மலேசிய துணை மாமன்னர் வருகை: சிங்கப்பூரில் தலைவர்களுடன் பேச்சு

மலே­சி­யா­வின் துணை மாமன்­ன­ரும் பேராக் சுல்­தா­னு­மான சுல்­தான் நஸ்­ரின் ஷா, பிரத­மர் லீ சியன் லூங்­கின் அழைப்பை ஏற்று சிங்­கப்­பூர் வந்­தி­ருக்­கி­றார். நாளை வரை இங்கு இருக்கும் அவர் சிங்­கப்­பூர் தலை­வர்­களைச் சந்­திப்­பார் என வெளியுறவு அமைச்சு செவ்­வாய்க்­கி­ழமை அறி­வித்­தது.

சுல்­தான் நஸ்­ரின், வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன், பேராக் இஸ்­லா­மிய சமய, மலாய் பாரம்­ப­ரிய மன்­றத்­தின் தலை­வர் டான் ஸ்ரீ முகம்­மது அன்வார் சைனி ஆகி­யோ­ரு­டன் பிர­த­மர் திரு லீ உரை­யா­டி­னார்.

அந்த உரை­யா­ட­லைக் காட்­டும் படத்தை நேற்று ஃபேஸ்புக்­கில் திரு லீ பதி­விட்­டார்.

மலே­சி­யா­வின் துணை மாமன்­ன­ரும் பேராக் சுல்­தா­னு­மான நஸ்­ரின் ஷாவு­டன் தேநீர் விருந்­தில் கலந்­து­கொண்­ட­தா­க­வும் அவ­ரு­டன் நல்­லு­றவை வளர்த்­துக்கொண்­ட­தா­க­வும் திரு லீ ஃபேஸ்புக்­கில் குறிப்­பிட்­டார். இதற்கு முன் சுல்­தான் நஸ்­ரின் 2019ல் சிங்­கப்­பூர் வந்­த­போது அவ­ரைத் தான் சந்­தித்­ததை திரு லீ நினை­வு­கூர்ந்­தார்.

எல்­லை­கள் திறக்­கப்­பட்டு இருப்­ப­தால் இப்­போது நேருக்­கு­நேர் சந்­திக்க முடிந்­தது பற்றி தான் மகிழ்­வ­தா­க­வும் திரு லீ தெரி­வித்­தார். வட்­டார நில­வ­ரங்­கள் பற்­றி­யும் சிங்­கப்­பூ­ரும் பேராக் மாநி­ல­மும் ஒத்­துழைப்பைப் பலப்­ப­டுத்­தக்­கூ­டிய துறை­கள் குறித்தும் தாங்­கள் விவா­தித்­த­தாக திரு லீ குறிப்­பிட்­டார்.

பேராக் உட்­பட மலே­சி­யா­வுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடை­யில் வலு­வான உறவை பலப்­ப­டுத்த தான் விரும்­பு­வ­தா­க­வும் திரு லீ தமது செய்­தி­யில் தெரி­வித்து இருக்­கி­றார். சிங்­கப்­பூர் வந்­துள்ள சுல்­தா­னுக்கு சிங்­கப்­பூ­ரின் பசு­மைத் திட்­டம் 2030 பற்றி விளக்­கம் அளிக்­கப்­படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!