தனியார் மருந்தகங்களை நாடுவோர் எண்ணிக்கை 50% அதிகரிப்பு

அண்மைய நாட்களாக சமூக அளவில் தொற்று இதுவரை காணாத உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில் தனியார் மருந்தகங்களும் ‘ஸ்வாப்’ பரிசோதனை செய்து தரும் தனியார் மருத்துவ நிலையங்களும் அதிக நோயாளிகளைச் சந்தித்து வருகின்றன.

‘ART’ எனப்படும் விரைவான சுயபரிசோதனைச் சாதனம் மூலம் கிருமித்தொற்று இருப்பதை அறிந்துகொண்ட பின்னர் மருத்துவ உதவி நாடுவோரும் அவர்களுள் அடங்குவர்.

மேலும் காய்ச்சல், இலேசான மூச்சுத்திணறல் அறிகுறிகள் இருப்போர், நோய்த்தொற்று அபாயத்தில் இருப்பதாக சுகாதார அமைச்சிடமிருந்து சுகாதார அபாய எச்சரிக்கை தகவல் பெற்றவர்கள் போன்றோரும் தனியார் மருந்தகங்களை நாடி வருகின்றனர்.

இந்த மருந்தகங்களில் நோயாளிகள் பெருகுவதற்கு உதாரணமாக தெம்பனிஸில் உள்ள கிராஸ்ரோட்ஸ் குடும்ப மருந்தகத்தைக் குறிப்பிடலாம்.

இந்த ஒரு மாத காலத்தில் தமது மருந்தகத்திற்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தது 50 விழுக்காடு அதிகரித்திருப்பதாக அந்த மருந்தகத்தின் இயக்குநர் டாக்டர் குவா சூன் வீ தெரிவித்தார்.

அதேபோல ஹெல்த்வே மருத்துவக் குழுமத்தைச் சேர்ந்த தனியார் மருந்தகங்களுக்கு சுகாதார அபாய எச்சரிக்கை அல்லது விழிப்புணர்வுத் தகவலுடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக அந்தக் குழுமத்தின் அடிப்படைப் பராமரிப்புப் பிரிவின் தலைவர் டாக்டர் ஜான் செங் கூறினார்.

நார்த்ஈஸ்ட் மருத்துவக் குழுமத்திற்குட்பட்ட மருந்தகங்களுக்கும் அதிக நோயாளிகள் வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காய்ச்சல் அல்லது கடுமையான மூச்சுத்திணறல் தொடர்பான தொற்றுநோய்கள் ஆகிய பிரச்சினைகளுடன் வருவோர் எண்ணிக்கை கடந்த இரு வாரங்களில் 20 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக இந்தக் குழுமத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் டான் டெக் ஜேக் தெரிவித்தார்.

சமூக அளவில் பரவும் கொவிட்-19 தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை சனிக் கிழமை 910 ஆகவும் அதற்கு மறுநாள் 1,000 ஆகவும் வேகமாக உயர்ந்தது.

குறிப்பாக, செப்டம்பர் 9ஆம் தேதி உள்ளூரில் பதிவாகும் தொற்றுச் சம்பவங்கள் 450 என்ற உச்சத்தைத் தொட்டது முதல் அந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

முன்னதாக, இலேசான மூச்சுத் திணறல் தொற்று அறிகுறிகளுடன் காணப்படும் நோயாளிகள் மருத்துவமனைகளை நாடுவதற்குப் பதிலாக ‘ஸ்வாப் அண்ட் சென்ட் ஹோம்’ எனப்படும் தனித்துவ மருத்துவ நிலையங்களுக்குச் செல்லலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.

மேலும், மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளும் பொதுப் பிரிவுகளும் அதிக நெருக்கடிக்கு ஆளாகி வருவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!