சிங்கப்பூருக்கு கோழி இறைச்சி ஏற்றுமதி விரைவில் தொடரும்

மலேசிய சுகாதார அமைச்சர் நம்பிக்கை

மலே­சி­யா­வில் கோழி இறைச்சி விலை குறைந்து, சிங்­கப்­பூ­ருக்கு அதன் ஏற்­று­மதி விரை­வில் தொட­ரும் எனத் தாம் நம்­பிக்­கை­யு­டன் இருப்­ப­தாக மலே­சிய சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் தெரி­வித்­துள்­ளார்.

சிங்­கப்­பூ­ருக்கு நான்கு நாள் அதி­கா­ரத்­து­வப் பய­ணம் மேற்­கொண்­டுள்ள அவர், நேற்று செய்தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­போது இத­னைத் தெரி­வித்­தார். கோழி ஏற்­று­ம­தித் தடை ஒரு சில மாதங்­க­ளுக்கு நீடிப்­ப­தற்­கான சாத்­தி­யம் குறைவு என அவர் குறிப்­பிட்­டார்.

"சிங்­கப்­பூ­ரு­ட­னான இரு­த­ரப்பு உறவை நாங்­கள் மதிக்­கி­றோம். நாங்­கள் எடுத்­துள்ள இந்த முடிவு எளி­தான ஒன்­றல்ல. எனவே, உள்­நாட்­டில் விலை நில­வ­ரம் சீரா­கும்­வரை இந்த ஏற்­று­ம­தித் தடை தற்­கா­லி­க­மாக இருக்­கும் என நாங்­கள் நம்­பு­கி­றோம்," என்­றார் அமைச்­சர் கைரி.

நேற்று முன்­தி­னம் கோழி ஏற்று­ம­தித் தடை நடப்­புக்கு வந்­த­தைத் தொடர்ந்து, சிங்­கப்­பூ­ரில் கோழி இறைச்சி விலை ஏறி­யுள்­ளது. சிங்­கப்­பூர் அதன் கோழி விநி­யோ­கத்­தில் மூன்­றில் ஒரு பங்கை மலே­சி­யா­வி­லி­ருந்து இறக்கு­மதி செய்து வந்­தது.

விநி­யோ­கச் சங்­கிலி விவ­கா­ரங்­கள், கோழித் தீவ­னத்­தைக் கொள்­மு­தல் செய்­வ­தைச் சிர­ம­மாக்கி­விட்­ட­தாக திரு கைரி கூறி­னார்.

பரு­வ­நிலை மாற்­றத்­தால் கோழிகள் வளர்­வ­தற்கு எடுத்­துக்­கொள்ளும் நேர­மும் பாதிக்­கப்­பட்டுள்­ள­தா­கக் கூறிய அவர், மலே­சி­யா­வுக்கு இது மிக­வும் சிர­ம­மான சூழ்­நி­லைக்கு வித்­திட்­டுள்­ள­தா­கச் சொன்­னார்.

"உள்­நாட்டு உண­வுத் தேவை­யைப் பூர்த்­தி­செய்­வ­தில் பொது­வாக நாடு­கள் கவ­னம் செலுத்­தி­னா­லும், சிங்­கப்­பூர் உள்­ளிட்ட அண்டை நாடு­க­ளுக்கு ஏற்­று­ம­தி­யா­ள­ராக எங்­க­ளுக்கு இருக்­கும் பொறுப்பை நாங்­கள் நன்­றா­கவே உணர்­கிறோம்," என்­றார் அவர்.

ஏற்­கெ­னவே நில­வ­ரம் மேம்­பட்டு வரு­வ­தா­கத் தெரி­வித்த திரு கைரி, குறைந்த விலை­யு­டைய மாற்று கோழித் தீவன உற்­பத்­தியை அதி­க­ரிக்க முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­கக் கூறி­னார்.

இதற்­கி­டையே, மலே­சி­யா­வில் கோழி இறைச்சி, முட்­டை­க­ளுக்­கான விலைக் கட்­டுப்­பா­டு­கள் ஜூலைக்­குள் முடி­வுக்­குக் கொண்­டு­வ­ரப்­படும் என உள்­நாட்டு வர்த்­தக, பய­னீட்­டா­ளர் விவ­கார அமைச்­சர் அலெக்­சாண்­டர் நன்டா லிங்கி நேற்று கூறி­னார். தேவை, உற்­பத்­தி­யைப் பொறுத்து அவற்­றின் விலை­கள் தீர்­மா­னிக்­கப்­படும் என்­றார் அவர். மாறாக, வசதி குறைந்­தோருக்­குப் பண உதவி வழங்­கப்­படும் என்­றும் அவர் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!