வட்டப்பாதையில் மேலும் 3 எம்ஆர்டி நிலையங்கள்

சர்­க்கிள் லைன் எனப்­படும் வட்­டப் பாதை எம்­ஆர்டி விரி­வாக்­கத்­திற்­கான சுரங்­கப் பணி­கள் நேற்­றுக் காலை நிறை­வுற்­றன. அந்த 4 கிலோ­மீட்­டர் விரி­வாக்­கத்­தில் அமை­யும் மூன்று எம்­ஆர்டி நிலை­யங்களில் ஒன்­றான கேன்டோன் மன்ட் நிலை­யத்­து­டன் சுரங்­க­வழி இணைந்­தது 55 விழுக்­காட்டு பணி­கள் நிறை­வுற்­ற­தைக் குறிக்­கிறது.

இந்­தப் பணி­கள் 2019ஆம் ஆண்டு தொடங்­கின. இத­னு­டன் வட்­டப்­பா­தைச் சுற்று முடி­வ­டை­கிறது. ஹார்­பர்­ஃபி­ரன்ட் முதல் மரினா பே வரை­யி­லான விரி­வாக்க ரயில்­ பா­தையை 2026ஆம் ஆண்டு திறக்­கத் திட்­ட­மி­டப்­பட்டுள்­ளது.

இத­னைப் பயன்­ப­டுத்­து­வ­தன் மூலம் பய­ணி­க­ளுக்கு நேரம் மிச்சப்­படும்.

உதா­ர­ண­மாக, தெலுக் பிளாங்­கா­வி­லி­ருந்து மரினா பேக்கு நேர­டி­யா­கப் பய­ணம் செய்­வ­தன் மூலம் பத்து நிமி­டங்­களை அவர்­கள் மிச்சப்­ ப­டுத்­த­லாம்.

விரி­வாக்­கத்­து­டன் சேர்த்து வட்­டப் பாதை­யில் 33 எம்­ஆர்டி நிலை­யங்­கள் இருக்­கும். இதன் தூரம் சுமார் 40 கிலோ­மீட்­டர். இத­னுள், வெவ்­வேறு ரயில் பாதை­கள் இணை­யும் 12 சந்­திப்பு நிலை­யங்­களும் அமை­யும். கேன்டோன் மன்ட் நிலையத்­தோடு பிரின்ஸ் எட்­வர்ட் ரோடு, கெப்­பல் ஆகிய நிலை­யங்­களும் வட்­டப் பாதை விரி­வாக்கத்­தில் இடம்­பெ­றும். சுரங்­கப் பணி­

க­ளின் நிறைவு நிகழ்­வில் நேற்று பங்­கேற்­றுப் பேசிய போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன் இந்த நிகழ்வு எம்­ஆர்டி விரிவாக்கத் திட்­டத்­திற்கு ஒரு முக்கியமான மைல்­கல் என்­றார்.

ஒட்டுமொத்த எம்ஆர்டி முறையில் மாபெரும் மீள்திறனைத் தரக்கூடிய இந்த விரிவாக்கம் பயணிகளுக்கு அதிக வசதிகளை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வட்டப்பாதையில் 12 ரயில் நிலைய சந்திப்புகள் இருப்பதால் ரயில் பயணத்தில் தடங்கல் ஏற்படும் போது மாற்றுப் பயணத்திற்கு அதிகத் தெரிவுகள் பயணிகளுக்கு இருக்கும் என்றார் திரு ஈஸ்வரன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!