சண்முகம்: தன்னிகரில்லாத் திறனைத் தாய்மொழி தந்தது

தமிழ் இலக்­கி­யத்­தின் மூலம் ஆயி­ரக்­க­ணக்­கான ஆண்­டு­கள் நீடிக்­கும் தமிழ்­மொழி, தமிழ் கலா­சா­ரத்­து­டன் இணைய முடி­வது பெரும் வலி­மை­யைத் தந்­துள்­ளது என்­றார் சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம்.

"வாழ்­வில் எதிர்­நோக்­கும் பிரச்­சி­னை­கள், வேலை­யில் சவால்­கள் என்று வரும்­போது என் தாய்­மொழி வழங்­கிய கலா­சார அடித்­த­ளத்­திற்­குச் செல்­கி­றேன். சீனர்­களும் மலாய்க்கா­ரர்­களும் அவர்­க­ளின் சொந்த தாய்­மொ­ழி­யைப் பற்றி அவ்­வாறு சிந்­திப்­பதை என்­னால் புரிந்­து­கொள்ள முடி­கிறது," என்­றார் திரு சண்­மு­கம்.

'ரீச்' அமைப்பு, சீன நாளி­த­ழான 'சாவ்­பாவ்' இணைந்து நடத்­திய கலந்­து­ரை­யா­ட­லில் கலந்­து­கொண்டு நேற்று பேசி­னார் அமைச்­சர் சண்­மு­கம்.

அமெ­ரிக்க, மேற்­கத்­திய நாடு­க­ளின் ஆதிக்­கத்­தால் சீன, தமிழ், மலாய் போன்ற எல்லாத் தாய்­மொழி ஆற்­றல்­களும் கலா­சா­ரங்­களும் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கின்­றன என்­றும் ஆங்­கி­லம் மட்­டுமே தெரிந்­தி­ருந்­தால் நமது தனிப்­பட்ட ஆற்­ற­லும் கலா­சார அடித்­த­ள­மும் தற்­போ­தைய நிலை­யில் இருக்­கா­மல் போக வாய்ப்பு உண்டு என்­றும் மேலும் குறிப்­பிட்­டார் அமைச்­சர் சண்­மு­கம்.

'பல கலா­சார சமு­தா­யத்­தில் சீன சமூ­கத்­தின் பங்­க­ளிப்பு' என்ற தலைப்­பில் நடந்த கலந்­து­ரை­யா­ட­லில் தேசிய வளர்ச்சி, வெளி­யு­றவு மூத்த துணை அமைச்­சர் சிம் ஆன், 'ஹேரி இலி­யாஸ் பார்ட்­னர்­‌ஷிப்' நிறு­வ­னத் தின் ஆலோ­ச­கர் திரு ஹீ தெங் ஃபோங், சிங்­கப்­பூர் சீனக்

குல­ம­ர­புச் சங்­கங்­கள் சம்­மேளனத்­தின் தலை­வர் திரு டான் ஆயிக் ஹோக், நடி­க­ரும் இயக்­கு­ந­ரு­மான திரு டே பிங் ஆகி­யோர் மற்ற நான்கு பேச்­சா­ளர்­கள். இனம், சமூக நீதி குறித்த அம்­சங்­கள் பற்­றிய கலந்­து­ரை­யா­டல் அதி­க­மாக ஆங்­கில மொழி­யில் பேசப்­படுவதா­க­வும் சீன சமூ­கத் திடையே அதி­க­மான கலந்­து­ரை­யா­டல் இல்லை என்று கூறி­னார் திரு­வாட்டி சிம்.

"இனம், இன­வா­தம் போன்ற முக்­கிய அம்­சங்­களில் கலந்­துரையாடல்­கள் வேறு­பட்ட பாதை­களில் நீண்ட காலம் செல்ல முடி­யாது. கலந்­து­ரை­யா­டல் இப்­போது ஒன்­றி­ணைந்­துள்­ளது. இன­வா­தம் குறித்த பல பெரிய சர்ச்­சைக்­கு­ரிய சம்­ப­வங்­க­ளுக்­கும், 'சைனிஸ் பிரி­வி­லேஜ்' என்று பலமுறை கூறப்ப­டு­வது குறித்­தும் சீன சமூ­கம் பதில் அளிக்­க­வேண்­டும்," என்­றார் அவர்.

'சைனிஸ் பிரி­வி­லேஜ்' அதா­வது மற்ற இனத்­த­வர்­களை ஒப்­பி­டும்போது சீனர்­க­ளுக்கு அதிக சலுகை கிடைக்­கிறது என்ற சிந்­தனை சமூ­கத்­தில் அண்­மை­யில் நிலவி வரு­கிறது. அமெ­ரிக்­கா­வின் வரலாற்­றில் வெள்ளை இனத்­த­வர்­கள் கருப்பு இனத்­த­வர்­களை அடி­மைப் படுத்­திய காலத்­தில் உரு­வான சிந்­த­னை­தான் 'வயிட் பிரி­வி­லேஜ்'.

அதை அடிப்­ப­டை­யாக கொண்டு சிங்­கப்­பூர் மக்­கள் தொகை­யில் 75 விழுக்­காட்­டி­னர் சீனர்­க­ளாக இருக்­கும் நிலை­யில் வரும் சிந்­தனைதான் 'சைனிஸ் பிரி­வி­லேஜ்'.

"எந்த ஒரு சமு­தா­யத்­தி­லும் பெரும்­பான்­மை­யி­னராக இருந்­தால் அதில் குறிப்­பிட்ட நன்­மை­கள் உள்­ளன. வெளிப்­ப­டை­யாக பேசி­னால் அதை ஒப்­புக்­கொள்­ள­வேண்­டும். ஆனால் என் பார்­வை­யில் அது சலு­கைக்­குச் சம­மா­காது. பெரும்­பான்­மை­யி­ன­ராக இருப்­ப­தால் வரும் இயல்­பான நன்­மை­களும் சிறு­பான்­மை­யி­ன­ராக இருப்­ப­தால் வரும் குறை­பா­டு­களும் சலு­கை­க­ளும் அமைப்­பு சார்ந்த இன­வா­தத்­திற்கு வேறு­படும். அர­சாங்க கொள்­கை­கள் இதைச் சமா­ளிக்­கின்­றன. பெரும்­பான்­மை­யி­ன­ரும் உணர்­வு­பூர்­வ­மாக நடந்­துக்­கொள்­ள­வேண்­டும்," என்­றார் அமைச்­சர் சண்­மு­கம்.

அடிமை முறை­யால் அமெ­ரிக்­கா­வில் இன்று வரை தாக்­கம் அளித்து வரும் ஒரு விளைவுதான் வசிப்­பிட பிரித்­தல் என்று விளக்­கிய அமைச்­சர் சண்­மு­கம், இத்­த­க­வலை ஒரு வரை­ப­டம் மூலம் காட்­சிப்­ப­டுத்­தி­னார். இனத்­தால் வசிப்­பி­டம் தீர்­மா­ன­மா­கும்போது அந்த இடங்­களில் வசிப்­ப­வர்­கள் செல்­லும் பள்ளி, வாழ்க்­கைத்­த­ரம், வாழ்­வா­தா­ரம் ஆகி­ய­வற்­றில் தாக்­கம் ஏற்­ப­டு­கிறது என்று சுட்­டி­னார் சண்­மு­கம்.

"சமுதாயப் பிரிவு என்பது, என் கண்ணோட்டத்தில் ஒரு கடுமையான கெடுதல். அது எதிர்காலத் தலைமுறைகளையும் பாதிக்கும்," என்றார் அமைச்சர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!