கிருமித்தொற்று: புளோக் 559 பாசிர் ரிஸ் ஸ்திரீட் 51ல் வசிப்போருக்கு பரிசோதனை

பாசிர் ரிஸ் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றில் வசிக்கும் 243 குடியிருப்பாளர்களும் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

அந்த புளோக்கில் வசிக்கும் இரு குடும்பங்களைச் சேர்ந்த நால்வருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பரிசோதனை நடவடிக்கை இடம்பெறுகிறது.

புளோக் 559 பாசிர் ரிஸ் ஸ்திரீட் 51ல் வசிக்கும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பையும் நலனையும் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனை இடம்பெறுவதாக பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ்மண்ட் டான் இன்று (மே 23) காலை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

அந்த புளோக்கில் 79 குடியிருப்புகள் இருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் அவர் கூறினார். இளம் தம்பதிகள் முதல் பல தலைமுறை குடும்பங்கள் வரை அந்த புளோக்கில் வசிக்கின்றனர்.

புளோக் 559ஐ சுற்றியுள்ள அக்கம்பக்க புளோக்குகளில் வசிப்போர் பரிசோதனை செய்துகொள்ள தேவையில்லை என்று திரு டான் சொன்னார். இந்த மாதம் 2ஆம் தேதி முதல் புளோக் 559ல் வசிப்போரின் வீடுகளுக்குச் சென்றிருந்தவர்கள் மட்டும் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ளலாம்.

அந்த புளோக்கில் வசிக்கும் நால்வருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு முன்னதாக தெரிவித்திருந்தது.

சாங்கி விமான நிலையம் முனையம் 3ல் பணிபுரியும் 88 வயது சிங்கப்பூரர் அந்த நால்வரில் ஒருவர். இந்த மாதம் 4ஆம் தேதி அவரிடம் கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து அவர் வேலைக்குச் செல்லவில்லை.

தொற்று உறுதியான எஞ்சிய மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இல்லத்தரசியாக உள்ள 47 வயது மாது, நீச்சல் பயிற்றுவிப்பாளரான 46 வயது ஆடவர், வைட் சேண்ட்ஸ் தொடக்கப்பள்ளியில் பயிலும் 12 வயது சிறுமி ஆகியோர் அந்த மூவர்.

முன்னாள் கோரல் தொடக்கப்பள்ளி அமைந்திருந்த இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வட்டாரப் பரிசோதனை மையத்தில் குடியிருப்பாளர்களுக்கு சளி மாதிரி பரிசோதனை நடத்தப்படுகிறது. இன்றும் நாளையும் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும் பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரையும் பரிசோதனை நடத்தப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!