வழக்கறிஞர்கள்: நஜிப் எட்டு ஆண்டுகளிலேயே விடுவிக்கப்படும் சாத்தியம் உள்ளது

ஊழல் குற்­றம் புரிந்­த­தற்­காக விதிக்­கப்­பட்ட 12 ஆண்­டு­கள் சிறைத் தண்­ட­னையை எதிர்த்து மலே­சி­யா­வின் முன்­னாள் பிர­த­மர் நஜிப் ரசாக் செய்த மேல்­மு­றை­யீடு நிரா­க­ரிக்­கப்­பட்­டதை அடுத்து, சிலாங்­கூர் மாநி­லத்­தில் உள்ள காஜாங் சிறை­யில் சிறைத் தண்­ட­னையை அவர் தொடங்­கி­யுள்­ளார்.

ஆனால் அரச மன்­னிப்பு கிடைக்­கா­விட்டாலும் அவர் அதி­க­பட்­சம் எட்டு ஆண்­டு­கள் மட்­டுமே சிறை­யில் இருக்­கக்­கூ­டும் என்று வழக்­க­றி­ஞர்­கள் கூறு­கின்­ற­னர். நன்­ன­டத்தை கார­ண­மாக அவரது தண்டனைக் காலம் குறைக்­கப்­

ப­டக்­கூ­டும் என்று சட்ட நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

நேற்­றைய நில­வ­ரப்­படி அவர் சிறை­யில் இரண்டு இர­வு­க­ளைக் கழித்­து­விட்­டார். மலே­சி­யா­வின் உயர் நீதி­மன்­றம் நஜிப்­புக்கு விதித்த 12 ஆண்­டு­கள் சிறையை அந்­நாட்டு மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று உறுதிசெய்தது. 1எம்­டி­பி­யின் முன்­னாள் பிரி­வான எஸ்­ஆர்சி இன்டர்­நே­ஷ­ன­லிலி­ருந்து பணம் கையா­டிய குற்­றத்­துக்­காக நஜிப்­புக்கு 12 ஆண்டு­கள் சிறை­யு­டன் 210

மில்­லி­யன் ரிங்­கிட் ($65.3 மில்­லி­யன்) அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது.

சிறை வாழ்க்கை தமது தந்­தைக்­குப் புதிது என்­றும் அத­னு­டன் அவர் பழகி வரு­வ­தா­க­வும் நஜிப்­பின் மக­ளான நூர்­யானா நஜ்வா நேற்று முன்­தி­னம் இரவு இன்ஸ்­ட­கி­ரா­மில் பதி­விட்­டார். பணி­கள் நிறைந்த வாழ்க்­கை­மு­றை­யு­டன் ஒப்­பி­டும்­போது சிறை­வா­சம் முற்­றி­லும் மாறு­பட்­டதை அவர் சுட்­டி­னார்.

"எனது தந்தை ஆரோக்­கி­ய­மாக இருக்­கி­றார். அத்­து­டன் அவ­ர் துவண்­டு­வி­டா­மல் மன­வ­லி­மை­

யு­டன் உள்­ளார்," என்று நூர்­யானா தெரி­வித்­தார். சிறைக் கைதி என்ற முறை­யில் நன்­ன­டத்தை கார­ண­மாக அவ­ரது தண்­ட­னைக் காலம் மூன்­றில் ஒரு பகுதி குறைக்­கப்­ப­ட­லாம் என்று அறி­யப்­ப­டு­கிறது. இதற்கு அவர் விண்­ணப்­பம் செய்­யத் தேவை­யில்லை என்று மூத்த குற்­ற­வி­யல் வழக்­க­றி­ஞர் கீதன் ராம் வின்­சென்ட் தெரி­வித்­தார்.

ஆனால் தமக்கு விதிக்கப்பட்ட 210 மில்லியன் ரிங்­கிட் அப­ரா­தத்தை நஜிப் செலுத்த தவ­றி­னால் அவ­ருக்­குக் கூடு­தல் சிறைத் தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம். அப­ரா­தத் தொகையை அவர் செலுத்­தா­வி­டில் கூடு­த­லாக ஐந்து ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­படும் என்று நீதி­மன்­றம் தெரி­வித்­தி­ருந்­தது. விதிக்­கப்­பட்ட 12 ஆண்­டு­கள் சிறைத் தண்டனை முடி­வ­தற்­குள் அப­ரா­தத் தொகையை நஜிப் செலுத்­த­லாம் என்று மற்ற வழக்­

