கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்வு ஜூன் 14 முதல் ஐவர் கூடலாம்; ஜூன் 21 முதல் உணவகத்தில் உணவு உண்ணலாம்

சமூ­கத்­தில் தொற்று குறைந்து வரு­வ­தால், வரும் திங்­கள்­கி­ழ­மை­யி­லி­ருந்து இரண்டு கட்­டங்­க­ளாக கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­படும்.

முதல் கட்­ட­மாக, ஜூன் 14ஆம் தேதி முதல் ஐவர் வரை ஒன்­று­கூ­ட­லாம் என்று சுகா­தார அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது.

நிலைமை மேலும் சீர­டைந்­தால், இரண்­டாம் கட்­டத் தளர்­வாக 21ஆம் தேதியி­லி­ருந்து உண­வகங்­கள், உணவு, பானம் விற்­ப­னை­யா­கும் இடங்­க­ளி­லும் மக்­கள் அமர்ந்து உணவு உண்­ண­லாம். வரும் 20ஆம் தேதி, தந்­தை­யர் தினம் அன்று பொது­மக்­கள் உண­வ­கங்­களில் அமர்ந்து உண்ண முடி­யாது.

மக்­கள் அதி­க­மாக பொது இடங்­கள், வேலை­யி­டங்­கள், பொதுப் போக்­கு­வ­ரத்து போன்­ற­வற்­றில் கூடு­வ­தைத் தவிர்க்­கும் நோக்­கத்­தில் வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வது வழக்­க­நி­லை­யா­கத் தொட­ரும் என்று அமைச்­சின் அறிக்கை தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளது.

"படிப்­ப­டி­யாக நாம் அதிக நட­வடிக்­கை­களை அனு­ம­திக்­கும் அதே வேளை­யில், அனை­வ­ரும் விழிப்­பு­டன் இருக்­கும்­படி கேட்­டுக்­கொள்­கி­றேன். தின­மும் சில தொற்று சம்­ப­வங்­கள் நிக­ழ­லாம். அது கிரு­மி­யின் இயல்பு.

"எனி­னும், ஒட்­டு­மொத்த தொற்று சம்­ப­வங்­க­ளும் பெரி­தான தொற்­றுக் குழு­மங்­களும் உரு­வா­கா­மல் இருப்­ப­தைத் தடுப்­பதே நோக்­கம்," என்று வர்த்­தக, தொழில் அமைச்­ச­ரும் அமைச்­சு­கள் நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரு­மான கான் கிம் யோங் நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் விளக்­கி­னார்.

சமூக ஒன்­று­கூ­டல் அளவை விரி­வு­ப­டுத்­தும் அதே வேளை­யில், உல்­லாச கப்­பல் பய­ணங்­கள், கண்­காட்­சி­கள், பொது நூல­கங்­கள் போன்ற மக்­கள் செல்­லும் இடங்களில் தற்­போது நடப்­பி­லுள்ள 25% அளவு மட்­டுமே மக்­கள் கூட­லாம் என்ற கட்­டுப்­பாடு ஜூன் 14லிருந்து 50% ஆக அதி­க­ரிக்­கப்­படும்.

அதே­போல், திரைப்­ப­டக் காட்­சி­கள், நேரடி நிகழ்ச்­சி­கள், வழி­பாட்டு நிகழ்ச்­சி­கள், திரு­மண நிகழ்ச்­சி­கள் போன்­ற­வற்­றுக்கு செல்­லும் மக்­கள் எண்­ணிக்­கை­யும் 50% ஆக அதி­க­ரிக்­க­லாம்.

இதில் 50 பேருக்கு மேல் கூடும் நிகழ்ச்­சி­க­ளுக்கு, கொவிட்-19 கிருமி பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும்.

இரண்­டாம் கட்­டத் தளர்­வாக வரும் 21ஆம் தேதி­யி­லி­ருந்து உணவு, பானக் கடை­களில் ஐவர் கொண்ட குழு கூட­லாம்.

இதில், அதி­கா­ரி­கள் அம­லாக்க நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வர் என்­றும் விதி­மீ­றல்­கள் இருந்­தால் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!