அமைச்சர் சண்முகம்: எடுத்துக்காட்டாகத் திகழும் இந்திய சமூகம்

நோய்ப்­ப­ர­வலை முறி­ய­டித்து, சிங்­கப்­பூரை மீண்­டும் வளர்ச்­சிப் பாதை­யில் செலுத்­து­வ­தற்­குத் தேவை­யான மிகு­நம்­பிக்­கைக்­கும் பிணைப்­புக்­கும் இந்­தி­யச் சமூ­கம் ஓர் எடுத்­துக்­காட்­டா­கத் திகழ்­கிறது என்று சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் மெச்­சி­யுள்­ளார்.

இந்­தி­யச் சமூ­கம் ஒன்­றி­ணைந்து கொவிட்-19 நோய்ப்­ப­ர­வ­லைக் கடந்து, இப்­போது வலி­மை­யோ­டும் ஒற்­று­மை­யோ­டும் திகழ்­கிறது என்று திரு சண்­மு­கம் குறிப்­பிட்­டார்.

தீபா­வ­ளியை முன்­னிட்டு, மக்­களி­டத்­தில் நம்­பிக்­கையை விதைக்­கும் நோக்­கில் மக்­கள் செயல் கட்சியின் ‘நம்­பிக்கை ஒளி’ இசைக் காணொ­ளி வெளி­யீட்டு நிகழ்­வில் கலந்­து­கொண்­ட­போது அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

வழக்­கத்­திற்கு மாறான நெருக்­கு­தல்­க­ளாக இருந்த, இந்­தி­யர்­களுக்கு எதி­ரான இன­வாத சம்­பவங்­க­ளைத் தாண்டி, நாம் ஒன்­றி­ணைந்து சிங்­கப்­பூ­ரைக் கட்­டிக்­காத்­த­தா­க­வும் அவர் சொன்­னார்.

வசதி குறைந்த குடும்­பங்­களுக்கு உத­விய சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கத்­தை­யும் (சிண்டா), பாது­காப்­புக் கட்­டுப்­பாடு­களை நடை­மு­றைப்­ப­டுத்­திய இந்திய அமைப்­பு­க­ளை­யும் சுட்­டிக்­காட்டி, அவற்­றின் பங்­க­ளிப்­பைப் பாராட்­டி­னார் அமைச்­சர்.

அதே வேளை­யில், இன்­னு­மொரு கொவிட்-19 அலையை எதிர்­பார்ப்­ப­தால் குடும்­பங்­கள் அதிக கவ­னத்­து­டன் இருக்க வேண்­டி­யது அவ­சி­யம் என்­றும் அனை­வ­ரும் சுய­ஒழுக்­கத்­து­டன் நடந்­து­கொள்ள வேண்­டும் என்­றும் அவர் வலி­யுறுத்தி­யுள்­ளார்.

உள்­ளூர்க் கலை­ஞர்­க­ளான இயக்கு­நர் கே. ராஜ­கோ­பால், இசை அமைப்­பா­ள­ரு­ம் பாடகருமான சுஷ்மா சோமா, பாட­லா­சி­ரி­யர் ஜெயா ராதா­கி­ருஷ்­ணன் ஆகி­யோர் இணைந்து இந்த இசைக் காணொ­ளி­யைப் படைத்­துள்­ள­னர். நோய்ப்­ப­ர­வ­லி­ல் இ­ருந்து மீண்டு இயல்­பு­நி­லைக்­குத் திரும்­பும் மக்­க­ளுக்­குக் கடந்துவந்த பாதையை நினை­வூட்டு­கிறது இந்த இசைக் காணொளி.

‘சுடரே’ எனத் தொடங்­கும் அப்பாடலை இயற்றிய ஜெயா ராதா­கி­ருஷ்­ணன், “சுடர் என்­பது தீபா­வளிக்கு ஏற்­றும் தீப ஒளியை மட்டு­மின்றி, நம் அனை­வ­ருக்­குள்­ளும் உள்ள நம்­பிக்கை ஒளி­யை­யும் குறிக்­கிறது,” என்­றார்.

‘நம்­பிக்கை ஒளி’ இசைக் காணொ­ளியை யூடி­யூப் தளத்­தி­லும் மக்­கள் செயல் கட்­சி­யின் சமூக ஊட­கங்­க­ளி­லும் காண­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!