இரட்டையர் மரணம்: தந்தை மீது இன்று கொலைக் குற்றம் சாட்டப்படும்

கால்­வா­யில் இறந்து கிடந்த இரட்­டைச் சகோ­த­ரர்­கள் வழக்கு தொடர்­பில் இன்று அவர்­க­ளின் தந்தை மீது கொலைக் குற்­றம் சாட்­டப்­ப­ட­உள்­ளது. அப்­பர் புக்­கிட் தீமா வட்­டா­ரத்­தில் விளை­யாட்டு மைதா­னம் ஒன்­றின் அரு­கி­லுள்ள கால்­வா­யில் 11 வயது இரட்­டை­யர்­க­ளின் உடல்­கள் வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று கண்டு­பி­டிக்­கப்­பட்­டன.

அதை­ய­டுத்து, மகன்­க­ளின் மர­ணத்­தில் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­க­லாம் என்ற சந்­தே­கத்­தில் 48 வய­து­டைய சிறு­வர்­க­ளின் தந்தை நேற்று முன்­தி­னம் இரவு கைது செய்­யப்­பட்­டார்.

உயி­ரி­ழந்த சிறு­வர்­க­ளான ஈத்தன் யாப், ஏஷ்­டன் யாப் இரு­வ­ரும், சிறப்­புத் தேவை உள்­ள­வர்­கள் என்று அறி­யப்­ப­டு­கிறது.

அவர்­கள் எங் கோங் வட்­டாரத்­தில் உள்ள பள்ளி ஒன்­றில் படித்­த­தா­க­வும் நம்­பப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, சிறு­வர்­க­ளின் உடல்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட கால்வாய் அருகே, நேற்று பல சம­யங்­க­ளைச் சேர்ந்த பிர­தி­நி­தி­கள் சிறப்பு வழி­பாட்­டில் ஈடு­பட்­ட­னர்.

இந்து சம­யத்­தைச் சேர்ந்த பூசாரி­கள், பெளத்த பிக்கு, கிறிஸ்­துவ பாதி­ரி­யார் உள்­ளிட்­ட­வர்­கள் தத்­தம் சமய முறைப்­படி உயி­ரி­ழந்த சகோ­த­ரர்­க­ளின் ஆத்­ம­சாந்­திக்­காக பிரார்த்­தனை செய்­த­னர்.

பிரார்த்­தனை நடந்த இடத்­தில் வெள்ளை ரோஜாக்­களும் பூங்­கொத்து­களும் மெழு­கு­வத்­தி­களும் வைக்­கப்­பட்­டன. ஹாலந்து புக்­கிட் தீமா குழுத்தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிம் ஆன், வட்­டா­ர­வாசி­கள் என சுமார் 20 பேர் அவ்­விடத்­தில் கூடி­னர்.

"தனிப்­பட்ட முறை­யில் அவர்­களை நாம் அறிந்­தி­ரா­த­போ­தும் அவர்­க­ளின் அகால மர­ணம் நமக்கு, குறிப்­பாக நம்­மி­டையே உள்ள பெற்­றோர்­க­ளுக்கு, பெரும்­வே­த­னையை அளிக்­கிறது.

"இது நினைத்­துப் பார்க்க முடி­யாத ஓர் இழப்பு," என்­றார் திரு­வாட்டி சிம் ஆன். இந்­நி­லை­யில் அக்­கம்­பக்­கத் தொண்­டூ­ழி­யர்­க­ளு­டன் கலந்­தா­லோ­சித்து இந்த அனைத்து சமய பிரார்த்­தனை நிகழ்­வுக்கு ஏற்­பாடு செய்­த­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

கிரீன்­ரிட்ஜ் கிர­செண்­டில் உள்ள விளை­யாட்டு மைதா­னத்­தில் இருந்து கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று மாலை 6.25 மணி­ய­ள­வில் உதவி கோரி ஆட­வர் ஒரு­வர் தங்­களு­டன் தொடர்­பு­கொண்­ட­தாக காவல் துறை­யி­னர் தெரி­வித்­த­னர்.

சம்­பவ இடத்­திற்­குச் சென்ற அதி­கா­ரி­கள், கால்­வா­யில் அசை­வின்றி கிடந்த இரட்­டை­யர்­க­ளின் உடல்­க­ளைக் கண்­டதை அடுத்து விசா­ர­ணை­யில் மும்­மு­ர­மாக இறங்­கி­னர். விசா­ரணை முடி­வில் சிறு­வர்­க­ளின் தந்தை கைது செய்­யப்­பட்­டார். அவர் மீதான கொலைக் குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­டால் மரண தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!