அமைச்சர் ஓங்: உச்சம் தொட்டபின் ஓமிக்ரான் அலை இறங்குமுகம்

சிங்­கப்­பூ­ரில் ஓமிக்­ரான் வகை கொவிட்-19 பர­வல் உச்­சத்­தைத் தொட்டு, இப்­போது குறை­யத் தொடங்­கி­விட்­ட­தாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார்.

"ஓமிக்­ரான் அலை உச்­சம் தொட்டு, தணி­யத் தொடங்­கி­யுள்­ள­தற்கு நல்ல அறி­கு­றி­கள் தென்­படு­கின்­றன. இத­னால், இறு­தி­யாக சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­களுக்­குத் தகு­தி­யான, நீடித்த ஓய்வு கிடைக்­கும் என்று நம்­பு­கிறேன்," என்று அமைச்­சர் ஓங் கூறி­னார்.

இம்­மா­தம் 8ஆம் தேதி கிட்­டத்­தட்ட 22,000 பேர் புதி­தாக கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர். அதற்கு இரு வாரங்­களுக்­கு­முன், அதா­வது பிப்­ர­வரி 22ஆம் தேதி­யன்று ஏறக்­கு­றைய 26,000 பேருக்­குத் தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

தனி­ந­பர் பாது­காப்பு அங்கி போது­மான அள­வில் இருப்­பதை உறு­தி­செய்­தல், தடுப்­பூசி வந்­த­தும் முன்­னு­ரிமை அளிப்­பது போன்ற வழி­களில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்கு முடிந்த அள­விற்கு உதவ தமது அமைச்சு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­வதாக திரு ஓங் கூறி­னார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று சுகா­தார அமைச்­சின் வர­வு­செ­ல­வுத் திட்­டம் மீதான விவா­தத்­தின்­போது அவர் இத­னைத் தெரி­வித்­தார்.

ஓமிக்­ரான் அலை கார­ண­மாக தனி­யார் மருந்­த­கங்­களும் மருத்­து­வ­ம­னை­களும் சுகா­தா­ரப் பரா­மரிப்பு ஊழி­யர்­களும் இன்­னும் நெருக்­க­டி­யில் இருப்­ப­தாக சுகா­தார மூத்த துணை அமைச்­சர் டாக்­டர் ஜனில் புதுச்­சேரி கூறி­னார்.

பெரும்­பா­லும் இன்­னும் தடுப்­பூசி போடா­த­வர்­க­ளா­லேயே அந்­நெ­ருக்­கடி ஏற்­ப­டு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"பெரி­ய­வர்­களில் முழு­மை­யாகத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத மூன்று விழுக்­காட்­டி­னரே தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­மதிக்­கப்­பட்­டோ­ரி­லும் கிரு­மித்­தொற்­றால் மாண்­டோ­ரி­லும் 25 விழுக்­காட்­டி­னர்," என்­றார் டாக்­டர் ஜனில்.

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோ­ரைக் காட்­டி­லும் கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் கொவிட்-19 தொற்­றால் இறக்க 33 மடங்கு வாய்ப்பு குறைவு என்­றும் அவர் சொன்­னார்.

அத்­து­டன், தடுப்­பூசி போடா­வி­டில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட, அது­வும் மோச­மாக பாதிக்­கப்­பட குறைந்­தது பத்து மடங்கு வாய்ப்பு அதி­கம் என்­றும் அவர் சுட்­டி­னார்.

இன்­னும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத அல்­லது முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோ­ரைப் பாது­காக்­கவே தடுப்­பூசி அடிப்­ப­டை­யி­லான பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­கள் நடை­முறைப்­ப­டுத்­தப்­பட்டுள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

அத­னால்­தான் இப்­போ­துள்ள கட்­டுப்­பா­டு­களை அகற்ற இது உகந்த நேர­மல்ல எனும் ஓமிக்­ரான் அலை தணிந்­த­தும் பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­களை மேலும் தளர்த்­தும் நிலை­யில் நாம் இருப்­போம் என்­றும் டாக்­டர் ஜனில் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!