ஃபைசர் தடுப்பூசி, மொடர்னா பூஸ்டர்; முதியோருக்கு சிறந்த பாதுகாப்பு தரும்

கொவிட்-19 தொற்றுக்கு எதி­ரான ஃபைசர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக் கொண்டு இருக்­கும் முதியோருக்கு மொடர்னா பூஸ்­டர் தடுப்­பூசி சிறந்த பாது­காப்பைக் கொடுக்கிறது என்று தேசிய தொற்­று­நோய் தடுப்பு நிலை­யத்­தின் ஆய்­வா­ளர்­கள் கண்­டு­பி­டித்து இருக்­கி­றார்­கள்.

ஃபைசர்-பயோ­என்­டெக்/கொமிர்­னாட்டி தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்ட 60 வய­துள்­ள­வர்­கள், மொடர்னா பூஸ்­டர் தடுப்பூசியைப் போட்­டுக்­கொண்­ட­தற்கு ஏழு நாள் கழித்து அவர்­களின் உட­லில் சரா­ச­ரி­யாக இரண்டு மடங்கு அதிக கிருமி எதிர்ப்பு ஆற்­றல் உரு­வாகி இருப்­ப­தாக ஆய்வு தெரி­விக்­கிறது.

இது கொவிட்-19 உரு­மா­றிய கிரு­மித்­தொற்று அனைத்­துக்­கும் பொருந்­து­வ­தாக இருக்­கிறது என்று அந்த நிலை­யம் அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது.

இதர அனைத்­து­லக பரி­சோ­தனை முடி­வு­களும் இதனை ஒத்து இருப்­ப­தா­க­வும் அந்த அறிக்கை குறிப்­பிட்­டது. பூஸ்­டர் தடுப்­பூசி மூலம் கொவிட்-19க்கு எதி­ரான நோய் தடுப்­பாற்­றல் எந்த அள­வுக்கு உரு­வா­கிறது என்­பதைப் புரிந்­து­கொள்­வ­தற்­கான உள்­ளூர் தக­வல் வளத்­தைப் பலப்­ப­டுத்­து­வது இந்த ஆய்­வின் நோக்­கம் என்று இந்த நிலை­யத்­தில் செயல்­படும் சிங்­கப்­பூர் தொற்­று­நோய் மருந்­தக ஆய்வுக் கட்­ட­மைப்­பின் தலை­வர் டாக்­டர் பர்­னாபே யோங் தெரி­வித்­தார். கொவிட்-19 கிருமி தொடர்ந்து உரு­மா­று­கிறது. இத­னால் அவை நோய் தடுப்­பாற்­ற­லில் இருந்து தப்­பித்து விடு­கின்­றன. இது கவலை தரு­கிறது.

நீண்­ட­கா­லப் போக்­கில் கொவிட்-19க்கு எதி­ரான நோய் தடுப்­பாற்­றல் உத்தி அவ­சி­யம் என்­பதை இந்த நில­வ­ரம் வெளிச்­சம் போட்டு காட்­டு­கிறது என்று அவர் கூறி­னார்.

இந்த நிலை­யம் சென்ற ஆண்டு அக்­டோ­பர் 12ஆம் தேதி முதல் டிசம்­பர் 3ஆம் தேதி வரை ஃபைசர் தடுப்­பூ­சி­களை முழுமையாக போட்டுக்­கொண்ட 100 பேரை உள்­ள­டக்கி ஆய்வு நடத்­தி­யது. அவர்­களில் பாதிப்­பே­ருக்கு வயது 60க்கும் மேல்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தற்கு 28 நாள்­கள் கழித்­தும் மொடர்னா பூஸ்­டர் ஊசி­யைப் போட்­டுக்­கொண்ட முதி­ய­வர்­களில் நோய் எதிர்ப்­பாற்­றல் 1.5 மடங்கு அதி­க­மா­கவே தொடர்ந்து இருந்து வந்­தது.

இருந்­தா­லும் இளம் வய­துள்­ள­வர்­க­ளைப் பொறுத்­த­வரை நோய் எதிர்ப்­பாற்­றல் இந்த இரண்டு தடுப்­பூ­சி­க­ளின் ஆற்­றலை ஒத்தே இருந்­தது. முதி­ய­வர்­க­ளைப் பொறுத்­த­வரை, மொடர்னா பூஸ்­டர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டால் சிறந்த அல்­லது நீண்­ட­கால பாது­காப்பு கிடைக்­கக்­கூ­டும் என்று டாக்­டர் யோங் குறிப்­பிட்­டார்.

ஆய்­வில் கலந்­து­கொண்­டோருக்கு பூஸ்­டர் தடுப்­பூசி எந்த அள­வுக்குத் தொடர்ந்து பாது­காப்பு வழங்­கு­கிறது என்­பதை முடிவு செய்ய அவர்­க­ளி­டம் ரத்த பரி­சோ­த­னை­களை ஆய்­வா­ளர்­கள் தொடர்ந்து நடத்­து­வார்­கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!