க­றி­ஞர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். ஆனால் நன்­ன­டத்தை கார­ண­மாக அவ­ரது தண்­ட­னைக் காலம் குறைக்­கப்­பட்­டால் அப­ரா­தத் தொகை­யைச் செலுத்­திய பிறகே அவர் வெளி­யில் வர முடி­யும் என்று மலே­சிய ஊட­கத்­தி­டம் மலே­சிய வழக்­க­றி­ஞர் மன்­றத்­தின் முன்­னாள் தலை­வர் திரு சலீம் பஷீர் பாஸ்­

க­ரன் தெரி­வித்­தார். பரோலில் வெளியே வர நஜிப் விண்­ணப்­பம் செய்­ய­லாம் என்று மற்­றொரு வழக்­

க­றி­ஞ­ரான திரு ரமேஷ் என்.பி. சந்­தி­ரன் கூறி­னார். பரோலில் வெளியே வரும் சிறைக் கைதி­கள் பரோல் அதி­காரி மேற்­பார்­வை­யின்­கீழ் இருப்­பர். பரோல் விதி­மு­றை­களை மீறி­னால் மீண்டும் சிறைக்­குத் திரும்ப வேண்­டி­வ­ரும்.

இதற்­கி­டையே, அரச மன்­னிப்பை நஜிப் பெறு­வ­தற்­கான சாத்­தி­யம் அதி­கம் இருப்­ப­தாக

மலே­சி­யா­வின் முன்­னாள் பிர­த­மர் டாக்­டர் மகா­தீர் முகம்­மது நேற்று தெரி­வித்­தார்.

2018ஆம் ஆண்­டில் நடை­பெற்ற மலே­சி­யப் பொதுத் தேர்­த­லில் பல ஆண்­டு­க­ளாக ஆட்­சிப் பீடத்­தில் இருந்த தேசிய முன்­ன­ணி­யைத் தோற்­க­டித்து பக்­கத்­தான் ஹரப்­பான் ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­யது. அந்­தக் கூட்­ட­ணி­யில் டாக்­டர் மகா­தீ­ரின் கட்­சி­யும் இடம்­பெற்­றி­ருந்­தது. டாக்­டர் மகா­தீர் பிர­த­மர் பத­வியை ஏற்­றதை அடுத்து, நஜிப்­புக்கு எதி­ரான பிடி இறு­கி­யது. 1எம்­டிபி ஊழல் தொடர்­பான வழக்கு விசா­ரணை விரை­வு­ப­டுத்­தப்­பட்­டது.

நஜிப்­பின் வழக்கு தாம­தப்­ப­டுத்­தப்­பட்­டதால் நாட்­டில் உள்ள மற்ற வழக்­கு­க­ளுக்கு இடை­யூறு ஏற்­பட்டு இருக்கக்கூடும் என்று டாக்­டர் மகா­தீர் குறை­கூ­றி­னார்.

"எஸ்­ஆர்சி இன்­டர்­நே­ஷ­னல் ஊழல் வழக்­கிற்கு தீர்ப்பு அளிக்க நான்கு ஆண்­டு­கள் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. இதன் விளை­வாக முக்­கிய அர­சி­யல் புள்­ளி­கள் தொடர்­பு­டைய ஊழல், பத­வி­யைத்

தவ­றா­கப் பயன்­ப­டுத்­து­தல், திருட்டு ஆகி­யவை தொடர்­பான வழக்­கு­கள் இன்­ன­மும் நீதி­மன்­றம் முன் வர­வில்லை," என்­றார் டாக்­டர்

மகா­தீர்.

மலே­சி­யா­வில் உள்ள சில அரச குடும்­பங்­க­ளு­டன் நஜிப்­புக்கு நெருங்­கிய தொடர்பு இருப்­ப­தாக நம்­பப்­ப­டு­கிறது. மலே­சிய மாமன்­ன­ரு­டன் நஜிப் இவ்­வாண்டு நோன்­புப் பெரு­நாள் கொண்­டா­டி­ய­தைக் காட்­டும் படங்­கள் கடந்த மே மாதம் நஜிப்­பின் சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டன.

இந்­நி­லை­யில், 1எம்­டிபி தொடர்­பான வழக்கு விசா­ர­ணைக்­காக நஜிப் மீண்­டும் நேற்று நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!