சிங்கப்பூர் இந்தியர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டார்

சுயமாக தீவிரவாதப் போக்குக்கு மாறி வெளிநாட்டுக்குச் சென்று சண்டையிட தயாராக இருந்த 29 வயது சிங்கப்பூரர் ஒருவர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.

அவர் கடந்த ஏப்ரல் மாதம் தடுத்து வைக்கப்பட்டார்.

அந்த சிங்கப்பூரர் ராஜ்தேவ் லால் மதன் லால் என்று உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு கூறியது.

அது பற்றி உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு செவ்வாய்க்கிழமை (மே 10) அன்று அறிக்கை விடுத்தது.

ளவாட நிறுவனத்தில் ஊழியராக இருந்த ராஜ்தேவ் லால், 2013ஆம் ஆண்டு தீவிரவாதப் போக்குக்கு மாறினார்.

டிரினிடாட் டொபேகோவைச் சேர்ந்த தீவிரவாத சமய போதகர் இம்ரான் ஹுசேனின் பேச்சுகளைக் கேட்டு ராஜ்தேவ் கவரப்பட்டார்.

இஸ்லாத்தின் "எதிரிகளை" எதிர்த்து தாம் ஆயுதம் தாங்கி வன்முறையில் ஈடுபட வேண்டும் என்று அவர் நம்பினார்.

கைதான சமயத்தில், தாலிபாப் படையில் சேர்வதற்காக ஆப்கானிஸ்தானில் சண்டை நிகழ்ழும் வட்டாரங்களுக்குச் செல்வது பற்றி ராஜ்தேவ் யோசித்துக் கொண்டிருந்தார்.

தம் சித்தாந்தங்களை தமது குடும்பத்தார், நண்பர்கள், ஆகியோருடமும் சமூக ஊடகம் வழியாகவும் பரப்ப ராஜ்தேவ் முயன்று தோல்வி அடைந்தார்.

குறிப்பாக சிங்கப்பூரை தாக்க ராஜ்தேவ் திட்டமிடவில்லை என்று உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு கூறியது.

இருந்தபோதும் அவர் சிங்கப்பூரின் நலன்களுக்கு எதிராக இங்கு அல்லது வெளிநாட்டில் தாக்குதல் நடத்துவதில் சம்மதம் இருந்ததாக உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!