‘உக்ரேனில் அணு ஆயுதப் பேரிடர் ஆபத்து’

உக்­ரே­னில் உண்­மை­யி­லேயே அணு­ஆ­யு­தப் பேரி­டர் ஆபத்து தலை­தூக்கு ­வ­தாக ஐநா அணு­சக்தி ஆணை­யம் அபாயச் சங்கு ஊதி உள்ளது.

ஐரோப்­பா­வின் ஆகப் பெரிய அணுசக்தி ஆலை உக்­ரே­னில் அமைந்து இருக்­கிறது. அந்த நாட்டின் தென்­கி­ழக்­குப் பகு­தி­யில் அமைந்துள்ள அந்த ஆலையை, ரஷ்­யப் படை­கள் தாக்­கு­வ­தாக உக்ரேன் புகார் தெரி­வித்­தது.

ஆனால், அந்­தத் தாக்­கு­தலை நடத்­தி­யது உக்­ரேன்தான் என்று மாஸ்கோ பதி­லடி கொடுத்­தது.

அந்­தத் தாக்­கு­தல், உக்­ரே­னில் உண்­மை­யி­லேயே அணு­ ஆ­யு­தப் பேரிடரை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய ஆபத்து தலை­தூக்­கு­வ­தையே காட்டு­வ­தாக அனைத்­து­லக அணு­சக்தி முகவை அமைப்­பின் தலைமை இயக்­கு­ந­ரான ரஃபாயல் குரோசி சனிக்­கி­ழமை அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தார்.

அந்த அணு­சக்தி ஆலையை கடந்த மார்ச் மாதம் ரஷ்யா ஆக்­கிரமித்­தது. என்­றா­லும் அதை உக்­ரேனிய வீரர்­களே இன்­ன­மும் இயக்கி வரு­கி­றார்­கள். ஆலையில் இடம்­பெ­றும் ராணுவச் செயல்­கள் முற்றி­லும் ஏற்­றுக்­கொள்ள இய­லா­தவை. எவ்­வ­ளவு விலை கொடுத்­தாவது அந்­தத் தாக்­கு­தலை தடுத்து நிறுத்த வேண்­டும் என்றாரவர்.

இத­னி­டையே, அந்த ஆலை­யில் வெள்­ளிக்­கி­ழமை இரண்டு முறை ரஷ்யா தாக்­கு­தல் நடத்­தி­யது என்றும் ஆகை­யால், ரஷ்ய அணு­சக்தி தொழில்­துறை மீது தடை விதிக்க வேண்­டும் என்­றும் உக்­ரேன் அதி­பர் ஸெலென்ஸ்கி கோரி­னார்.

அதே­வே­ளை­யில், ரஷ்­யா­வின் தற்­காப்பு அமைச்சு அந்­தத் தாக்­கு­தலுக்­கும் தனக்­கும் தொடர்பு இல்லை என்று மறுத்­தது. உக்­ரேனே­தாக்­கு­த­லுக்கு கார­ணம் என்று ரஷ்ய தரப்பு தெரி­வித்­தது.

இவ்­வே­ளை­யில், அந்த ஆலையை மறு­ப­டி­யும் கைப்­பற்­று­வ­தற்­காக உக்­ரே­னிய தரப்­பு­கள் தாக்­கு­தலைக் கடு­மை­யாக்கி வரு­வ­தால் அந்­தப் பகு­தி­யில் மோதல் மூர்க்­க­ம­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இப்­போ­தைய நில­வ­ரப்­படி அந்த ஆலை­யின் அணு சக்தி சாத­னங்­கள் சேத­ம­டை­ய­வில்லை என்­றும் கதிரியக்க ஆபத்து எது­வும் இல்லை என்­றும் திரு குரோசி கூறி­னார்.

ஆனா­லும் அந்­தப் பகுதி பெருத்த சேதம் அடைந்து இருக்­கிறது என்றும் அவர் தெரி­வித்­தார்.

அந்த இடத்­திற்­குச் சென்று அந்த ஆலையை நேர­டி­யா­கப் பார்க்க வேண்­டும் என்று அனைத்­து­லக அணு­சக்தி முகவை கடந்த நான்கு மாத கால­மாக கோரி வரு­வதாகவும் ஆனால் அனு­மதி இன்­ன­மும் கிடைக்­க­வில்லை என்­றும் குரோசி கவலை தெரி­வித்­தார்.

இதற்கு உக்ரே­னும் ரஷ்­யா­வும் சம்­ம­திக்க வேண்டும் என்­றும் அவர் குறிப்பிட்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!