பைடன்: உக்ரேன் மீது படையெடுக்க புட்டின் முடிவெடுத்துள்ளார்

ரஷ்ய அதி­பர் விளா­ட­மி­ர் புட்­டின் உக்­ரே­ன் மீது படை­யெ­டுக்க இறுதி முடிவை எடுத்­து­விட்­டதை உறு­திப்­ப­டுத்­தும் உள­வுத் துறைத் தகவல்கள் அமெ­ரிக்­கா­வி­டம் இருப்­ப­தாக அந்­நாட்டு அதி­பர் ஜோ பைடன் கூறி­யுள்­ளார்.

அர­ச­தந்­திர ரீதி­யா­கத் தீர்­வு­கா­ணும் முயற்­சி­களை நிரா­க­ரித்­து திரு புட்­டின் உக்­ரே­ன் மீது படை­யெ­டுக்­கப்­போ­வ­தா­கத் திரு பைடன் கூறியுள்ளார்.

அவ்­வாறு நிகழ்ந்­தால் மிக­வும் மோச­மான விளை­வு­க­ளைத் தரும் தேவை­யற்ற ஒரு போர் கிழக்கு ஐரோப்­பா­வில் மூளும் என்று திரு பைடன் சொன்­னார். 2.8 மில்­லி­யன் மக்­க­ளைக் கொண்ட உக்­ரே­னின் தலை­ந­கர் கீவை ரஷ்யா குறி­வைக்­கும் என்று அமெ­ரிக்கா கரு­து­கிறது.

நேற்று பெரிய அள­வி­லான ராணு­வப் பயிற்­சி­களை ரஷ்யா மேற்­கொண்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. கிட்­டத்­தட்ட 190,000 ரஷ்ய துருப்பு­கள் உள்­ளிட்ட படை­கள் உக்­ரேனின் எல்­லைப் பகு­தி­களில் நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாக அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

ஒருவேளை ரஷ்யா படை­யெடுத்­தால் அதைச் சமா­ளிக்­க தங்­களிடம் திட்­டங்­கள் இருப்­ப­தாக உக்­ரே­னில் செயல்­படும் பெரிய அமெ­ரிக்க, ஐரோப்­பிய நிறு­வ­னங்­கள் கூறின. ஆகக் கடைசி நில­வரப்­படி இந்­நி­று­வ­னங்­கள் தங்­க­ளின் ஊழி­யர்­களை இடம்மாற்­ற­வில்லை.

உக்­ரே­னில் நில­வும் பதற்­ற­நிலை, பனிப்­போ­ருக்­குப் பிறகு ஐரே­ாப்பா சந்­திக்­கும் ஆகப் பெரிய பாது­காப்பு சவால் என்று சிங்­கப்­பூர் தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென் குறிப்­பிட்­டார்.

நாடு­க­ளுக்­கி­டை­யி­லான அர­சி­யல் ரீதி­யான பெரிய பூச­லில் உக்­ரேன் விவ­கா­ரம் ஓர் அங்­கம் என்­றும் ஜெர்­ம­னி­யின் மியூ­னிக் நக­ரில் இருந்த டாக்­டர் இங் சுட்டி­னார்.

போர் மூளும் அபா­யத்­தை­யொட்டி கிழக்கு உக்­ரே­னில் இருக்­கும் டொனி­யெட்ஸ்க், லுஹான்ஸ் ஆகிய நக­ரங்­களில் குடி­யி­ருப்­பாளர்­களை ரஷ்­யா­விற்கு வெளி­யேற்ற ஏற்­பா­டு­கள் செய்யப்­பட்­டன.

இப்­பகு­தி­கள் ரஷ்­யா­வுக்­குச் சாத­க­மான கிளர்ச்­சி­யா­ளர்­க­ளின் பிடி­யில் உள்­ளன.

உக்­ரே­ன் மீது படை­யெ­டுப்­ப­தில் உள்ள அபா­யங்­கள் அதி­கம். அத­னால் அந்­நாட்­டின் எல்­லைப் பகுதி­களில் ரஷ்யா படை­களை நிறுத்தி வைத்­தி­ருப்­பது பொய்­யான ஒரு நிலையைச் சித்திரிப்பதாக மாஸ்­கோ­வில் கவ­னிப்­பா­ளர்­கள் பலர் கூறு­கின்­ற­னர்.

அதைக் கருத்­தில்­கொள்­ளும்­போது திரு புட்­டின் நிலை­மைக்கு ஏற்­ற­வாறு சரி­யான முடி­வைத்­தான் எடுப்­பார் என்­ப­தும் அவர்­க­ளின் கருத்து.

எனி­னும், கொள்­ளை­நோய் பர­வல் காலத்­தில் திரு புட்­டி­னின் அடிப்­படைக் கொள்­கை­கள் மாறி­யுள்­ளது என்று வேறு சிலர் கரு­து­கின்­ற­னர். மாற்­றத்­திற்­குப் பிறகு அவ­ருக்­குக் கூடு­தல் பயம் வந்­தி­ருக்­க­லாம் என்­றும் வருத்­தம் கொண்டு தாறு­மா­றாக நடந்­து­கொள்­ளும் ஆற்­ற­லும் அவ­ரி­டம் அதி­க­ரித்­தி­ருக்­க­லாம் என்­றும் சொல்­லப்­ப­டு­கிறது.

உக்­ரேன் மீது ரஷ்யா படை­யெ­டுக்­கப்­போ­வ­தா­கச் சொல்­லப்­பட்டு வருவதை மாஸ்கோ இது­வரை மறுத்து வந்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!