பிரதமர் லீ: சமூகப் பிணைப்புக்கு எல்லா இனத்தவர்களும் பங்களிக்க வேண்டும்

பல இன, பல சமய மக்களைக் கொண்ட சமூகத்தை ஒற்றுமையுடன் வைத்திருப்பது சவால்மிக்கது என்றும் நல்ல முஸ்லிம், கிறிஸ்துவர், பௌத்தர், இந்துவாக இருக்கும் அதே சமயம் நல்ல குடிமக்களாகவும் இருக்கும் நடைமுறை சிங்கப்பூரில் உள்ளதால் சமூகப் பிணைப்புக்கு அது வகை செய்வதாகவும் பிரதமர் லீ சியன் லூங் நேற்று தெரிவித்தார்.

சிங்கப்பூரில் உள்ள பல்வேறு சமூகங்களுக்கு இடையிலான உறவுகளில் எளிதில் கசப்புணர்வு ஏற்படக்கூடும் என்றும் அவ்வாறு ஏற்படாதிருக்க அரசாங்கங்கள் அதற்குத் தேவையான இணக்கமான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் லீ தெரிவித்தார்.

முதல்­மு­றை­யாக நடை­பெற்ற 'இன்­டர்­நே­ஷ­னல் கான்­ஃப­ரன்ஸ் ஆன் கம்­யூனிட்­டிஸ் ஆஃப் சக்­சஸ்' மாநாட்­டில் திரு லீ நேற்று கலந்­து­கொண்டு பேசி­னார்.

மாநாட்­டுக்கு சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றம் (முயிஸ்) ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

நாட்­டுக்­குத் தொண்­டாற்­றும் குடி­மக்­க­ளாக முஸ்­லிம்­கள் ஆன பல சம்­ப­வங்­களை உதா­ர­ணம் காட்டி அவர்­களை ஒன்­றி­ணைக்­கும் தளத்தை அமைப்பதே மாநாட்­டின் இலக்கு.

பிற இனத்­த­வர்­கள் மீது சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளுக்கு இருக்­கும் நம்­பிக்கை தொடர்­வது மிக­வும் முக்­கி­யம் என்­றும் அவர்

வலி­யு­றுத்­தி­னார். ஒதுக்கப்பட்டு விட்டோம் என்ற உணர்வு சிறு­

பான்­மை­யி­ன­த்தவருக்கு ஏற்­ப­டா­த­படி பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­ பார்த்­துக்­கொள்ள வேண்­டும் என்று திரு லீ கூறி­னார்.

அப்­போ­து­தான் சமய நல்­லி­ணக்­க­மும் சமூ­கப் பிணைப்­பும் தொடர்ந்து வலு­வாக இருக்­கும் என்­றார் அவர்.

"இதில் உள்ள ஆபத்து குறித்து அனைத்துத் தரப்பினருக்கும் தெரியும். எந்த ஒரு குறிப்பிட்ட இனத்துக்கும் அதற்குச் சாதகமான, அது விரும்பும் அனைத்தும் கிடைத்துவிடாது என்று சிங்கப்பூரில் இருக்கும் எல்லா இனத்தவரும் நன்கு அறிவர்," என்றார் பிரதமர் லீ.

சமூகப் பிணைப்பை நிலை­நாட்ட மேற்­கொள்­ளப்­படும் முயற்­சி­கள் தொடர வேண்­டும் என்று பல நாடு­க­ளைச் சேர்ந்த சம­யத் தலை­வர்­கள், கல்­வி­மான்­கள், அதி­காரி ­கள் உட்­பட மாநாட்­டில் கலந்­து­கொண்­டோ­ரி­டம் பிர­த­மர் லீ தெரி­வித்­தார்.

இனம், சம­ய பாகு­பா­டின்றி அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய சமு­தா­யத்தை உரு­வாக்க வேண்­டும் என்ற வேட்­கை­யு­ட­னும் கொள்­கை­யு­ட­னும் பல நாடு­கள் தங்­கள் பய­ணத்­தைத் தொடங்­கு­வ­தா­க­வும் ஆனால் காலப்­போக்­கில் எல்­லாம் மாறி­வி­டு­கிறது என்­றும் திரு லீ கூறி­னார்.

இனம், சமய உணர்­வு­க­ளைத் தூண்டி வாக்­கா­ளர்­களை ஈர்க்­கும் ஆசைக்கு இணங்கி செயல்­படும் ஆபத்து இருப்­ப­தா­க­வும் அதன் விளை­வாக சமூ­கத்­தில் பிளவு ஏற்­பட்டு, வன்­முறை கட்­ட­வி­ழ்க்­கப்­பட்டு ரத்த ஆறு ஓடும் ஆபத்­து உள்­ள­தா­க­வும் திரு லீ கூறி­னார்.

"ஒரு­முறை அத்­த­கைய பாதை­யில் சென்­று­விட்­டால் பிறகு அதி­லி­ருந்து மீண்டு வரு­வது சிர­மம். அது ஒரு­வ­ழிப் பாதை­யாக என்­றென்­றும் அமைந்­து­வி­டும்," என்று அவர் எச்­ச­ரிக்கை விடுத்­தார்.

சமூ­கத்­தில் உள்ள பல்­வேறு சமூ­கங்­கள் எவ்­வாறு ஒற்­று­மை­

யு­டன் வாழ­லாம் என்ற அக்­கறை முஸ்­லிம்­களை சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளா­கக் கொண்­டி­ருக்­கும் சமூ­கங்­க­ளுக்கு அதி­கம் இருப்­பதை திரு லீ சுட்­டி­னார்.

உல­கெங்­கும் 1.9 பில்­லி­யன் முஸ்­லிம்­கள் இருப்­ப­தா­க­வும் அவர்­களில் 400 மில்­லி­யன் பேர் தங்­கள் நாடு­களில் சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளாக இருப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.

அவர்­களில் பல­ருக்கு இஸ்­லாம் என்­பது சம­யம் மட்­டு­மல்ல, வாழ்க்கை ­மு­றை­யா­க­வும் உள்­ளது என்­றார் திரு லீ.

இஸ்லாமியர் எனும் அடையாளத்தை வெளிப்படுத்தும் அதே சமயத்தில் முஸ்லிம் அல்லாத சக நாட்டவருடன் அவர்கள் ஒன்றிணைந்து, வாழ்வது மிகவும் முக்கியம் என்று பிரதமர் லீ தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!