குறைந்தபட்ச குடியிருப்பு காலம் 10 ஆண்டுகள்

முதன்மை வட்­டா­ரங்­க­ளி­லும் மத்­திய வட்­டா­ரத்­தி­லும் கட்­டப்­பட இருக்­கும் வருங்­கால வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­க­ளுக்­கான குறைந்­த­பட்ச குடியிருப்பு காலம் 10 ஆண்­டாக இருக்­கும்.

மேலும் அந்த வீடு­க­ளுக்­காக வழங்­கப்­பட்ட கூடு­தல் மானி­யத்தை மறு­விற்­பனை சம­யத்­தில் அர­சாங்­கத்திடம் திருப்பித் தர வேண்டும். பத்து ஆண்டு வரை அந்த வீட்டை விற்கமுடியாது.

அத்துடன் இத்திட்டத்திற்கு உட்பட்ட வீடுகளை முழுமையாக வாடகைக்கு விடமுடியாது.

புதிய முதன்மை வட்­டார பொது வீட­மைப்பு முன்னோடித் திட்டத்தில் (பிஎல்­எச்) இடம் பெற்றுள்ள முக்­கிய அம்­சங்­களில் சில இவை. முதன்மை வட்­டார வீவக வீடு­கள் கட்­டுப்­ப­டி­யா­ன­தா­க­வும் எல்­லா­ருக்­கும் கிடைக்­கும் வகை­யிலும் இந்­தப் புதிய வீட­மைப்பு முறை உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தாக தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ தெரி­வித்­தார். இந்த முறை­யின்­கீழ் கட்­டப்­பட இருக்­கும் முதல் வீட­மைப்­புத் திட்­டம் அடுத்த மாதம் ரோச்­சோ­ரில் தொடங்­கு­கிறது.

முதன்மை வட்­டார வீடு­களை மறு­விற்­ப­னைச் சந்­தை­யில் வாங்கு­ வோ­ருக்கு வரம்­பும் விதிக்­கப்

­ப­டு­கிறது. மாத வரு­மா­னம் $14,000க்கு மிகாத குடும்­பங்­களே அந்த வீடு­களை வாங்­க­மு­டி­யும்.

அத்­து­டன் வீட்டை வாங்­கு­வோ­ரில் குறைந்­த­பட்­சம் ஒரு விண்­ணப்­பதாரராவது சிங்­கப்­பூர் குடி­ம­க­னாக இருப்­பது அவ­சி­யம்.

முதன்மை வட்­டார வீட்டு முறை­யின்­கீழ் சில வீடு­கள் வீவ­க­வின் மண­மான பிள்ளைகளுக்கு முன்­னு­ரி­மை அளிக்கும் திட்­டத்­திற்கு ஒதுக்­கப்­படும்.

விண்­ணப்­பதா­ர­ரின் பெற்­றோர் அல்­லது பிள்ளை ஒரே வட்­டா­ரத்­தில் வசித்­தால் வீடு ஒதுக்­கீட்­டில் அவ­ருக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும்.

தற்­போது, இந்­தத் திட்­டத்­தின்­கீழ் முதன்­முறை வீடு வாங்­கு­வோ­ருக்கு புதிய வீடு­களில் 30 விழுக்­காடு ஒதுக்­கப்­ப­டு­கிறது.

புதிய வீட­மைப்பு முறை­யின் நோக்­கங்­கள் குறித்து திரு லீ செய்­தி­யா­ளர்­க­ளி­டம் விளக்­கி­னார்.

முதல்­முறை வாங்­கும்­போ­தும் அடுத்­த­டுத்து மறு­விற்­ப­னைச் சந்­தை­யில் வாங்­கும்­போ­தும் முதன்மை வட்­டார பொது வீட­மைப்பு வீடு­கள் கட்­டுப்­ப­டி­யா­கக்­கூ­டி­ய­ன­வாக, எளி­தில் அணு­கக்­கூ­டி­ய­ன­வாக, எல்லா சிங்­கப்­பூ­ர­ருக்­கும் கிடைக்­கக்­கூ­டி­ய­ன­வாக இருப்­பதை உறுதிசெய்­வதே நோக்­கங்­கள் என்­றார் அவர்.

மேலும், இந்­தப் புதிய வீட­மைப்பு முறை வருங்­கால முதன்மை வட்­டார பொது வீட­மைப்­புத் திட்­டத்­திற்கே பொருந்­தும் என்­றும் தற்­போ­தைய வீட்டு உரி­மை­யா­ளர்­க­ளுக்­குப் பொருந்­தாது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

ஒவ்­வோர் ஆண்­டும் குறைந்­த­பட்­சம் ஒரு முதன்மை வட்­டார பொது வீட­மைப்­புத் திட்­டமாவது தொடங்­கப்­படும் என்று குறிப்­பிட்ட திரு லீ, இருப்­பி­னும் அதன் விகி­தாசா­ரம் ஆண்­டுக்­காண்டு மாறு­படும் என்­றார்.

இவ்­வாண்டு சாதனை அள­வில் வீவக வீடு­கள் கைமா­றின. குறிப்­பாக, குறைந்­த­பட்சம் $1 மில்­லி­யன் விலை­யில் வீட்டு விற்­பனை நிகழ்ந்­துள்­ளது.

இவ்­வாண்­டின் முதல் ஒன்­பது மாதங்­களில் மட்­டும் இது­போன்ற மில்­லி­யன் வெள்ளி வீடு­கள் 174 விற்­பனை ஆயின.

இந்த எண்­ணிக்கை கடந்த ஆண்டு முழு­மைக்­கும் 82 ஆக இருந்­தது.

வீவக மறு­விற்­ப­னைச் சந்தை துடிப்­பு­டன் மீண்­டி­ருப்­ப­தும் இதற்கு ஒரு கார­ணம். மேலும் இவ்­வாண்­டின் மூன்­றாம் காலாண்­டில் மறு­விற்­பனை வீட்டு விலை­கள் சாதனை அளவை எட்­டின.

இது­போன்ற கவ­லை­க­ளுக்­குத் தீர்­வு­கா­ணும் பொருட்டு புதிய பொது வீட­மைப்­புத் திட்­டத்­திற்கு வழங்­கப்­படும் கூடு­தல் மானி­யங்­கள் மறு­விற்­ப­னை­யின்­போது மீட்­டுக் கொள்­ளப்­படும்.

அதா­வது, பொதுச் சந்­தை­யில் முதல்­முறை இந்­தத் திட்­டத்­தின் வீட்டை மறு­விற்­பனை செய்­யும்­போது அதற்­கான விலை­யில் குறிப்­பிட்­ட­தொரு விழுக்­காட்டை வீட்டு உரி­மை­யா­ளர் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தி­டம் தர­வேண்­டும் என்­றார் திரு லீ.

கழ­கத்­தி­டம் இருந்து நேர­டி­யாக வீட்டை வாங்­கி­யோ­ருக்கே இது பொருந்­தும் என்­றும் அடுத்­த­டுத்த மறு­விற்­ப­னைப் பரி­வர்த்­த­னை­க­ளுக்­குப் பொருந்­தாது என்­றும் அவர் தெளி­வு­ப­டுத்­தி­னார்.

முதன்மை வட்டார புதிய பொது வீடமைப்புத் திட்டத்திற்கான விதிமுறைகள் அறிவிப்பு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!