ஓமிக்ரானால் டெல்டாவைவிட குறைவான பாதிப்பு

ஏற்­கெ­னவே கொவிட்-19 தொற்­றி­யோ­ரை­யும் அல்­லது தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ரை­யும் உரு­மா­றிய 'ஓமிக்­ரான்' கிருமி மீண்­டும் எளி­தில் தொற்ற­வல்­லது என்று முதற்­கட்­டத் தர­வு­கள் கூறு­வ­தாக உலக சுகா­தார நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

ஆயினும், அது உருமாறிய 'டெல்டா' கிருமியைவிட குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும் என்பதற்குச் சில சான்றுகள் கிடைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கூறி இருக்கிறார்.

அதே வேளை­யில், முந்­திய திரி­பு­களைவிட அபா­யம் குறைந்­தது என்­றா­லும் வேக­மா­கப் பர­வக்­கூ­டி­யது என்­பதால் அதிகமானோரைப் பாதித்து, சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் கட்­ட­மைப்­பு­மீது நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தி, அத­னால் பலர் இறக்க நேரிடலாம் என்­றும் அவர் எச்­ச­ரித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், முதல் இரு தவ­ணை­களின்­போ­தும் ஒரே நிறு­வ­னத்­தின் தடுப்­பூ­சி­யைப் போடு­வதே சிறந்­தது என்று உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் மருத்­து­வக் குழு ஒன்று தெரி­வித்து இருக்­கிறது. தடுப்­பூசி விநி­யோ­கத்­தில் பிரச்­சி­னையை எதிர்­கொண்­டு­வ­ரும் நாடு­க­ளைத் தவிர்த்து மற்ற இடங்­களில் தடுப்­பூ­சி­க­ளைக் கலந்து பயன்­ப­டுத்த அது எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளது.

பரவும் வேகம் நான்கு மடங்கு அதிகம்

இத­னி­டையே, டெல்டா கிரு­மியை ஒப்­பு­நோக்க, ஓமிக்­ரான் கிருமி அதன் தொடக்க கட்­டத்­தில் 4.2 மடங்கு வேக­மா­கப் பர­வக்­கூ­டி­யது என்று ஐப்­பா­னிய ஆய்வு ஒன்று கூறு­கிறது. "ஓமிக்­ரான், இயற்­கை­யா­க­வும் தடுப்­பூசி மூலம் பெறும் நோயெ­திர்ப்பு ஆற்­ற­லுக்கு எளி­தில் கட்­டுப்­ப­டாது," என்று ஜப்­பா­னிய சுகா­தார அமைச்­சுக்கு ஆலோ­சனை வழங்­கி­வ­ரும் பேரா­சி­ரி­யர் டாக்­டர் ஹிரோஷி நிஷி­யுரா கூறியிருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!