர் இந்த நாடு­க­ளுக்குத் தன்­ கத­வைத் திறந்­து­விட்டு இருப்­ப­தால் அவை பதி­லுக்கு இதேபோலவே செயல்­படும் என்று எதிர்­பார்க்­க­லாம்.

"சிங்­கப்­பூ­ரில் கிரு­மித்­தொற்று கட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு இருக்­கிறது. இவற்றை எல்­லாம் வைத்­துப் பார்க்­கை­யில் அநே­க­மாக அடுத்த ஆண்­டில் பல்­வேறு நாடு­களும் சிங்­கப்­பூ­ரு­டன் தற்­கா­லிக பயண ஏற்­பா­டு­களை செய்­து­கொள்ள முன்­வ­ரும் என்று நம்­ப­லாம்," என திரு ஓங் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூர்-ஹாங்­காங் தற்­காலிக பயண ஏற்­பாடு நவம்­பர் 22ஆம் தேதி தொடங்க இருந்­தது. கிறிஸ்­மஸ், புத்­தாண்­டுக்­கு இடை­யில் அந்­தப் பய­ணத்­தைத் தொடங்­கு­வது பற்றி பரி­சீ­லிக்­கப்­படும் என்­றும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

ஹாங்­காங்­கில் அண்­மை­யில் கொவிட்-19 தொற்று கூடி­விட்­ட­தால் சிங்­கப்­பூ­ரும் ஹாங்­காங்­கும் தங்­க­ளுக்­கி­டைப்­பட்ட தற்­கா­லிக பயண ஏற்­பாட்டை அடுத்த ஆண்டு தொடங்­க­லாம் என்று முடிவு செய்து இருப்­ப­தாக சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் சென்ற வாரம் தெரி­வித்­தது.

ஹாங்­காங்­கில் புதி­தாக 101 பேருக்குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­தாக கடந்த சனிக்­கி­ழமை தெரி­விக்­கப்­பட்­டது. அங்கு தொற்று கூடு­வ­தால் அதைத் தடுப்­ப­தற்­காக கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் நடப்­புக்கு வந்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!