இந்திய நடன, கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமிக்கு சிங்கப்பூரின் உயரிய கலாசாரப் பதக்கம்

கலை இயக்குநரும் படைப்பாளருமான 56 வயது அரவிந்த் குமாரசாமிக்கு சிங்கப்பூரின் ஆக உயரிய கலை, இலக்கிய விருதான கலா சாரப் பதக்க விருது வழங்கப்பட்டு உள்ளது. சிங்கப்பூரில் அவரது 35 ஆண்டுகால கலைப்பணியை இவ்விருது அங்கீகரித்தது.

இவ்வாண்டு கலாசாரப் பதக்கம் பெற்ற மற்றொருவர் மேடைக் கலைஞர் திரு கோக் ஹெங் லியூன்.

நேற்று அதிபர் மாளிகையில் நடந்தேறிய விருது வழங்கும் நிகழ்வில், அதிபர் ஹலிமா யாக் கோப் இருவருக்கும் விருதளித்துச் சிறப்பித்தார்.

உள்ளூர் வங்கி மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிய திரு அரவிந்த், 12 ஆண்டுகளுக்கு முன்னர் வேலையை விட்டுவிட்டு, முழு நேரமாக கலைத்துறையில் ஈடுபட முடிவெடுத்தார்.

சிறுவயதிலிருந்து தொடர்ந்த கனவை, மனதுக்குப் பிடித்த ஒன்றில் முழுமையாக ஈடுபடுவதே மிக மகிழ்ச்சியானது என்றார் அவர்.

கடந்த 18 ஆண்டுகளாக அப்சரஸ் ஆர்ட்ஸ் கலை நிறுவனத் தின் கலை இயக்குநராக பணியாற்றி வரும் திரு அரவிந்த், பல்வேறு பாரம்பரிய கலைப் படைப்பு களை உள்ளூரிலும் வெளியூரிலும் அரங்கேற்றியுள்ளார்.

வீணை, நடனம், கர்நாடக இசை ஆகிய கலைகளில் தேர்ச்சிபெற்ற அரவிந்த் இலங்கையில் பிறந்தவர். 1988ல் சிங்கப்பூரில் குடியேறினார். சிங்கப்பூரரான இவருக்கு 1999ல் இளங்கலைஞர் விருது வழங்கப் பட்டது.

இந்திய நடனக் கலைஞர்கள் மாதவி கிருஷ்ணன், நீலா சத்திய லிங்கம், சாந்தா பாஸ்கர் என கலாசார பதக்க விருதினை பெற்ற நடனக்கலைஞர்களின் வரிசையில் இடம்பெறுகிறார் திரு அரவிந்த்.

“சிங்கப்பூரின் கலைச் சூழலுக்கு எங்கள் ஒவ்வொருவரின் பங்கும் வேறுபட்டதாக இருந்துள்ளது. ஒரு கலை இயக்குநராக, ஆண் கலை ஞராக இவ்வரிசையில் இடம்பெறு வதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார் அவர்.

1990ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்திய நடனக்கலைஞருக்கு கலா சாரப் பதக்க விருது வழங்கப்பட்டிருப் பதைச்சுட்டிய திரு அரவிந்த், தனது கலைப்பணி தொடர்வதற்கு விலை மதிப்பில்லாத இவ்விருது பெரிதும் ஊக்குவிப்பதாகவும் கூறினார்.

திரைப் படைப்பு, எழுத்­துப்­ப­ணி­யில் ஆற்­றிய பங்­க­ளிப்­புக்­காக மேடைக் கலை­ஞர் கோக் ஹெங் லியூ­னுக்கு கலா­சாரப் பதக்­கம் வழங்­கிச் சிறப்பிக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரின் ஆக உய­ரிய கலை இலக்­கிய விரு­தான கலா­சாரப் பதக்­கம் 1979ஆம் ஆண்டு முதல், மேடைக்­கலை, ஒவி­யக்­கலை, நட­னம், இசை, இலக்­கி­யம், திரைக் கலை உள்­ளிட்ட கலை இலக்­கி­யத் துறை­களில் தலை­சி­றந்து விளங்கி, அரும்­பணி ஆற்­றி உள்­ளோ­ருக்கு வழங்­கப்­பட்டு வரு­கிறது.

ஒலி வடி­வ­மைப்­பா­ளர் குவோ நிங்க்ரூ, கலை­ஞர் ஹோ ருவை ஆன், கேலிச்­சித்­திர இயக்­கு­நர் ஜெர்­ரோல்ட் சோங், இசை­ய­மைப் ­பா­ளர் ரிட் சூ ஆகிய நால்­வ­ருக்­கும் இந்த ஆண்டு இளம் கலை­ஞர் விருது வழங்­கப்­பட்­டது.

இளம் கலை­ஞர்­க­ளின் படைப்­பாற்­ற­லை­யும் கலை­யார்­வத்­தை­யும் ஊக்­கு­விக்­கும் வண்­ணம் வழங்­கப்­படும் இவ்­வி­ரு­தினை நேற்றைய நிகழ்வில் நால்­வருக்­கும் அளித்து சிறப்பித்தார் கலா­சார, சமூக, இளை­யர்­ துறை அமைச்­ச­ரும் சட்ட இரண்­டாம் அமைச்­ச­ரு­மான எட்­வின் டோங்.

மக்­கள் கழ­கத்­தின் துணைத் தலை­வ­ரு­மான அவர், “கலை­ஞர் களைக் கொண்­டா­டும் கலா­சார பதக்க விரு­தும், இளங்­க­லை­ஞர் விரு­தும் சிங்­கப்­பூ­ரின் தனித்­து­வம் வாய்ந்த கலைச் சூழலை வளர்ப்­ப­தில் தேசிய கலை­கள் மன்­றம் கொண்டு உள்ள கட­மை­யு­ணர்வை பறை­சாற்று கின்­றன,” என்று கூறினார்.

விருது பெற்ற அனை­வ­ரும் சிங்­கப்­பூர் கொடியை உல­க­ள­வில் உயரப் பறக்­க­விட்­டி­ருக்­கின்­ற­னர்,” என்றும் அவர் குறிப்பிட்டார். இவ்­வி­ரு­து­கள் வருங்­கால தலை­மு­றை­யி­ன­ரை­யும் ஊக்குவிக்­கும் என்று நம்­பிக்கை தெரி வித்­தார் அதி­பர் ஹலிமா யாக்கோப்.

SPH Brightcove Video
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!